2.12.11

கமிஷனர் அலுவலத்தில் வழக்கு --டிஜிபி அலுவலகத்தில் ஸ்டாலின் ஆஜர் !!

 வீடு அபகரிப்பு தொடர்பாக சென்னை பெருநகர கமிஷனர் அலுவலத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்அதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக டிஜிபி அலுவலகம் வந்தார். டிஜிபி அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி ராஜேந்திரனை சந்தித்துப் பேசினார்!!
   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "என் மீதும் குடும்பத்தார் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன."என்றார்.
"பொதுவாக அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்ட பின்னர்தான் எஃப்ஐஆர் போடுவார்கள். ஆனால் எஃப்ஐஆர் போடப்பட்ட பின்னரும் என்னைக் கைது செய்யுங்கள் என்று நான் கூறியும் அவர்கள் கைது செய்யவில்லை. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்" என்று ஸ்டாலின் கூறினார்.
     இது பற்றி காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம் : 
"இது அரசியல் லாபத்திற்காக போடப் பட்ட வழக்கு என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டி இந்த ஸ்டண்ட்டை அவர் செய்துள்ளார்! நியாயமாக அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்? விசாரணை அதிகாரி முன்பு ஆஜராவதை விடுத்து டிஜிபி அலுவலகம் சென்றது சட்டப் படி சரியானதல்ல.." என்றார் அவர்.