18.8.11

சாலை ஆக்கிரமிப்புக்கு எம்எல்ஏ ஆதரவு! !! முப்பது லட்சம் கை மாறியதா?


என் வழி  திமுக வழி...
என்கிறாரோ கலைராஜன்! 
தி நகர் ராமேஸ்வரம் சாலையில் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப் பட்ட கடைகள் மறுபடி முளைத்து ஜகஜோராக நடைபெற்று வருகின்றன! ஆக்கிரமிப்பு கடைகளுக்கு ஆதரவாக திநகர் எம் எல் ஏ கலைராஜன் பெயர் அடிபடுகிறது! திநகரைச் சேர்ந்த சண்முகராஜ் என்ற நபர் மூலம் முப்பது லட்சம் ரூபாய் லஞ்சமாக கலைராஜனுக்கு தரப் பட்டதாக பேசப் படுகிறது! இது தொடர்பாக விசாரிப்பதற்காக கலைராஜனைத் தேடி அவர் வீட்டிக்கு சென்றோம்!! அங்கிருந்த அவருடைய உதவியாளர் "சட்டமன்றக் கூட்டம் நடப்பதால் இப்போது உங்களால் அவரைப் பார்க்க முடியாது!!  அவரே உங்களைத் தொடர்பு கொள்வார்!!"  என்றார்! 
இரண்டு நாட்களாகியும் கலைராஜனிடமிருந்து எந்த பதிலும் வராததால், சம்பந்தப் பட்ட பகுதியின் மாநராட்சி அதிகாரிகள், சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோரிடம் விசாரித்தோம்! "ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப் படும்"  என்பதைத் தவிர அவர்களால் வேறு எதையும் பேச முடியவில்லை! மாநகராட்சி  வட்டாரங்களில் விசாரித்தோம்! 
கலைராஜனுக்கு 30௦ லட்சம், சண்முகராஜுக்கு 10௦ லட்சம் என்று நம்மை அதிர்ச்சியடைய  வைக்கும் தகவல்கள் அங்கே உலவுகின்றன! மாநகராட்சி அதிகாரிகள் பம்முவதைப் பார்த்தால் நம் சந்தேகம் அதிகமாகிறது.. ஆயினும் காத்திருக்கிறோம்..கலைராஜனின் பதிலுக்காக..மாநகராட்சியின் நடவடிக்கைக்காக......!!