15.10.11

கனம் கோர்ட்டார் அவர்களே..!!!

வன்முறையைப் படம் எடுத்த பத்திரிகையாளர்கள் மீது கோவை வக்கீல்கள் தாக்குதல்!

"அட போப்பா.... இது என்ன புதுசா?  வக்கீல்கள் என்னவும் செய்யலாம்.. பஸ்ஸில கண்டக்டர்கூட தகராறுன்னா அவரை அடிப்போம்! ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தவர்களை கார் ஏற்றிக் கொல்ல  முயன்றவர்கள் மீது போலீஸ் வழக்குப் போட்டால் அவர்களையும் அடிப்போம்! குடிச்சுட்டு கோர்ட்டுக்குள்ளேயே கலாட்டா செய்வோம்! அதைச் சுட்டிக் காட்டினால் அவர்களையும் அடிப்போம்! சாலையில் காரில் போகிற பொதுமக்களையும் தாக்குவோம்! அதை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது! படம் எடுக்கவும் கூடாது.. படம் எடுத்தால் அடிப்போம்..உதைப்போம்!  மீறி யாராவது நீதிபதி விசாரித்தால் அவரையும் சேம்பருக்குள் புகுந்து தாக்குவோம்! இதெல்லாம் நடந்தும் யாரும் எங்களை ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரியலே? நீதிபதிகிட்ட மட்டும் கொஞ்ச நாட்களுக்குள் சமாதானமாகி விடுவோம்!!" 
என்று உலவுகிற வக்கீல்களைப் பார்த்து ஒரே ஒரு கமென்ட் :  
-------நல்லாருக்குடா உங்க நியாயம்..!!

11.10.11

என் பெயர் விக்னேஸ்ராஜ் !! எனக்கு முகமூடி இல்லை!!...நான், நான்தான்!!

தொலை பேசியில் அழைத்த தோழர் கேட்டார் : நீங்கள் தான் கலகக் குரலா?. 
---- FB யில் அந்த பிளாக்கின் லிங்கை வேறு ஒரு பத்திரிகையாளருக்கு அனுப்பியிருந்ததை வைத்து அவருக்கு அந்த சந்தேகமாம்! என்னைப் பற்றி தெரியாததால் வந்த சந்தேகம்!!.. இதுவரை யாருடைய முதுகுக்குப் பின்னாலும் நான் ஒளிந்து கொண்டதில்லை ! வேறு முகமூடி அணிந்து கொண்டு நான் அவனில்லை என்றும் சொன்னதில்லை!! குமுதம் விவகாரத்தில் ஜவஹர் பழனியப்பன் பக்கமதான் நியாயம் என்று நான் நம்புவதை பகிரங்கமாகவே தராசில் எழுதிய பிறகு எதற்காக பிளாக்கில் எழுதவேண்டும்? தவிரவும் கலகக்குரலின் மொழிநடையில் எனக்கு உடன்பாடில்லை..அதே வேளையில் ஜவஹர் பக்கம்தான் நியாயம் என்று நான் நம்புவதையும் உறுதியாகச் சொல்வேன்.. என் குரல் எப்போதும் உண்மையின் குரலாக இருக்குமேயன்றி "கழ(ல)கத்தின்" குரலாக இருக்காது!! நான், நான்தான்!!


மேலே உள்ள படம் ஒரு இணையத்தில் குமுதம் பப்ளிகேசன் அங்கீகாரத்துடன் 2009 -ம் ஆண்டு வெளி வந்தது..அப்போது குமுதத்தின் சேர்மனாக இருந்தவர் கோதை ஆச்சி!! இப்போது வரதராசன் எப்படி சேர்மன் ஆனார்? இந்த மாற்றம் அல்லது கபளீகரம் சட்ட ரீதியாக செல்லுபடியாகுமா?  இதுவும் என் சந்தேகம்!!    
  பத்திரிகையில் FDI (Foreign Direct Investment ) அந்நிய நேரடி முதலீட்டுக்கு என கட்டுப்பாடு உண்டு!! ஆனால் குமுதம் ஜவஹர் பழனியப்பனைப் பொறுத்தவரையில் அவருடைய பங்குகள் அவருடைய தந்தை எஸ் ஏ பி அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு வாரிசுரிமைப் படி மாறிவந்திருக்க வேண்டும்.!! தவிர ஜவஹர் dual citizenship வைத்திருந்தால் FDI கட்டுப் பாடு பொருந்துமா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்!! இது என் சந்தேகம்!
வரதராஜன் 

5.10.11

ஜெயலலிதாவின் கவனத்திற்கு!!

நமது எம்ஜிஆர் வெளியிட மறுத்த விளம்பரங்கள் இங்கே....
4.10.11

ஜெயலலிதாவுக்கு இது தெரியுமா..??

வேறு எதற்கோ வரைந்த  தினமணி கார்டூன் இங்கே...


குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்பரப் பிரிவு, ஜவஹர் பழனியப்பன் கொடுத்த விளம்பரத்தை வெளியிடாமல் மேலிட அனுமதி வேண்டும் என்று மறுத்து விட்டார்களாமே.. கருணாநிதியைச் சுற்றி இப்படித்தான் ஒரு கயவர் கூட்டம் சூழ்ந்து கொண்டு நிஜத்தை மறைத்தது.. அதேபோல் ஒரு கயவர் கூட்டம் இப்போது அதிமுக வட்டாரத்திலும் உலவுகிறது!! இந்து ராம் அய்யங்காரும் விகடன் சீனிவாச அய்யரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்களாம்??? "ஐய்"யங்கார் என்ன செய்தாலும் செட்டியார் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்று தீர்ப்பு வழங்குவார்களோ?