29.9.11

அடுத்தவன் சொத்தை அபகரிக்கிறதுன்னா....

ங்கொய்யால..
சந்தோசமா செய்யுறாங்கப்பா.
நில அபகரிப்பு, துப்பாக்கிச்சூடு, கலவரம், பற்றி எழுதிய எழுதிவரும் புண்ணியவான்ககள் குமுதம் பத்திரிகை அபகரிப்பு பற்றி எழுதாமல் மவுனம் காப்பதுஏன்? என்ற கேள்வி தராசுக்கு வந்திருக்கிறது!  நாமும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்! 
"குமுதம் அலுவலகத்தில் நிலவரம் நிஜமாகவே கலவரமாமே..செல்போன் ஜாமர்..பத்தடிக்கு பத்தடி தூரத்தில் அடையாளம் தெரியாத நபர்களெல்லாம் அடையாள அட்டை கேட்டு சோதனை..என்று தூள் பறக்கிறதாமே.. அடுத்தவன் சொத்தை அபகரிக்கிறதுன்னா..ங்கொய்யால..சந்தோசமா செய்யுறாங்கப்பா.." என்று கவலைப் படும் வாசகர்களே..அஞ்சற்க...நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!  --முழு விபரங்களுடன் தராசு இணைய தளத்தில் விரைவில் வரும்!! 


இது தொடர்பான  தகவல்களை  tharasunews@gmail.com   என்ற முகவரிக்கு அனுப்பவும்!!   உரிய விசாரணைக்குப் பின் அவை வெளிவரும் 

தகவல் தருபவர்கள் பயப் படவேண்டாம்!! ரகசியம் காக்கப் படும்! 

28.9.11

சக்சேனாவுக்கு சன் டிவி டாட்டா அல்லது சன் டிவிக்கு சக்சேனா டாட்டா..??


சென்னை, செப் 28. : 
 சன் டிவியிலும் சன் குழுமத்தின் திரைப்படப் பிரிவிலும் பொறுப்பாளராக பதவி வகித்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. கடந்த பல ஆண்டுகளாக இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய புகார்கள் சினிமா வட்டாரத்தில் உலா வந்தன!! ஆனால் அவை சட்டப்படி பதியப் படாமல் அதிகாரவட்டாரம் இவரைக் காத்து வந்ததாக சொல்லப் பட்டது!!  தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார்.
 பல பிரச்னைகள் கலாநிதி மாறனின் கவனத்துக்கு தெரியாமலே நடந்ததாக கூறப் படுகிறது!! கைதுக்குக்குப்  பிறகு விசயங்களை விசாரித்து அதிர்ச்சியடைந்த சன் குழும நிர்வாகம் இவரை பதவியிலிருந்து விலகும் படி கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப் பட்டது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தற்காலிமாக செம்பியன் என்பவரை சிஇஓவாக நியமித்தது. அவர் மூலம் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை வாரிக் குவித்தது. தற்போது வெடி என்ற படத்தையும் வெளியிட உள்ளது. 
இதனைத் தொடர்ந்து சக்சேனா சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனை தொடர்பு கொண்டு தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்திற்கு எந்தவித கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் சன் குழுமத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தையும் கலாநிதிமாறனுக்கு அனுப்பி வைத்துள்ளார். கலாநிதிமாறன் அக்கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என சக்சேனாவின் வழக்கறிஞர் சொல்கிறார்!!

இது எப்படி இருக்கு?

சிதம்பர ரகசியம்னாங்க!! இதுதானா அது...?

27.9.11

பாலா பஞ்ச் 270911

உள்ளாட்சித் தேர்தல் -- தேமுதிக மார்க்சிஸ்ட் கூட்டணி 

''நான் மனித நேயம் உள்ளவன், மனிதாபிமானம் உள்ளவன். ஆனால் ஸ்பெக்ட்ரம்' வழக்கு முடியும் வரை, சோனியாவை சந்திக்கமாட்டேன்" - பெரியவர் கருணாநிதி!!
சென்னை, செப்.27 :
சென்னை அறிவாலயத்தில், நேற்று திமுக தலைவர் கருணாநிதி, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்!! அப்போது அவர் கூறியதாவது:

ராஜா, கனிமொழி மீது டில்லி சிறப்பு கோர்ட்டில் புதிய குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?
இந்த கேள்வியை கேட்கும் நீங்கள் அதே கோர்ட்டில் கனிமொழி மீதான விசாரணை முடிந்து விட்டது என்றும் ஜாமினில் விடுவதற்கு ஆட்சேபணை  இல்லை என்றும் சொல்லியிருக்கின்றனரே, அதைப்பற்றி கேட்கவில்லையே?
சி.பி.ஐ.,யின் இந்த நடவடிக்கைக்குப் பின்னும் , கனிமொழிக்கு விரைவில் ஜாமின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? 

கிடைக்க வேண்டுமென்று தான் முயற்சிக்கிறோம்.
ப.சிதம்பரத்திற்கு இந்த வழக்கில் சம்பந்தம் இருக்கும் என நினைக்கிறீர்களா?
சிதம்பரம் மீது முழு நம்பிக்கை உள்ளதாக வெளிநாட்டிலிருந்த பிரதமரே சொல்லியிருக்கிறார்.
சிதம்பரத்தை பாதுகாக்கும் அளவிற்கு, ராஜாவை பாதுகாக்கவில்லை என்ற வருத்தம் ஐ.மு., கூட்டணி அரசு மீது உங்களுக்கு உள்ளதா? 

அரசியலில் வருத்தப்படவோ, மகிழ்ச்சி அடையவோ, இதுபோன்ற நிகழ்வுகளை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்து உள்ளாரே?                                                      அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்தபின் நாடு திரும்பியுள்ளார். அவரை மனிதாபிமானத்தோடு உடல்நலம் விசாரிப்பது பற்றிய யூகங்களுக்கு இடமில்லை.


 சோனியாவை சந்திக்க டில்லி செல்வீர்களா?

நான் இந்த வழக்குக்காகவே கோர்ட்டிற்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது சென்றால் பத்திரிகைக்காரர்களாகிய நீங்கள் எல்லாம் சும்மாயிருக்க மாட்டீர்கள். உங்கள் கற்பனைக் குதிரையை எப்படி வேண்டுமானாலும் ஓடவிட்டு விடுவீர்கள். அதனால் தான், இந்த வழக்கு முடிந்த பின் டில்லி சென்று சோனியாவை நிச்சயமாகச் சந்திப்பேன். நான் மனித நேயம் உள்ளவன், மனிதாபிமானம் உள்ளவன். தோழமைக் கட்சியின் தலைவரை எந்தளவிற்கு மதிக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவன்.
இவ்வாறு பெரியவர் கருணாநிதி கூறினார். மனிதாபிமானம் உள்ளவர் உடனே உடல் நலம் விசாரிக்கப் போகாமல் வழக்கு முடிந்ததும்   போய்ப் பார்ப்பததாகக் கூறுவது மகளுக்கு ஜாமீன் கிடைத்தால்தான் வருவேன் என்று மிரட்டுவதற்கு சமமாகாதா?

4.9.11

நாராயணா...நாராயணா... தலை சுத்துது நாராயணா!!


புதுடில்லி, செப் 4: மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லியை நாடு கடத்தி கொண்டுவர இந்தியாவுக்கு  ஆர்வமில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக ‌செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட்கோல்மென் ஹெட்லி மீது அமெரிக்க கோர்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய இணையதளமான விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 
அதில் மும்பை தாக்குதலில் லஷ்கர் தொய்பா அமைப்புக்கு உதவியதாக ஹெட்லி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை அமெரிக்க கோர்டில் நடந்துவருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதியன்று இது குறித்து இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இருந்த திமோதி ரோமர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.‌கே. நராயணனிடம் தெரிவித்தார். அதற்கு நாராயணன் ஹெட்லியை மும்பை தாக்குதல் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வர ஆர்வமில்லை. இந்த நேரத்தில் ஹெட்லியை நாடு கடத்தி வருவது கடினம் தான். பெரும் சிக்கல் ஏற்படும் என கூறினார். இவ்வாறு விக்கீலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்துள்ள எம் கே நாராயணன், விக்கீலீக்ஸ் தகவல் குறித்து அமெரிக்காவிடம் தான் கேட்க வேண்டும். ஹெட்லியை நாடு கடத்தி கொண்டு வருவதில் தீவரமாக இருந்தோம். அதிகாரிகளுக்கு மத்தியிலான் பேச்சுக்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஹெட்லியை நாடு கடத்துவதில் இந்தியா ஆர்வமாக இருந்தது. தீவிரமாக செயல்பட்டோம் என கூறினார். அப்ப..அந்த பேச்சு.. சும்மா.. உள்..உள்ளுலாயியா..??

தீபம் திருமலைக்கு பாராட்டு விழா


குடந்தை கீதப்ரியன், வானதி ராமநாதன்,விஜயா வேலாயுதம், திருப்பூர் கிருஷ்ணன், ஆர்.நடராஜன், தீபம் திருமலை, ஏ.நடராஜன், நாஞ்சில் நாடன், கௌதம நீலாம்பரன்
முதுபெரும் பத்திரிகையாளரான தீபம் திருமலைக்கு அவருடைய 50௦ ஆண்டு கால இலக்கிய சேவையை பாராட்டும் விதமாக சென்னையில் இன்று விழா நடந்தது. சென்னையில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம், எழுத்தாளர்கள் ஏ.நடராஜன், ஆர்.நடராஜன்,திருப்பூர் கிருஷ்ணன்,நாஞ்சில் நாடன், குடந்தை கீதப்ரியன், கௌதம நீலாம்பரன், குறிஞ்சி வேலன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்!  இந்த விழாவில் தராசு ஆசிரியர் விக்னேஸ்ராஜ்,  தினமணி கதிர் பொறுப்பாசிரியர் பாவை சந்திரன், வானதி பதிப்பகம் ராமநாதன்,தமிழன் தொலைக்காட்சி நா.பாண்டியன், கவிஞர் ஜெயபாஸ்கரன், துரை. ராமச்சந்திரன்,ஓவியர் டிராட்ஸ்கி மருது, ஞான ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இலக்கிய உலகில் அவருடைய பங்களிப்பை பாராட்டி, விழாவின்போது தீபம் திருமலைக்கு ரூபாய் இரண்டு லட்சம் பணமுடிப்பு வழங்கப் பட்டது! விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு திருமலை புத்தகம் ஒன்றை அளித்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்!                 

ஆரம்பிச்சுட்டாங்கய்யா!.ஆரம்பிச்சுட்டாங்க!

அதிமுக எம் எல் ஏ க்களும் அட்டகாசத்தை ஆரம்பிச்சுட்டாங்க, தெரியுமில்ல ?  கவுன்சிலர் சீட்.. வேணுமா எடு 15 லட்சத்தை என்று சீட் கேட்பவர்களிடம் வெளிப்படையாகவே கேட்கிறார்களாம்! அப்ப உளவுத்துறை..? அந்தந்த நபர்களுக்கு அப்பப்போ கட்டிங் வெட்டிராங்கல்லே?   இப்படி அரசின் உளவுத் துறையை நம்பித்தான் போனமுறை பெருசு கோயிந்தா ஆச்சு!!   

--இது சென்னை நிலவரம்..வெளியூர் தகவல்களை விசாரிச்சுட்டிருக்கேன்..