18.8.11

எல்லாமே அரசியல்தான்! குப்பை நகரமாகிறது சென்னை..

சென்னையில் குப்பை அகற்றும் காண்ட்ராக்ட் இன்னும் மூன்று மாதத்தில் முடிவடிவதால் "நீல்மெடல் பனால்கா" நிறுவனம் அறிவிக்கப் படாத வேலை நிறுத்தம் செய்கிறது .. குப்பைகளை அகற்றுவதில்லை! வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் காசு பெற்றுக் கொண்டு குப்பைகளை வாகனங்களின் மூலம் பெற்றுக் கொண்டு போகும் "நீல்மெடல் பனால்கா" ஊழியர்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் வரும் குப்பைகளை அகற்றுவதில்லை! 
சென்னை தி நகரில் உள்ள நமது குடியிருப்பு வளாகத்தில் நான்கு நாட்களாக (மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை தகவல் தெரிவித்தும்)  குப்பைகளை அகற்ற மறுத்த "நீல்மெடல்" ஊழியரிடம் கேட்ட போது "எங்களுக்கு மேலே உள்ளவர்கள் சொல்வதைத்தான் நாங்கள் கேட்கிறோம்..நீ யாரிடம் வேண்டுமானால் புகார் செஞ்சுக்கோ" என்கின்றார்!.. 
"இப்படி எல்லாம் பேச வேண்டாம் !  எங்களுடைய புகாரின் மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும்.." என்றோம்!
"அப்படியா..நீ பெரிய ஜட்ஜா இரு..மந்திரியா இரு..குப்பை எடுக்க முடியாதுன்னா முடியாதுதான்!..பெரிய ஜட்ஜ் இவரு.. கிளிச்சுரப் போறாரு.." என்று வசவுகளை அள்ளித் தெளித்து விட்டு போனார் அந்த ஆசாமி! வாகனத்தின் எண்ணை பார்த்த போது 2262 என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது! மற்றதெல்லாம் அழிந்து அல்லது மறைக்கப் பட்டு இருந்தது..      சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம்  கேட்டால் அவர்கள் மழுப்புகிறார்கள்!  என்னதான் நடக்கிறது சென்னை மாநகராட்சியில்..?