11.10.11

என் பெயர் விக்னேஸ்ராஜ் !! எனக்கு முகமூடி இல்லை!!...நான், நான்தான்!!

தொலை பேசியில் அழைத்த தோழர் கேட்டார் : நீங்கள் தான் கலகக் குரலா?. 
---- FB யில் அந்த பிளாக்கின் லிங்கை வேறு ஒரு பத்திரிகையாளருக்கு அனுப்பியிருந்ததை வைத்து அவருக்கு அந்த சந்தேகமாம்! என்னைப் பற்றி தெரியாததால் வந்த சந்தேகம்!!.. இதுவரை யாருடைய முதுகுக்குப் பின்னாலும் நான் ஒளிந்து கொண்டதில்லை ! வேறு முகமூடி அணிந்து கொண்டு நான் அவனில்லை என்றும் சொன்னதில்லை!! குமுதம் விவகாரத்தில் ஜவஹர் பழனியப்பன் பக்கமதான் நியாயம் என்று நான் நம்புவதை பகிரங்கமாகவே தராசில் எழுதிய பிறகு எதற்காக பிளாக்கில் எழுதவேண்டும்? தவிரவும் கலகக்குரலின் மொழிநடையில் எனக்கு உடன்பாடில்லை..அதே வேளையில் ஜவஹர் பக்கம்தான் நியாயம் என்று நான் நம்புவதையும் உறுதியாகச் சொல்வேன்.. என் குரல் எப்போதும் உண்மையின் குரலாக இருக்குமேயன்றி "கழ(ல)கத்தின்" குரலாக இருக்காது!! நான், நான்தான்!!


மேலே உள்ள படம் ஒரு இணையத்தில் குமுதம் பப்ளிகேசன் அங்கீகாரத்துடன் 2009 -ம் ஆண்டு வெளி வந்தது..அப்போது குமுதத்தின் சேர்மனாக இருந்தவர் கோதை ஆச்சி!! இப்போது வரதராசன் எப்படி சேர்மன் ஆனார்? இந்த மாற்றம் அல்லது கபளீகரம் சட்ட ரீதியாக செல்லுபடியாகுமா?  இதுவும் என் சந்தேகம்!!    
  பத்திரிகையில் FDI (Foreign Direct Investment ) அந்நிய நேரடி முதலீட்டுக்கு என கட்டுப்பாடு உண்டு!! ஆனால் குமுதம் ஜவஹர் பழனியப்பனைப் பொறுத்தவரையில் அவருடைய பங்குகள் அவருடைய தந்தை எஸ் ஏ பி அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு வாரிசுரிமைப் படி மாறிவந்திருக்க வேண்டும்.!! தவிர ஜவஹர் dual citizenship வைத்திருந்தால் FDI கட்டுப் பாடு பொருந்துமா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்!! இது என் சந்தேகம்!
வரதராஜன்