26.7.11

படித்துறை பாண்டிகள் மறுபடி கைது!


வடிவேலு நடித்த கதாபாத்திரமான படித்துறை பாண்டி போல செயல் பட்டு திமுக ஆட்சியில் சினிமாதுறையையே மிரட்டி வந்த சக்சேனாவும் ஐயப்பனும் மறுபடி கைது செய்யப் பட்டுள்ளனர்!    "சிந்தனை செய்' படத்திற்கு கிராபிக்ஸ் தயார் செய்த அருள்மூர்த்தியை மிரட்டிய வழக்கில், சக்சேனாவை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, எழும்பூர் கோர்ட் அனுமதியளித்துள்ளது.சென்னை, விருகம்பாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர் அருள் மூர்த்தி; நுங்கம்பாக்கத்தில் "டிஜிட்டல் மேஜிக் விஷன்' என்ற பெயரில், திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகள் செய்து கொடுத்து வந்தார். இந்நிலையில், ஆர்.எம்.ஏ., பிலிம் பேக்டரி நிறுவனத்தை நடத்தி வரும், தயாரிப்பாளர் அம்மா ராஜசேகர், "சிந்தனை செய்' என்ற படத்தை, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்து, "சன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு விற்பனை செய்தார்.இந்தப் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் அனைத்தையும் செய்வதற்கு அருள்மூர்த்தியிடம், 22 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக, பல தவணைகளாக 11 லட்ச ரூபாய் தரப்பட்டது. கிராபிக்ஸ் பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள 11 லட்ச ரூபாயை தயாரிப்பாளர் அம்மா ராஜசேகரிடம், அருள் மூர்த்தி கேட்டுள்ளார்.தொடர்ந்து, கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி, நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம் தியேட்டருக்கு பிலிமுடன் வந்தால், ஆறு லட்ச ரூபாய் தருவதாக அருள் மூர்த்தியிடம், அம்மா ராஜசேகர் கூறியுள்ளார்.இதை நம்பி அங்கு சென்ற அருள் மூர்த்தியிடம், ஆறு லட்ச ரூபாய்க்கான இரண்டு, "செக்'குகள் கொடுக்கப்பட்டன. மீதமுள்ள பணத்தை அருள் மூர்த்தி கேட்ட போது, பிலிமை வாங்கிக் கொண்ட அம்மா ராஜசேகர், "சன் பிக்சர்ஸ்' ஹன்ஸ்ராஜ் சக்சேனா, ஐயப்பன் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தற்போது ஆட்சி மாற்றம் எற்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து, நுங்கம்பாக்கம் போலீசில் அருள் மூர்த்தி புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதியப்பட்டு, அம்மா ராஜசேகர், சக்சேனா மற்றும் ஐயப்பனை போலீசார் கைது செய்தனர்.இதில், சக்சேனா, ஐயப்பனை, தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க, எழும்பூர் கோர்ட்டில் நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி கேட்டனர். இதற்காக, சக்சேனா மற்றும் ஐயப்பன் இருவரும் எழும்பூர் கோர்ட்டிற்கு கொண்டு வரப்பட்டனர். இது தொடர்பான வழக்கு, எழும்பூர் 14 வது கோர்ட் மாஜிஸ்திரேட் கீதாராணி முன், விசாரணைக்கு வந்தது.மனு மீதான விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இரண்டு நாட்கள் அதாவது புதன் கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாஜிஸ்திரேட், கீதாராணி உத்தரவிட்டார். திமுக ஆட்சியில் இந்த டுபாக்கூர் பேர்வழிகள் செய்த அட்டூழியங்களை கண்டுகொள்ளாமல் இருந்த திமுக தலைமை இப்போது அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுவது திரையலக வட்டாரத்தில் திமுக மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது!  

25.7.11

ராஜா கைய வச்சா ராங்கா போகுதே...
இலங்கையின் இனப் படுகொலை வீடியோவைப் பார்த்து சந்திரிகா கண்ணீர்!!


கொழும்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பாலகிருஷ்ணரின் நினைவுப் பேருரையில் உரையாற்றிய இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தனது உரையின் இறுதிக்கட்டத்தின்போது கண் கலங்கியதுடன் தழுதழுத்த குரலில் உரையாற்றியதாக அந்த நாட்டின் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பாக தனது உரையில் சுட்டிக்காட்டிய சந்திரிகா, உரையின் இறுதிப் பகுதியில் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இலங்கையின் கொலைக்களம் என்ற விடியோ தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
இந்த விடியோவை பிரிட்டன் தொலைக்காட்சியில் பார்த்த 28 வயதான தனது மகன், தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக அழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார். மேலும் தனது மகளும் இவ்வாறே தெரிவித்தார் என்று அவர் கூறினார். இதைக்கூறும்போது கண் கலங்கிய முன்னாள் அதிபர் சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் தூதர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமூகங்களையும் சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி என்ற தலைப்பில் சந்திரிகா இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24.7.11

நித்யானந்தா பேட்டி - வீடியோ

சென்னையில் நித்யானந்தா சன் டிவியையும் தினகரனையும் நக்கீரனையும் தாக்கி ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.. அதன் முழு வீடியோ கீழே(in 8 parts):

இதைத் தொடர்ந்து நித்யானந்தாவை நக்கலடித்து யூ ட்யூபில் நிறைய வீடியோ பதிவுகள்! அவற்றிலிருந்து ஒன்று...

21.7.11

நில அபகரிப்பு-மோசடி, கொலை மிரட்டல் வழக்கு!! கோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனு!


சேலம் அங்கம்மாள் காலனி நில ஆக்கிரமிப்பு உட்பட 

இரண்டு வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மனு தாக்கல் செய்துள்ளார். 
சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அங்கம்மாள் காலனியில், 22,263 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை சீனிவாச குப்தா, 1959ல் தானமாக வழங்கினார். அதில், 30 குடும்பத்தினர் குடியிருந்து வந்தனர்.
கடந்த 2008 ஜன., 19ம் தேதியன்று, ரவுடிகள் சிலர் அந்த நிலத்தில் குடிசை போட்டு அமர்ந்தனர். போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. பிப்ரவரி 8ம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து, வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டன. அங்கம்மாள் காலனி மக்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும், தானமாகக் கொடுத்த நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டது. ஆனால், வீரபாண்டி ஆறுமுகம் கட்டளையால், நீதிமன்ற உத்தரவும் புறக்கணிக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த கணேசன், சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மீண்டும் புகார் கொடுத்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் கிருஷ்ணசாமி, உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள், முன்னாள் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி ஆகிய 13 பேர் மீது, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணசாமி, கனகராஜ், ஆட்டோ முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 10 பேர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சென்னையில் முகாமிட்டுள்ளார்.
போலீசார் தன்னை கைது செய்யும் முன், முன் ஜாமின் பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தலைமையில், 23 குடும்பத்தினர் புகார் மனு ஒன்றை வழங்கினர். இந்த மனுவில், தங்களது நிலத்தை அபகரித்துள்ள 13 பேரில், 10 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் அவர்களால் எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தெரிவித்தனர்.
கமிஷனர் சொக்கலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, அங்கம்மாள் காலனி மக்கள் மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். அத்துடன், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 10 பேரை கைது செய்வதற்காக, சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில், 12 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்களின் விசாரணை நடவடிக்கைகள் குறித்து, உதவி கமிஷனர்கள் மேற்பார்வையிடுவர். விசாரணை நலன் கருதி, குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் முழு விவரத்தையும் தெரிவிக்க இயலாது. போலீஸ் தனிப்படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்வோம். இவ்வாறு சொக்கலிங்கம் கூறினார்.
போலீசார் பாரபட்ச நடவடிக்கை : சேலம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரின் மகன் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா மீது, நிலம் அபகரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், மற்றொரு பிரச்னையில், இதே பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் பாரபட்ச நடவடிக்கை, மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
முன்ஜாமின் கேட்டு மனு : 
வீரபாண்டி ஆறுமுகம் தாக்கல் செய்த மனு: கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உள்ளேன். தி.மு.க.,வில் முக்கிய தலைவராக உள்ளேன். எனக்கு எதிராக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூன்று முறை அமைச்சராக பதவி வகித்துள்ளேன். தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல்வராக ஜெயலலிதா வரும் போதெல்லாம், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையை அவர் எடுப்பது வழக்கம்.
தி.மு.க.,வினர், அதன் தலைவர்களுக்கு எதிராக நில அபகரிப்பு புகார்களை வரவேற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்துவதாகவும் முதல்வர் அறிவித்தார். பொய் வழக்குகளை தொடுப்பதன் மூலம், எதிர்க்கட்சியினரின் குரலை நெரிக்க முடியும் என கருதுகின்றனர்.
சொத்து மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதால், குறைவான விலைக்கு விற்றவர்கள், முதல்வரின் அறிவிப்பை பார்த்து பொய் புகார்களை அளிக்கின்றனர். அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்ளும் விதமாக, சில ஆண்டுகளாக நடந்த பரிவர்த்தனையில், தி.மு.க.,வினருக்கு எதிராக புகார்களை அளிக்க போலீசார் தூண்டுகின்றனர்.
என் மீதான புகாரில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. முதல்வரை திருப்திபடுத்துவதற்காக, என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றேன். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், 23 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் செயல்பட்டதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கிலும் முன்ஜாமின் கோரி, ஐகோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகம் மனு தாக்கல் செய்துள்ளார்

15.7.11

பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்!!

காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார்.

"பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்'' என்றார் காமராஜர் .  

தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர்,  சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால் விருதுநகர் அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது . 
காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். என்.ஆர். தியாகராஜன்,எம்.எல்.ஏ.,  முதல்வர் காமராஜரிடம், ""ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார். 
யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார். 
எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார்.  "பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார் காமராஜர். 

கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது. 
காமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம்.
நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். அதிகாரிகளை அழைக்கும் போது "ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர். 
பிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,""காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்,'' என, குறிப்பிட்டார். 


வீட்டின் முன் அறையில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார் காமராஜர். அப்போது இளைஞர் ஒருவர், அவர் உள்ளே வந்தார்.  கனகவேல் என்ற அந்த இளைஞர் காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப்பேரன்..!
" எப்படியிருக்க.."' என காமராஜர் கேட்டதும்   "நல்லா இருக்கேன் தாத்தா... எம்.பி.பி.எஸ்., படிக்க அப்ளிகேஷன் போட்டேன். இன்டர்வியூ நடந்துச்சு... நீங்க ஒரு வார்த்தை சொன்னா, இடம் கிடைச்சிடும். லிஸ்ட் தயாராகறதுக்குள்ள சொல்லிட்டீங்கன்னா, நான் டாக்டராகிவிடுவேன்' என்றார் கனகவேல். தன் கையில் வைத்திருந்த காகிதத்தை, உரிமையோடு நீட்டினார்! வாங்கிப் படித்த காமராஜரின் கருத்த முகம் லேசாக சிவந்தது!  அதில் அந்த இளைஞரின் விலாசமாக "மே/பா காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப் பிள்ளை வீதி, சென்னை' என்று எழுதப் பட்டிருந்தது.
"என் பேரை எதுக்கு எழுதினே..." காமராஜரின் குரலில் கடுங்கோபம்!! 
"இல்லை தாத்தா... மெட்ராஸ் முகவரி கேட்டாங்க... எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது. அதனால, இந்த முகவரியைக் கொடுத்திட்டேன்' என்றார் கனகவேல். உடனே காமராஜர் ஆவேசமாக " இந்தா நல்லக் கேட்டுக்க.... டாக்டர் படிப்பு, இன்ஜினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கு. அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாருக்கும் பொதுவா கமிட்டி அமைச்சிட்டு, இவனுக்கு சீட் கொடு... அவனுக்கு சீட் கொடுன்னு சொன்னா, கமிட்டியே அமைக்க வேண்டியது இல்லையே. இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொன்னா, உனக்கு இடம் கிடைக்கும். கிடைக்கலேன்னா, கோயம்புத்தூர்லே பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப் படி. அந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. என்னால சிபாரிசு எல்லாம் பண்ண முடியாது' என்று பதில் சொல்லி அனுப்பினார். கடைசியில் கனகவேலுக்கு, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. அது அந்தக் காலம்...!

9.7.11

சூரப் புலி

 இதுவரை யாரும் விளையாடாத, அதேவேளை சுவாரசியமான போட்டி இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் கிரகெம் பீட்டர் சுவனுக்கும் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் இடையில் இடம்பெற்து.  விக்கெட்டின் மேல் ஒரு கிளாசை நிற்கவைத்து அதன் மேல் ஒரு நாணயத்தை வைத்து தனது அபார பந்து வீச்சினால் நாணயத்தை மட்டும் வீழ்த்தியுள்ளார் முரளி... 
இங்கே முரளியின் அசாத்திய திறமையை நீங்களும் கண்டு களியுங்கள்...

5.7.11

NÁ ‘eNŸÍ NeÚN]ÖÛY ÚTÖ§Í LÖY¦¥ «NÖ¡eL ÚLÖŸyz¥ UÄ

ஜூலை, 5.  

ÚNX†ÛR ÚNŸ‹RYŸ ÙN¥YWÖÇ. CYŸ pÂUÖ «ÂÚVÖLÍRŸ. ``ˆWÖR «Û[VÖy|ப் ‘·Û['' GÁ\ ‡ÛWTP†‡Á ÚNX• Th‡ «ÂÚVÖL E¡ÛUÛV R£YRÖL i½ NÁ ‘eNŸÍ RÛXÛU ŒŸYÖf NeÚN]Ö ¤.11/4 ÚLÖz YÖjfVRÖL°•, TQ†ÛR ‡£ப்‘ ÚLyPÚTÖ‰ NeÚN]Ö –WyzVRÖL°• ÙN¥YWÖÇ ÚTÖ§p¥ “LÖŸ ÙLÖ|†RÖŸ. C‹R “LÖ¡Á ÚT¡¥ ÚTÖ§NÖŸ YZeh T‡° ÙNš‰ NÁ ‘eNŸÍ RÛXÛU ŒŸYÖf NeÚN]ÖÛY ÛL‰ ÙNš‰ pÛ\›¥ AÛP†R]Ÿ.  C‹R YZef¥, NeÚN]Ö«P• «NÖWÛQ SP†R வேண்டி E·[RÖ¥ AYÛW 5 SÖ· ÚTÖ§Í LÖY¦¥ ÛY†‰ «NÖ¡eL AÄU‡ ÚLÖ¡ ÚTÖ§Í RW‘¥ AWr Yeg¥ ÚU¡ Ù^V‹‡ ÚLÖŸyz¥ UÄ RÖeL¥ ÙNšRÖŸ. 
C‹R UÄ —RÖ] «NÖWÛQ CÁ¿ (ÙNªYÖšfZÛU) ÛNR֐ÚTyÛP ÙT£SLW 23-Y‰ ÚLÖŸyz¥ Y£• GÁ¿ ÚTÖ§NÖŸ ÙR¡«†R]Ÿ. CR]Ö¥ NeÚN]Ö CÁ¿ ÚLÖŸyz¥ B^Ÿ T|†Rப் T|f\ÖŸ. 
NÁ ‘eNŸÍ ŒŸYÖf NeÚN]Ö ÛL‰ ÙNšVTyP‰ ÙRÖPŸTÖL TPA‡TŸL· ‡ÛWTP YŸ†RL NÛT AWjf¥ ÚS¼¿ iz BÚXÖNÛ] SP†‡]ÖŸL·. CÛR†ÙRÖPŸ‹‰ ÙY¸›PTy|·[ A½eÛL›¥ i½›£ப்TRÖY‰:-

LP‹R 5 Bண்|L[ÖL NjL TR«ÛV ˜Û\ÚLPÖL ‘z†RYŸL·, RVÖ¡ப்TÖ[ŸL· SXÛ] LÖeL†RY½ h½‘yP ÚN]¥L¸Á SXÂ¥ AeLÛ\ ÙN¨†‡ R–² ‡ÛWTP ‰Û\›]¡Á TXÚLÖz ¤TÖš SÐP†‡¼h LÖWQUÖ]Y£•, RVÖ¡ப்TÖ[ŸL·, «ÂÚVÖLÍRŸL·, ‡ÛWVWjL E¡ÛUVÖ[ŸLÛ[• Ytp†RY£UÖ] NÁ z.«. RÛXÛU ŒŸYÖf NeÚN]ÖÛY ÛL‰ ÙNšRRÁ ™X• R–²† ‡ÛW EXL• rR‹‡W LÖ¼Û\ rYÖpeL ÙNšR ˜R¥YŸ Ù^VX¦RÖ°eh ÚLÖPÖÄÚLÖz SÁ½.


முந்தய செய்தி !!
சேலத்தை சேர்ந்த டி.எஸ். செல்வராஜ், கந்தன் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா விநியோக நிறுவனம் நடத்தி வருகிறார்.சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சினிமா வினியோகஸ்தரான என்னை சன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை வாங்கும்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்னை வற்புறுத்தினார்.

அதன் பேரில் ரூ.1 1/2 கோடி கடன் வாங்கி கொடுத்து அந்த படத்தின் வினியோக உரிமையை வாங்கினேன். ஆனால் அந்த படத்தை சக்சேனாவே சேலம் பகுதியில் வெளியிட்டு விட்டார். நான் கொடுத்த ரூ.1 1/2 கோடி பணத்தையும் திருப்பி தரவில்லை.

அந்த படத்திற்கு வசூலான 83 லட்சத்து 53 ஆயிரத்து 374 ரூபாயை தரும்படி கேட்டேன். ஆனால் சக்சேனா பணத்தை தராமல் இழுத்தடித்தார். இதுபற்றி கடந்த ஜனவரி மாதம் கேட்ட போது என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

இந்த புகார் மீது சென்னை கே.கே.நகர் போலீசார் கடந்த 1-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். நேற்றிரவு அவர் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த போது விமானநிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்திய சட்டப்பிரிவு 406 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 385 (ஏமாற்றுதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சக்சேனாவை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்