17.4.11

சர்வதேச மீன்பிடிக் கப்பல்களை கண்காணிக்க வேண்டும் -- வைகோ அறிக்கை

சென்னை, ஏப்.17:  மீன்பிடித் தடைக்காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பது மிகவும் அவசியம் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மனிதர்களைத் தவிர உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் இனப்பெருக்கம் செய்ய பருவகாலங்கள் உண்டு . தமிழகத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை 45 நாள்கள் மீன்களின் இனப்பெருக்கக் காலம். இதில் மீனவர்களுக்கு நன்மை இருப்பினும் இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கக் கூடாது. இருப்பினும், கட்டுமரம், ஃபைபர் போட் மீனவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாவிடினும் கோடைக்காலங்களில் கடலில் திடீர் என்று ஏற்படும் சூறைக்காற்று மற்றும் புயல் காற்றால் கடலில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும். எனவே, ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என 1,076 கி.மீ. பரந்துபட்ட கடலில் 45 நாள்கள் மீன்பிடிக்காததால் ஏற்படும் பொருளாதார இழப்பால் அவர்கள் படும் துயரம் அதிகம்.

வசந்தத்தை வரவேற்கும் சித்திரை முதல் நாளில் நெய்தல் நில மக்கள் வறுமையை வரவேற்பதாய் இந்த 45 நாள்கள் அமைகின்றது. ஆண்டின் 365 நாள்களில் இனப்பெருக்கக் காலம், புயல், மழைக்காலம், கடல் சீற்றம், கடல் பஞ்சம், பண்டிகை, திருவிழாக் காலங்கள் என்று போக மீதம் 150 நாள்கள்தான் மீன்பிடித் தொழிலில் அவர்கள் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, அரசு அறிவித்துள்ள இந்த மீன்பிடித் தடைக்காலத்தில்தான் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பிக்கக் கட்டணம், கல்லூரிப் படிப்பு முடிந்தவர்களுக்குத் திருமணம், சித்திரை வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்படும் நோய்கள் என்று அடுக்கடுக்காக செலவுகள் வந்துகொண்டே இருக்கும். 45 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்தில் அரசு தரப்பில் தரப்படும் உதவித் தொகை என்பது விலைவாசி உயர்ந்துள்ள இக்காலகட்டத்திற்குப் போதுமானதாக இல்லை. குடும்ப அட்டையைக் கணக்கில் கொண்டு உதவித் தொகை வழங்கப்படுவதால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தந்தை, மகன்கள் என்று கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் இதில் ஏமாற்றம் அடைகின்றனர். இதற்கு மாறாக மீனவர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ள மீன்பிடித் தொழில் செய்யும் ஆண்களுக்கும், மீன்களை விற்பனை செய்யும் பெண்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 100/- வழங்குவதைப் போன்று மீனவர்களைப் பாரம்பரிய மீனவப் பழங்குடி இனத்தவராக அறிவித்து, குறைந்தபட்சம் 45 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கி நாள் ஒன்றுக்கு ரூ. 100 வீதம் 45 நாள்களுக்கு ரூ. 4,500 உதவித் தொகை வழங்குவது நன்மை பயக்கும்.

வட தமிழ்நாட்டில் மீன்பிடித் தொழிலில் குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை. தென் தமிழ்நாட்டில் கடலில் மீன்பிடிக்கச் சென்று உயிரோடு கரை திரும்புவோம் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையை சிங்கள ராணுவம் உருவாக்கியுள்ளது. இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் திருமணமாகாத இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கடல் கடந்து பிற நாட்டுப் பட்டினங்களில் வாணிபம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த பட்டினத்தவர்களான நெய்தல் நில மக்கள் இன்று பட்டினி கிடக்கும் நிலையும் உருவாகியுள்ளது. கடலாளிகளான பருவதராஜகுல மக்களுக்கு கடல் சொந்தமாக உள்ளதோ இல்லையோ, அவர்கள் கடனாளியாக உள்ளார்கள் என்பது மட்டும் உண்மை. இந்த நிலை மாறி, மீன்பிடித் தொழிலை ஊக்குவித்திட இயற்கை முகத்துவாரங்கள் அருகில் மீன்பிடித் துறைமுகங்களை மத்திய - மாநில அரசுகள் அமைத்துத் தந்திட வேண்டும். முகத்துவாரம் இல்லாத பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் போதுமான தூண்டில் வளைவு மீன்பிடித் துறைமுகங்களை அமைத்துத் தர வேண்டும்.

கடலும் ஆறும் சேருகின்ற இயற்கை முகத்துவாரப் பகுதிகளில்தான் இறால், நண்டு போன்றவை இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், தற்போது அப்பகுதிகளில் சாக்கடை நீர், ரசாயனம் கலந்த ஆலைக் கழிவு நீரால் மாசு அடைந்து இனப்பெருக்கம் தடைபடுகிறது. எனவே, இதை கருத்தில் கொண்டு நீர் மாசுபடாமல் இருக்க தூய்மைப்படுத்தப்பட்ட நீர் மட்டுமே முகத்துவாரம் வழியாக வந்து கடலில் கலப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்த 45 நாள்கள் மீன்பிடித் தடைக் காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்க கண்காணிப்பது மிகவும் அவசியம்.  ஊதியம் பெறாமல் பரந்துபட்ட 1,076 கி.மீ. கடல் எல்லையைப் பாதுகாத்து வரும் தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கிடக்கறது கிடக்கட்டும்...கிழவியைத் தூக்கி மனையில வை!!


கறுப்புப் பண விவகாரம் புதுச்சேரி ஆளுநருக்கு சம்மன்

புதுதில்லி, ஏப்.17- புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கறுப்புப் பண விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குதிரைப் பண்ணை உரிமையாளர் ஹசன் அலி வழக்கில் இக்பால் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது! இது பற்றி பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி இதோ!!.
ஹசன் அலியின் பாஸ்போர்ட் மற்றும் வெளிநாடுகளில் அவர் செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அவருக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.  மேலும், இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் முதன்மைச் செயலர் விஜய் சங்கர் பாண்டேவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. அவருக்கு அமலாக்கத்துறை சார்பில் அடுத்த வாரம் சம்மன் அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான அமலேந்து பாண்டே என்பவரை அமலாக்கத்துறை பாட்னாவில் கைது செய்தது. அவர் ஹசன் அலிக்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பெற்றதாக கூறப்படுகிறது. அவர் அளித்த சில தகவல்களின் பேரில் தற்போது புதுச்சேரி ஆளுநர் இக்பால் சிங், உத்தரப் பிரதேச முதன்மைச் செயலர் விஜய் சங்கர் ஆகியோரை விசாரிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


கிடக்கறது கிடக்கட்டும்...கிழவியைத் தூக்கி மனையில வை!!


சென்னை, ஏப்.17- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியை முதல்வர் கருணாநிதி நேரில் பார்த்து ரசித்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் என். சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது முதல்வர் கருணாநிதியை யுனைடெட் புரூவரீஸ் கம்பெனியின் உரிமையாளரும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளருமான  விஜய் மல்லையாவும் சந்தித்து பேசினார். 

ஆசைதான்!! இதற்கும் கடிதம் எழுத ஆசைதான்! ஆனால் என்ன செய்வார் பாவம்...பெரியவருடைய பேனாவை யாரோ ஒழித்து  வைத்து விட்டார்களாம்!! 

ராமேஸ்வரம், ஏப்.17- கடலில் மீன் பிடிக்கச் சென்று மர்மமான முறையில் கொல்லப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்காவது மீனவரின் உடலும் கிடைத்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில், கோடியக்கரை அருகே மாரிமுத்து என்னும் அந்த மீனவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 2-ம் தேதி, மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்டஸ், ஆண்டனி, ஜான்பால், மாரிமுத்து ஆகியோர் கரை திரும்பவில்லை. இவர்களில் 3 மீனவர்களின் உடல் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மாரிமுத்துவின் உடலும் இன்று கிடைத்துள்ளது. இந்த மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளதாக தமிழக மீனவர்களும், மதிமுக பொதுச்செயலர் வைகோவும் கூறியுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் இலங்கை தோற்றுவிட்டதால், அந்த ஆத்திரத்தில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொன்றுள்ளது என்று வைகோ கூறியுள்ளார். இதனிடையே, தமிழக மீனவர்கள் 4  பேர் கொல்லப்பட்டுள்ளது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம், பாஜகவின் முக்கிய தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் புகார் தெரிவித்துள்ளார்.

அப்பாடா...சிங்கம் சைவமில்லன்னு ஐ நாவுக்கு அறிக்கை அனுப்பிச்சிட்டாங்கடோய்!!!
    
கொழும்பு, ஏப்.17- விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலின்போது, இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா நிபுணர் குழு தனது அறிக்கையி்ல கூறியுள்ளது.ஐநா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை இலங்கை அரசிடம் ஓரிரு நாட்களுக்கு முன்னர் அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. எனினும், அந்த அறிக்கையின் சில தகவல்களை கொழும்புவைச் சேர்ந்த "ஐலேண்ட்" நாளிதழ் பிரசுரித்துள்ளதை மேற்கொள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சில தளபதிகளை ராணுவம் கொன்றதாகவும் ஐநா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


வன்முறையில் ஈடுபடும் திமுகவினரை உடனடியாக கைது செய்யவேண்டும் -- ஜெயலலிதா அறிக்கை!!

சென்னை ஏப். 17: தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் மீது தொடர்ந்து வன்முறை தாக்குதல் நடத்திவரும் திமுகவினரை உடனடியாக கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
13-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது திமுகவினர் செய்த முறைகேடுகளையும், அராஜகங்களையும் சுட்டிக்காட்டிய அதிமுகவினர் மீது திமுகவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வி பயம் காரணமாக தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் மீது இந்த வன்முறையைத் திமுகவினர் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். தேர்தல் நாளன்று மதுரை மாவட்ட மேலூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுகவுக்கு எதிராக வாக்களித்த அதிமுகவினரையும் பொதுமக்களையும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு திமுகவினர் தாக்கினர். இதில் அதிமுகவைச் சேர்ந்த சேதுபதி மற்றும் தியாகராஜன் என்கிற தேவர் ஆகியோர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட பொன்மார் பகுதி அதிமுக செயலாளர் பிரேம்நாத் வீட்டை திமுகவினர் அடித்து நொறுக்கியதுடன் அவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் உள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்குள்பட்ட ஆவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி முத்துராமலிங்கத்திற்கு திமுகவினர் கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.  இதுபோன்ற பல கொடூரச் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.  தற்போதுள்ள காவல்துறை கருணாநிதியின் ஏவல் துறை என்பதை அனைவரும் அறிவர்.  இதற்கு உதாரணமாக திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவரை ராஜ்குமார் என்பவரின் நண்பர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.  தாக்குதலுக்கு ஆளான அன்பு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார். ஆனால் காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டது. இதனால் விரக்தியுடன் வெளியே வந்த அன்புவை, ராஜ்குமார் உள்ளிட்டோர் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். தற்போது தமிழகக் காவல்துறையின் லட்சணம் இதுதான்.  தமிழகக் காவல்துறையின் கையாலாகாதத்தனத்தைக் கருத்தில் கொண்டு ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் திமுகவினரை இரும்புக் கரம் கொண்டு அடக்குமாறும், வன்முறைக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  தற்போது அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.செந்தில்நாதனைக் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள கூலியாட்கள் அப்பகுதியில் நடமாடிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.  எனவே வி.செந்தில்நாதனுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடுமாறும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வன்முறை தொடர்கிறது -- விசும்புகிறார் விஜயகாந்த்!!

சென்னை, ஏப். 17: சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகும் திமுக-காங்கிரஸ் கூட்டணியினரின் வன்முறை தொடர்கிறது. இதைத் தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.  இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த பிறகும் திமுக-காங்கிரஸ் கூட்டணியினரின் சமூக விரோதச் செயல்கள் முடிந்தபாடில்லை. நமது கூட்டணிக் கட்சியினரைத் திமுகவினர் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். குறிப்பாக பல இடங்களில் தேமுதிகவைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள்.  திருவள்ளூர், வேடசந்தூர், சோழிங்கநல்லூர், தருமபுரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பணியாற்றிய தேமுதிக பிரமுகர்கள் பலர் திமுகவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். பென்னாகரம் ஒன்றியம் தேமுதிக நெசவாளர் அணி செயலாளர் அசோகன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  வரும் மே மாதம் 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இப்போதே இத்தகைய வன்முறையில் ஈடுபடுபவர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எத்தகைய வன்முறைகளில் ஈடுபடுவார்கள் என்பதை யூகிக்க முடியாது.  எனவே வன்முறையில் ஈடுபடும் திமுகவினரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெறும்.  எனவே மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்தல் நடத்தை விதிகள் எதுவும் தளர்த்தப்படவில்லை!! பெருசு புலம்பலோ புலம்பல்!! 

சென்னை, ஏப். 17: தமிழகத்தில் அதிகாரிகளின் ஆய்வுக் குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் எதுவும் தளர்த்தப்படவில்லை என்று மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 13-ம் தேதி முடிந்துவிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை முடியும் வரையிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே அதிகாரிகள் சில முக்கிய ஆய்வுக் கூட்டங்களைக்கூட நடத்த முடியாத நிலை இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் சூழ்நிலையில், அதற்கேற்ப வேளாண்மைத் துறையில் முன் ஏற்பாடுகளைச் செய்வதற்காக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடங்கிய பிறகு முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்துக்குச் செல்லவில்லை. தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் ஆணையம் கெடுபிடி நடவடிக்கைகள் எடுத்த போது, அது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டது. அப்போது அதிகாரிகளை மாற்றுமாறு கோர தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று ஆணையத்தின் வழக்கறிஞர் வாதாடினார்.  தமிழகத்தில் நடப்பது எனது ஆட்சியா அல்லது தேர்தல் ஆணையத்தின் ஆட்சியா என்று கருணாநிதி வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினார்.
தாம் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் ஏப்ரல் 11-ம் தேதி மாலை நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, முதல்வரைவிட தேர்தல் ஆணையத்துக்குதான் அதிக அதிகாரம் உள்ளது என்று கூறிவிட்ட நிலையில், தாம் தலைமைச் செயலகம் சென்று 20 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டதாகத் தெரிவித்தார்.  வாக்குப் பதிவு முடிந்த பிறகும் முதல்வர் இன்னும் தலைமைச் செயலகத்துக்குச் செல்லவில்லை.  வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பொறுப்பேற்க இன்னும் 4 வாரங்கள் இருப்பதால், இடையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு, தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் இடையூறாக இருக்கிறது என்றும், நிர்வாகம் ஸ்தம்பித்துப் போனால் அதற்கு ஆணையம்தான் காரணம் என்றும் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, ஆணையம் தனது நடத்தை விதிகள் அமலாக்கத்தை கணிசமாக தளர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இதுவரை விதிகள் எதுவும் தளர்த்தப்படவில்லை என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆறு தொகுதிகளில் 8 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சனிக்கிழமை முடிவடைந்தது. மறுவாக்குப்பதிவு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், நடத்தை விதிகளைத் தளர்த்துவது பற்றி தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுதான் முடிவு எடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.  வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட நாள்கள் அவகாசம் இருக்குமானால், இடைப்பட்ட நாள்களில் முதலமைச்சர் நேரடியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவசர அவசியம் இருந்தால் தலைமைச் செயலாளர்தான், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்களை வரவழைத்து இதுபோன்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யலாம் என தேர்தல் ஆணையத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறினர்.  ஓரிரு விஷயங்களில் உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் விரும்பிய போது, அதற்கு தேர்தல் நடத்தை விதிகள் தடையாக இருப்பதாக மூத்த அதிகாரிகள் கூறியதால்தான் முதல்வர் இப்படியொரு அறிக்கை வெளியிட நேர்ந்தது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அரசுத் துறையில் இடமாறுதல்கள் எல்லாமே கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில், பொதுவான இடமாறுதல்களைச் செய்ய முடியாது. டாக்டர்கள், காவல் துறையினர் போன்ற முக்கிய அதிகாரிகள் இடமாறுதல் மட்டும், அவசர, அவசியத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்படும். அதுவும் பதவி உயர்வு ஏதும் இல்லாமல் இடமாறுதலுக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  பள்ளிக்கூட ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் போன்றோருக்கு பொது இடமாறுதலுக்கான கலந்தாய்வு ஜூன் மாதத்தில்தான் நடக்கும் என்பதால், தேர்தல் நடத்தை விதிகளால் அதற்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்


 ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிகளுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்கப்படக்கூடாது--தலைமை நீதிபதி!!


புதுதில்லி, ஏப். 17: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை யாரும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா வலியுறுத்தினார்.
தில்லியில் சனிக்கிழமை நடந்த 5-வது எம்.சி.சீதல்வாட் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:
மிகவும் அவசியமான காரணங்கள் இருந்தாலன்றி, வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் தொடர்பு வைத்துத் கொள்வதை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும்.  கீழ்நீதிமன்றத்தின் நிர்வாக விவகாரங்களில் உயர்நிலையில் உள்ள நீதிபதிகள் தலையிடக்கூடாது. இப்படித் தலையிடும் உயர்நிலை நீதிபதிகளுக்கு சாதகமான நிலை ஏற்படாவிட்டால், கீழ் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படவோ, அவர்களது பதவி உயர்வு மறுக்கப்படவோ வாய்ப்பு ஏற்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும். அதுபோல ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிகளுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்கப்படக்கூடாது.
எந்த வகையான ஆதரவையும் முன்னுரிமை தரப்படுவதையும் நீதிபதிகள் ஏற்கக்கூடாது. ஓய்வுக்கு முன்பே வேறு பணிகளை ஒப்புக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இவைதான் ஊழலுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன பாரபட்சமற்ற, அச்சமில்லாத, சுதந்திரமான நீதி வழங்கும் அமைப்பின் அங்கமாக நீதிபதிகள் இருக்க வேண்டும். நீதி வழங்கும் பொறுப்பில் உள்ளவர்கள், சமூகத்தில் பிற பிரிவினருடன் கலந்து பழகுவதால், அவர்களது பணியில் பிறர் செல்வாக்குச் செலுத்த முடிகிறது என சந்தேகிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது.  இப்படி சமூக ரீதியாகக் கலப்பதை நான் தவிர்த்துவிடுகிறேன். வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோருடன் பழக வேண்டியிருக்கும் என்பதால் கோல்ஃப் கிளப்புகளில் கூட நான் உறுப்பினராகச் சேரவில்லை.  நீதிபதிகள் மற்றும் தீர்ப்புகள் மீது ஊடகங்களும் மக்களும் முன்வைக்கும் விமர்சனங்கள் இப்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. மற்ற பொது நிறுவனங்களைப் போலவே ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நீதித்துறையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  ஆனால் பொறுப்பற்ற விமர்சனங்கள் கவலையளிக்கின்றன என்றார் தலைமை நீதிபதி.  இந்த நிகழ்ச்சியில் பேசிய வேறு சிலர், ஊழல் குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் நீதிபதிகள் பி.டி.தினகரன், செüமித்ர சென் ஆகியோரைக் குறிப்பிட்டனர்.  
நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாவது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் அனில் திவான், பி.பி.ராவ் ஆகியோர் கவலை தெரிவித்தனர்.