15.6.11

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு குறி வைக்கும் ஜெயலலிதா !! சிதம்பரம், தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் !!

புதுடில்லி, ஜூன் 14: மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மற்றும் தயாநிதி இருவரும் பதவி விலக வேண்டும் என்று டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெ., நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது வலியுறுத்தினார். முன்னதாக பிரதம‌ரை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக 30 பக்கம் கொண்ட கோரிக்கை மகஜரை அவர் வழங்கினார்.
சந்திப்பிற்கு பின்னர் நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு ‌ஜெ., அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2009 தேர்தலில் முறைகேடு செய்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். இத‌ைனை அ.தி.மு.க., ‌‌தொடர்‌ந்து கூறி வருகிறது. இவர் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். எங்களது கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றார். டேட்டா என்ட்ரி செய்யும் ஆப்ரேட்டர் மூலம் இதி்ல குளறுபடி செய்து விட்டார். அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த பிரச்னை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மோசடி செய்து வெற்றி பெற்று நாட்டை ஏமாற்றியிருக்கிறார் உள்துறை அமைச்சர் சிதம்பரம் . எனவே அவர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி அவரே பதவி விலகியிருக்க வேண்டும் அவர் பதவி விலகாததால் தயாநிதியை, பிரதமர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின்போது அவர்கள் தங்களுக்கு சொத்து சேர்ப்பதிலேயே குறியாக இருந்தனர். குடும்ப ஆட்சியே அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது. விலைவாசி உயர்வு குறித்து அவர்கள் எவ்வித கவலையும் அடையவில்லை என்றார். தி.மு.க.,வினர் மீது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது தி.மு.க.,மீது தாம் எதுவும் கிரிமினல் வழக்கு போட யாருக்‌கும் சிக்னல் கொடுக்கவில்லை என்றார்.