29.11.11

ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் ஒத்திவைப்பு!முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 30-ம் தேதி கொடநாடு செல்ல இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுமார் 2 மணி நேரம் ஹெலிகாப்டரில் பார்வையிட்ட அவர், தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோட்டையில் நடந்த நிகழ்ச்சிகள் அவர் கொடநாடு பயணத்துக்கு தயாராகி வருவதை உறுதிப்படுத்துவதாக இருந்தன. பிறகு தமிழக ஆளுநர் கே. ரோசய்யாவை ராஜ்பவன் சென்று சந்தித்தார். அவர்களுடைய பேச்சு வார்த்தை சுமார் 30 நிமிஷங்கள் நீடித்தது. அதன் பிறகு அவர் கொடநாடு செல்வது ரத்தானது. மழை, வெள்ளத்தால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும் முல்லைப் பெரியார் அணைப் பிரச்னை தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாலும் அவரது கொடநாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்துக்குப் பிறகே அவர் கொடநாடு செல்வார் எனவும் கூறப்படுகிறது.

ஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்!


டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறையில் வரவேற்று ஏற்பது என்ற நோக்கத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு(FICCI ), மாநாடு ஒன்றை சென்னையில் டிசம்பர் மாதம் 1,2 தேதிகளில் நடத்துகிறது! FICCI அங்கமான, ஊடகம் மற்றும் பொழுது போக்குத்துறை கூட்டுக்குழுவின் (MEBC)தலைவரும் பிரபல நடிகருமான கமல் ஹாசன் இந்த தகவலை தெரிவித்தார்.

"தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றார் போல் நம்மை மெருகேற்றிக் கொள்வதன் மூலம் இந்தத் தொழில் மேலும் சிறப்புடன் திகழ முடியும். அது பற்றிய விவாதங்களுக்காகத்தான் இந்த மாநாடு. சினிமாத் துறை வளர்ச்சியடைய கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயமாக குறைக்க வேண்டும் என்பதுதான் என் பதில். வங்கிகள் திரைப்படம் தயாரிக்க கடன் வழங்க முன்வராததால், சட்ட விரோதமான வழிகளில் பெறப்படும் பணமும் திரைப்படத் துறையில் புழங்குகிறது. திரைப்படங்களுக்கான நிதி பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பும், திரைப்படத் துறையும் ஆலோசனை நடத்தி வருகிறோம். புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே உடனடி வரவேற்பு இருக்காது. அந்தக் காலத்தில் வாசன் 13 பிரின்ட் போட்ட போது எதற்கு இத்தனை ? என்று எதிர்த்தவர்கள் உண்டு! தியேட்டர்களில் டால்பி சிஸ்டத்தை அறிமுகப் படுத்த வந்தவரிடம் நீங்கள் எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கெட்டவர்களே அடுத்த ஆறு மாதத்தில் அதைத் தேடி ஓடினார்கள்!! புதியன புகுதலும் பழையன கழிதலும் காலங்காலமாக நடப்பதுதானே?" என்று நடிகர் கமல்ஹாசன் சொன்னார்.

--அவர் சென்னையில் நிருபர்களை திங்கள்கிழமை சந்தித்தபோது FICCI தலைவர் முராரரி IAS (Rtd ), லீனா ஜைசனி உடனிருந்தனர். ஜோர்டான் நாட்டில் விஸ்வரூபம் படப் பிடிப்பிலிருந்த கமல் ஹாசன் இந்த மாநாட்டுக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அங்கிருந்து பறந்து வந்தார்! ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக கூட்டுக்குழுவின் முதல் மாநாடு 2009 -ம் ஆண்டு சென்னையில் நடந்தது. இரண்டாவது மாநாடு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் நடந்தது. மூன்றாவது மாநாடு மறுபடியும் சென்னையில் லீ மெரிடியன் ஹோட்டலில் டிசம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது. சென்சார் போர்டு தலைவர், ட்ராய் தலைவர், நீதியரசர்கள் மற்றும் திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

கனிமொழி ஏன் நேற்றே விடுதலை ஆகவில்லை?

டில்லி உயர் நீதிமன்றம் கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டாலும் அதையடுத்து சட்டபூர்வமான நடைமுறைகளுக்கு உரிய அவகாசம் இல்லாததால் கனிமொழி நேற்றே சிறையிலிருந்து வெளிவர முடியவில்லை!! பிணை விடுதலை(ஜாமீன்)க்கு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு (அதிகாரப்பூர்வ ஆவணம்) ஜாமின் பிணைப் பத்திரத்துடன் இணைக்கப்பட்டு, பாட்டியாலா சிறப்பு கோர்ட் நீதிபதி ஒ.பி.சைனியிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கு பின், சிறப்பு கோர்ட் நீதிபதி, ஜாமினில் விடுவிக்கப்படுவது தொடர்பான உத்தரவை (ரிலீஸ் ஆர்டர்) அளிப்பார். சிறப்பு கோர்ட் நீதிபதி அளிக்கும் ரிலீஸ் ஆர்டரை, திகார் சிறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்த பின், கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர். இது, சட்ட நடைமுறை!! .இந்நிலையில் ஜாமின் உத்தரவை பெறுவதற்காக கனிமொழி உள்ளிட்டோரின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து நீதிபதி ஒ.பி.சைனி சிறப்பு கோர்ட்டில் உள்ள தன் சேம்பரில், மாலை 5.15 வரை காத்திருந்தார். ஆனால் ஐகோர்ட்டில் இருந்து ஜாமின் உத்தரவு சிறப்பு கோர்ட்டுக்கு வரவில்லை. 

தாமதமானதால் நீதிபதி அதற்குப் பின் காத்திருக்கவில்லை. காத்திருந்தாலும் அது வேஸ்ட்தான்!! காரணம் சட்டப் படி சிறையிலிருந்து ஆறு மணிக்குமேல் வெளியே விட முடியாது. இதுகுறித்து கனிமொழியின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் "29.11.2011 காலை பிணைப் பத்திரத்தை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்வோம். இதன் பின் ரிலீஸ் ஆர்டர் கிடைக்கும்" என்றார். இந்த தாமதம் காரணமாக ஜாமின் கிடைத்த ஐந்து பேரும் மேலும் ஒரு இரவை சிறையில் கழித்தனர் !! இன்று காலை 11 மணிக்கு மேல் கனிமொழி உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம்!!

28.11.11

அண்ணாச்சி கடையும் ஆறுமாத பாக்கியும்....

  னது புதியபடமான இளமை நாட்கள் தொடர்பான பணியிலிருந்த இயக்குனர் விக்கிரமனைச் சந்தித்தேன்!! பொதுவாக எங்கள் சந்திப்பின் போது நாங்கள் சினிமா பற்றி பேசுவது மிகவும் குறைவு! சினிமா அல்லாத பிற விஷயங்கள் குறித்துத்தான் பெரும்பாலும் எங்கள் விவாதம் இருக்கும்!!  சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதித்த அந்த நேரத்தில் அதை எதிர்த்து தனது கருத்துக்களை ஆவேசமாக எடுத்து வைத்தவரிடம் உங்கள் வாதத்தை அறிக்கையாக அனுப்புங்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்!! அதற்குப் பிறகு மத்திய அரசின் அனுமதி தமிழகத்திற்குப் பொருந்தாது! தமிழக அரசு அதை முழுமையாக எதிர்க்கிறது என்று முதல்வர் அறிவித்து விட்டாலும் விக்ரமனின் அறிக்கையினுள்ளே பொதிந்திருக்கும் மனிதாபிமானம்,    நடுத்தர ஏழைக் குடும்பங்களுடைய வாழ்வியல் நிதர்சனம் ஆகியவற்றிற்காக அதை அப்படியே கீழே பதிந்திருக்கிறேன்   :-


"சில்லறை வணிகத்தில் 51 % அந்நிய முதலீட்டை அங்கீகரிப்பதென மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. “உலக பொருளாதர மயமாக்கல்”(Globalization) என்னும் கொள்கையால் இந்திய உற்பத்தி பெரிதும் பாதிக்கபட்டு இருக்கும் சூழ்நிலையில் சில்லறை வணிகத்தை அடியோடு முடக்கும் செயல் இது என்று நான் கருதுகிறேன்.”வால்மார்ட்” போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும் போது மிகவும் குளிரூட்டப்பட்ட கடைகளை ஆரம்பிக்கும். (Air Conditioned Shops). வாடிக்கையாளர்களை கவர ஆரம்பத்தில் பல சலுகைகளை அறிவிக்கும்.ஏற்கனவே வெளிநாட்டு மோகம் கொண்ட நமது நாட்டு நாகரீக இளைஞர்கள் இவைகளை மட்டுமே தேடிச் செல்ல தொடங்குவார்கள். இதனால் நமது சில்லறை வணிகர்களின் வியாபாரம் மெல்ல மெல்ல நலிவடைந்து ஆறுமாதத்துக்குள்ளோ அல்லது ஒரு வருடதுக்குள்ளோ கடையை மூடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதன்பின் தான் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தன் சுயரூபத்தை காட்டும்.சில்லறை வணிகத்தில் ஏகபோக உரிமை இவர்களின் கைக்கு வந்த பிறகு இவர்கள் வைப்பது தான் விலை.வேறு வழியின்றி வாங்கித்தான் தொலைக்க வேண்டும்.இது போன்ற பெரிய கடைகள் தரமானவை என்ற ஒரு தவறான எண்ணத்தை நமக்குள் நாமே வளர்த்துகொண்டு இருக்கிறோம். எப்படி கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் ஊடுருவியதோ அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் இதுவும்.நமது நாட்டில் சில்லறை வணிகர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் வெறும் வணிகர்கள் மட்டுமல்ல நமது உறவினர்கள்.நமது மண்ணில் பிறந்தவர்கள். நமது கஷ்டம் தெரிந்தவர்கள்.

தமிழ்நாட்டில் அநேகமான எல்லா கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒரு “ அண்ணாச்சி” கடை வைத்திருப்பார். இந்த கடைகளில் பெரும்பாலும் ஏழை,நடுத்தர மக்கள்தான் பொருட்கள் வாங்குவார்கள்.பல நேரங்களில் நாம் இவர்கள் கடையில் கடன் சொல்லி தான் வாங்குகிறோம்.சிலரால் ஆறுமாதங்களாகியும் கடனை திருப்பிக்கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவும்.தயங்கி தயங்கி அண்ணாச்சி கடையில் மீண்டும் 2 கிலோ அரிசி , 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் நல்லெண்னை என்று கடன் கேட்ப்போம்.நமது குடும்ப நிலைமை தெரிந்து கொண்ட அந்த அண்ணாச்சியும் “ஏற்கனவே ஆறு மாதமா பாக்கி இருக்கு என்று மெதுவாக சொல்லிக்கொண்டே , சரி என்ன செய்ய? உங்க வீட்டுக்காரர் ஆறு மாசமா படுத்த படுக்கையா இருக்காரு, நீங்க என்ன பண்ணுவீங்க,பணம் வந்ததும் மொதல்ல என் கடனை செட்டில் பண்ணிடுங்க” என்று சொல்லி மீண்டும் நாம் கேட்ட பொருளை கொடுக்கத்தான் செய்வார்.பணத்தை திருப்பி கொடுத்ததும் 500 ரூபாய்க்கோ,1000 ரூபாய்க்கோ பொருள் வாங்கினால் நாம் “கொசுறு” என்று எதாவது கேட்ப்போம்.அதையும் சிரித்த முகத்துடன் தருவார்.இது போன்ற பாசமிக்க உறவை, நாம் கஷ்டப்படும்போது கடன் தந்து உதவும் பண்பை, இந்த பன்னாட்டு நிருவனங்களிடம் நாம் எதிர்ப்பார்க்க முடியுமா?சில்லறை வணிகத்தில் ஈடுப்பட்டுள்ள எவருமே பெரிய கோடிஸ்வரர் ஆகி விடுவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஓரளவிற்கு நியாயமான விலையில் விற்பதால் பெரிய லாபத்தை ஈட்டுவது இல்லை.அதை நீங்கள் உள்ள தெருவில் 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் கடை வைத்திருக்கும் கடைக்காரரை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.ஆனால் இப்பொழுது சில்லறை வணிகத்தில் கால் பதிக்க இருக்கும் “வால்மார்ட்” நிறுவன முதலாளி சில ஆண்டுகளுக்கு முன்பு “பில்கேட்ஸை” மிஞ்சிய கோடிஸ்வரர்.

ஆகவே சகோதரர்களே,சகோதரிகளே, நம்மில் ஒருவராக நம்மை நம்பியே வாழும் நமது தெரு பூர்விக சில்லறை வணிகர்களை தொடர்ந்து ஆதரிப்போம்.மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்ப்போம்.மீறி அந்த நிறுவனங்கள் இங்கு கால்பதிக்குமே ஆனால், நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அதை முழுமையாக நிராகரிப்போம்.நிச்சயம் இதில் ஒன்றுப்பட்டு தமிழ் இனம் ஜெயிக்கும்.தமிழர்களின் ஒற்றுமை உலகத்திற்கு தெரியும்.நாம் ஜெயித்துக்காட்டினாலே மற்ற மாநிலங்களும் நம்மை பின் பற்றி இந்த பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்கும்.இது நமது சகோதரர்களுக்காக நாம் கொடுக்கும் குரல். ஒன்று படுவோம் . அந்நிய சக்தியை விரட்டியடிப்போம்."
--விக்கிரமன்        

ஒருவழியாக வந்தியா?

--கனிமொழி ஜாமீன் குறித்து கருணாநிதி கருத்து!!  

கனிமொழிக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்! அப்போது அவர், கனிமொழி தன்னைப் பார்க்க வரும்போது "அப்பாடா... வந்தியா? என்று கேட்பேன் எனக் கூறியுள்ளார். செலக்டிவான இந்த பேட்டி பற்றி அவருடைய இல்லத்திலிருந்து பத்திரிகையாளர்களுக்கு தரப் பட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை பின் வருமாறு ( இதைத்தான் தங்கள் நிருபர்களே கேள்வி கேட்டது போல நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன) :-

செய்தியாளர் :- கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இப்போது உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?
கருணாநிதி பதில் :- மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கேள்வி :- அவர்கள் வந்தவுடன் முதலில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் :- அப்பாடா! வந்தியா?
கேள்வி :- நீங்கள் இப்போது டெல்லி செல்கிறீர்களா?
பதில் :- இல்லை.
கேள்வி :- கனி இன்றைக்கே சென்னை வருகிறார்களா? எப்போது வருகிறார்கள்?
பதில் :- இன்னும் தெரியவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் வர வேண்டும்.
கேள்வி :- இவ்வளவு நாள் தாமதமாக ஜாமீனில் விட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள சட்ட விதி முறைகளைப் பற்றி நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
பதில் :- ஜாமீன் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைய வேண்டிய நேரத்தில் தாமதத்திற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்க முடியாது.
கேள்வி :- சிறையில் ஆறு மாத காலம் கஷ்டங்களை யெல்லாம் கனிமொழி அனுபவித்திருக்கிறார்கள். அதற்காக இப்போது கட்சியில் ஏதாவது பெரிய பதவி கிடைக்குமா?
பதில் :- “அப்பா” என்ற முறையில் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். “தலைவர்” என்பதற்காக நான் சர்வாதிகாரி அல்ல. எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே கட்சிதான் எந்த முடிவையும் செய்யும்.
கேள்வி :- சென்னைக்கு எப்போது வருகிறார்கள் என்பது நிச்சயமாகி விட்டதா?
பதில் :- எப்போது வருகிறார் என்று தெரியவில்லை. நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் மற்றவர்களும் அங்கே இருக்கிறார்கள். வழக்கறிஞர்களோடு நீதி மன்றத்தில் கலந்து பேசி சொல்வார்கள்.
கேள்வி :- தற்போது கிடைத்துள்ள ஜாமீன், வழக்கில் பிறகு கிடைக்கக் கூடிய வெற்றிக்கு முன்னுதாரணமாக இருக்குமா?
பதில் :- நான் நீதிமன்றங்களைப் பற்றியும், வழக்கின் போக்குகள் பற்றியும் விவாதிப்பது முறையல்ல!
கேள்வி :- தற்போது கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், ராஜாவையும் ஜாமீன் போடச் சொல்லி வற்புறுத்துவீர்களா?
பதில் :- அதைப் பற்றி ராஜா என்னுடைய கருத்துக்களைக் கேட்டால் உரிய கருத்துக்களைச் சொல்வேன். இதுவரை ராஜா அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை.
கேள்வி :- கனிமொழியை ஜாமீனில் விட்ட பிறகு, தான் ஜாமீன் கேட்பது பற்றி முடிவு செய்வேன் என்று ராஜா சொல்லியிருந்தாரே?
பதில் :- என்னிடம் கலந்து பேசி, அவர் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.
கேள்வி :- கனிமொழி ஜாமீன் பெற்று சென்னைக்கு வரும்போது, கட்சித் தொண்டர்களின் வரவேற்பு பெரிதாக இருக்குமா? பலமாக இருக்குமா? ஏற்பாடு செய்யப்படுமா?
பதில் :- வரவேற்பு இருக்கும். அது பலமாக இருக்குமா, பெரிதாக இருக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆறு மாதங்களாக சிறையிலே இருந்து விட்டு வருகிறார். உள்ளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டு வரவேற்றால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
கேள்வி :- கனிமொழியின் தாயார் எப்படி இருக்கிறார்?
பதில் :- அவர் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தாய் உள்ளம் அல்லவா?

மிஸ்டர் கார்த்தி எப்ப ஹைதராபாத் கிளம்புறீங்க?

மிழ் சினிமாவில் வாய்க்கொழுப்பு அதிகமுள்ள நடிகர் என்று அந்தக் காலத்திலேயே பேசப் பட்டவர் சிவகுமார்! இப்போது அவருடைய புத்திரர்கள் இருவரும் நடிகர்களாகி விட்ட பிறகு அவருடைய "உபதேசம்" அதிகமாகிவிட்ட நிலையில் அவருடைய இரண்டாவது மகனும் நடிகருமான கார்த்தியும் தந்தையை மிஞ்சும் தனயனாகி விட்டார்- வாய்க்கொழுப்பில் !!  ஒரு தெலுங்கு திரைப்படவிழாவில் கலந்துகொண்ட நடிகரிடம் நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்கும் சுந்தரத்தெலுங்கைச் சேர்ந்த சுமாரான ஒரு பெண்மணி கேட்ட கேள்வி இது:  சார் உங்களுக்கு தமிழ் ரசிகர்களைப் பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்களைப் பிடிக்குமா?
இந்தக் கேள்விக்கு வாய்க்கொழுப்பு நடிகன் கார்த்தியின் பதில் இது: 
நிச்சயமா தெலுங்கு ரசிகர்களைத்தான்..தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு பிரேமுக்கும் கை தட்டி விசிலடிச்சு ரசிக்கிறாங்க..ஆனா தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லே.. (இங்கே அதன் வீடியோ இணைக்கப் பட்டுள்ளது!) 
--கார்த்தி இப்படிப் பேசியிருப்பது குறித்து அவருடைய ரசிகர்களிடம் அந்த வீடியோக் காட்சியைப் போட்டுக் காட்டி கருத்து கேட்டோம்..
உணர்ச்சிவயப் பட்ட நிலையில் அவருடைய ரசிகர்கள் சொன்னது இது:
ங்கோய்யல்ல.. அப்புறம் என்ன மசி.... க்கடா தமிழ்ல நடிக்கற..? போய் ஆந்திராவிலேயே நடிக்க வேண்டியதுதானே..
--அவர்கள் சொல்வதும் நியாயம்தானே.. மிஸ்டர் கார்த்தி எப்ப ஹைதராபாத் கிளம்புறீங்க? 
--தமிழன்டா.
       

21.11.11

அப்பல்லோ மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி !! சிறு நீரகக்கோளாறு காரணமா??

தி.மு.க., தலைவர் கருணாநிதி சிறு நீரகக்கோளாறு காரணமாக 21 .11 .2011  இரவு 9.55 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்! இது பற்றிய விபரம் வருமாறு...
தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சிறப்பு மருத்துவர் டாக்டர் தேவராஜன் அவசரம் அவசரமாக வரவழைக்கப்பட்டார்!  அவருடைய பரிசோதனையில் பெரியவருக்கு சிறு நீரகக்கோளாறு கண்டறியப் பட்டது! இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 9.55 மணிக்கு, கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, சிறுநீரக சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பற்றி, சிறுநீர் நோய் தொற்று இருப்பதால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அடிவயிற்றில் வலி இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தி முக வட்டாரம் தெரிவித்தது!!

இரவோடு இரவாக கருணாநிதி வீடு திரும்பினார்


சென்னை,நவம்பர் 22 , 2011

அப்போல்லோ மருத்துவமனையில் சேர்ந்தது பற்றி வதந்திகள் பரவியதால் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு 21ந்தேதி இரவோடு இரவாக கருணாநிதி வீடு திரும்பினார்.. மருத்துவமனையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப் பட்டதாகச் சொல்லப் படுகிறது! இப்போது அவர் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதாக அப்போல்லோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன..


கல்யாணம் கட்டிக்கிட்டவளை  ஓட்டிக்கிட்டுப் போன உடான்ஸ் நடிகர் சினேகன் - மனைவியை மீட்டுத் தர கணவன் போலீசில் புகார் !! 

கட்டிப் பிடி பாடலாசிரியர் செக்ஸ் நடிகர் சினேகன் வேறு ஒருவரின் மனைவி குழந்தையை அபேஸ் செய்து வைத்துருப்பதாக போலீசில் புகார் பதிவாகியுள்ளது!  சென்னை மடிப்பாக்கம் சக்தி நகர் எழில் அவென்யூவைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 34. இவரது மனைவி ஜமுனா கலாதேவி வயது 30; இருவரும் நடன பள்ளி நடத்தி வந்தனர்!  இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ என்ற ஆறு வயது பெண் குழந்தை உள்ளது. 
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரபாகரன் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: ஜமுனா கலாதேவியும் நானும் காதலித்து 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். ஒரு குழந்தை உள்ளது. கீழ்க்கட்டளையில் நடனப்பள்ளி நடத்தி வந்தோம். புதிய கிளை ஒன்றை வேளச்சேரியில் துவக்கினோம். அதன் திறப்பு விழாவிற்கு,நடிகரும்,பாடலாசிரியருமான சினேகன் வந்தார்.அதன் பின் நடனம் கற்றுத் தர வேண்டும் என்று என் மனைவியிடம் கேட்டார். நான் பலமுறை தடுத்தும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து மொபைல் போன் மூலம் பேசி என் மனைவியை தன் வசப்படுத்திக் கொண்டு பெங்களூருக்கு கூட்டிச் சென்றார். இதற்கு என் மனைவியின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஜய் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.
இரண்டாண்டுகளாக என் குழந்தையின் விஷயங்களை நானே கவனித்துக் கொள்ளும் சூழலில் உள்ளேன்.கடந்த 13ம் தேதி, சினேகனின் தூண்டுதல் பெயரில், மனைவியின் சகோதரர் விஜய் மற்றும் தாயார் விஜயகுமாரி ஆகியோர் என் தாயாரை தாக்கிவிட்டு, குழந்தையை கடத்திச் சென்று விட்டனர். நான் வீட்டிற்கு சென்று கேட்ட போது, குழந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. மனைவியை விவாகரத்து செய்யுமாறு மிரட்டுகின்றனர். குழந்தையை அழ வைத்து, அதை போனில் கேட்கச் செய்து, சீக்கிரம் முடிவெடுக்கச் சொல்கின்றனர்.நான் கேட்டதற்கு, சினேகனுக்கு சினிமா ஸ்டன்ட் மாஸ்டர்களை தெரியும். அவர்களை கொண்டு என்னை தொலைத்து விடுவோம் என்றும் மிரட்டினர். எனவே, சினேகன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குழந்தையையும், மனைவியையும் மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது!!

11.11.11


கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்...கல்விக் கடன் கிடைக்காமல் இன்ஜினீயரிங் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை!! 
கிராமப்புற மாணவர்கள் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் பிரச்னை உள்ளதால், கல்வி உதவித்தொகை பெற முடியவில்லை. பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு அரசு ரூ.200 முதல் 500 வரை கல்விக்கட்டணமாக வழங்குகிறது. கலைக்கல்லூரி, மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தக கட்டணம், கல்லூரி, பயிற்சி, தேர்வு கட்டணம் உள்ளிட்டவற்றிற்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் கடைசியாக எழுதிய தேர்வில் 40 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவரின் பெற்றோர் ஒரு லட்சத்துக்கு மிகாமல் வருமானம் பெறுபவராக இருந்தால், இந்த தொகை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அந்தந்த கல்வி நிறுவனங்களின் மூலம் டி.டி., யாக வழங்கப்பட்டது. தற்போது இந்த உதவித்தொகையை மாணவர்களின் வங்கி கணக்கு மூலமே வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு துவங்க ஆவணங்கள் கேட்பதால், தாமதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு தலா 2 கோடி ரூபாய் வரை அரசு வழங்கிய பணத்தில், கிராமப்புற மாணவர்கள் 90 சதவீதம் பேர் கணக்கு துவங்காததால், கல்விஉதவி தொகை பெற முடியவில்லை. நகர் புறங்களில் வசிக்கும் மாணவர்கள் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் சிரமம் இல்லை. கிராமப்புற மாணவர்களிடம் ஆவணங்கள் பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாததாலும் அவர்களை முறையாக வழிநடத்தும் மனிதத் தன்மை  வங்கி அதிகாரிகளுக்கும் மாநில அரசு அதிகாரிகளுக்கும் இல்லாததால், கணக்கு துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது!!

இது ஒரு புறமிருக்க நேற்று, வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால், மனமுடைந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர், கல்லூரி விடுதியில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்!! விழுப்புரம் மாவட்டம், கந்தாட்சிபுரத்தை சேர்ந்தவர் லூர்துசாமி; கூலித் தொழிலாளி. இவரது 17 வயது மகன் வினோத் செந்தில்கர் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கினார். வீட்டில் வசதியில்லாத நிலையிலும் வங்கியில் கல்விக்கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். தெரிந்தவர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி சென்னை, திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் பி.இ., (இ.சி.இ.,) சேர்ந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி கல்விக் கடன் பெற முயற்சித்தார். ஆனால் அவருக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையிலிருந்தார். நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார்.

மதியம் சாப்பிடுவதற்காக விடுதிக்கு சென்றார். மதிய உணவு முடிந்ததும், மாணவர்கள் வகுப்பிற்கு சென்றனர். வினோத் செந்தில்கர் மட்டும், அறையில் தங்கியுள்ளார். பின், தனது அறையிலிருந்த மின் விசிறியில் தூக்குப் போட்டு இறந்தார்.மாலை வகுப்பு முடிந்து திரும்பிய சக மாணவர்கள் வினோத் செந்தில்கர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கல்லூரி நிர்வாகி திருப்போரூர் போலீசில் புகார் செய்தார்!! வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால் அவர் மனமுடைந்து தூக்குப்போட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. 


 தாசில்தார் ஜீப் மோதி எஸ்.ஐ. படுகாயம்!!

சேலம் ஐந்து ரோடு அருகே ஏற்காடு தாசில்தார் ஜீப் மோதியதில், சூரமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் அவருடைய நண்பரும் படுகாயமடைந்தனர். ஜீப் டிரைவரை போலீஸாரும் பொதுமக்களும் ரவுண்டு கட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம், கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (42). ஏற்காட்டில் உள்ள பெலக்காடுதரப்பு கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். ஏற்காடு தாசில்தார் ஜீப்புக்கு டிரைவர் இல்லாததால், அவ்வப்போது ரவி ஜீப்பை ஓட்டி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல், ஜீப்பில் தாசில்தாரை அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டார். பின், சென்னையில் இருந்து வரும் அதிகாரிகளை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அழைத்து வருவதற்காக ரவி ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதே வேளையில், சூரமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. கனகராஜ் மற்றும் அவருடைய நண்பர் சிதம்பரம் ஆகியோர் ஜங்ஷனில் இருந்து ஐந்து ரோடு நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். ஐந்து ரோடு சிக்னல் அருகே வந்தபோது, தாசில்தார் ஜீப், எஸ்.ஐ. வந்த பைக் மீது மோதியது. அதில், டூவீலரில் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நடந்த பகுதியில் இருந்த மக்களும் அங்கு வந்த போலீஸாரும் போதையில் இருந்த டிரைவரை ரவுண்டு கட்டி அடித்தனர். தொடர்ந்து, போக்குவரத்து போலீஸார் டிரைவரை மீட்டு ஃபேர்லேண்ட்ஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். ஏற்காடு தாசில்தார் இலாஹிஜான் போலீஸ் ஸ்டேஷன் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். காயமடைந்த எஸ்.ஐ. கனகராஜ் தனக்கும் வாகனத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கும்பட்சத்தில், வழக்குப்பதிவு செய்யாமல் ஒதுங்கிப் போவதாக கூறினார். அதையடுத்து, இரு தரப்பும் சமாதானமாக சென்றனர்.

விஜின்ஸ் எஸ்.பிக்கு அடி உதை!.     
விஜின்ஸ் எஸ்.பி., முத்தையா, இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது சில மர்ம நபர்களால் தாககப்பட்டார்.  முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்புதியவர்களுக்கு ஜெயலலிதா அறிவுரை!!
கடந்த வாரம் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட சண்முகவேலு மற்றும் உதயகுமார் ஆகியோரிடமிருந்து, அவர்கள் வகித்து வந்த கட்சிப் பதவிகளான புறநகர் மாவட்டச் செயலர், மாநில மாணவரணி செயலர் ஆகிய பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.இவர்களுக்கு பதிலாக, திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலராக அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாநில மாணவரணி செயலராக சரவணபெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவை நேற்று சந்தித்த போது கட்சிப் பொறுப்புகளில் முனைப்புக் காட்டி செயல்பட வேண்டும் என அவர் அறிவுரை வழங்கினார்