4.9.11

நாராயணா...நாராயணா... தலை சுத்துது நாராயணா!!


புதுடில்லி, செப் 4: மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லியை நாடு கடத்தி கொண்டுவர இந்தியாவுக்கு  ஆர்வமில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக ‌செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட்கோல்மென் ஹெட்லி மீது அமெரிக்க கோர்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய இணையதளமான விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 
அதில் மும்பை தாக்குதலில் லஷ்கர் தொய்பா அமைப்புக்கு உதவியதாக ஹெட்லி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை அமெரிக்க கோர்டில் நடந்துவருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதியன்று இது குறித்து இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இருந்த திமோதி ரோமர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.‌கே. நராயணனிடம் தெரிவித்தார். அதற்கு நாராயணன் ஹெட்லியை மும்பை தாக்குதல் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வர ஆர்வமில்லை. இந்த நேரத்தில் ஹெட்லியை நாடு கடத்தி வருவது கடினம் தான். பெரும் சிக்கல் ஏற்படும் என கூறினார். இவ்வாறு விக்கீலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்துள்ள எம் கே நாராயணன், விக்கீலீக்ஸ் தகவல் குறித்து அமெரிக்காவிடம் தான் கேட்க வேண்டும். ஹெட்லியை நாடு கடத்தி கொண்டு வருவதில் தீவரமாக இருந்தோம். அதிகாரிகளுக்கு மத்தியிலான் பேச்சுக்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஹெட்லியை நாடு கடத்துவதில் இந்தியா ஆர்வமாக இருந்தது. தீவிரமாக செயல்பட்டோம் என கூறினார். அப்ப..அந்த பேச்சு.. சும்மா.. உள்..உள்ளுலாயியா..??

தீபம் திருமலைக்கு பாராட்டு விழா


குடந்தை கீதப்ரியன், வானதி ராமநாதன்,விஜயா வேலாயுதம், திருப்பூர் கிருஷ்ணன், ஆர்.நடராஜன், தீபம் திருமலை, ஏ.நடராஜன், நாஞ்சில் நாடன், கௌதம நீலாம்பரன்
முதுபெரும் பத்திரிகையாளரான தீபம் திருமலைக்கு அவருடைய 50௦ ஆண்டு கால இலக்கிய சேவையை பாராட்டும் விதமாக சென்னையில் இன்று விழா நடந்தது. சென்னையில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம், எழுத்தாளர்கள் ஏ.நடராஜன், ஆர்.நடராஜன்,திருப்பூர் கிருஷ்ணன்,நாஞ்சில் நாடன், குடந்தை கீதப்ரியன், கௌதம நீலாம்பரன், குறிஞ்சி வேலன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்!  இந்த விழாவில் தராசு ஆசிரியர் விக்னேஸ்ராஜ்,  தினமணி கதிர் பொறுப்பாசிரியர் பாவை சந்திரன், வானதி பதிப்பகம் ராமநாதன்,தமிழன் தொலைக்காட்சி நா.பாண்டியன், கவிஞர் ஜெயபாஸ்கரன், துரை. ராமச்சந்திரன்,ஓவியர் டிராட்ஸ்கி மருது, ஞான ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இலக்கிய உலகில் அவருடைய பங்களிப்பை பாராட்டி, விழாவின்போது தீபம் திருமலைக்கு ரூபாய் இரண்டு லட்சம் பணமுடிப்பு வழங்கப் பட்டது! விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு திருமலை புத்தகம் ஒன்றை அளித்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்!                 

ஆரம்பிச்சுட்டாங்கய்யா!.ஆரம்பிச்சுட்டாங்க!

அதிமுக எம் எல் ஏ க்களும் அட்டகாசத்தை ஆரம்பிச்சுட்டாங்க, தெரியுமில்ல ?  கவுன்சிலர் சீட்.. வேணுமா எடு 15 லட்சத்தை என்று சீட் கேட்பவர்களிடம் வெளிப்படையாகவே கேட்கிறார்களாம்! அப்ப உளவுத்துறை..? அந்தந்த நபர்களுக்கு அப்பப்போ கட்டிங் வெட்டிராங்கல்லே?   இப்படி அரசின் உளவுத் துறையை நம்பித்தான் போனமுறை பெருசு கோயிந்தா ஆச்சு!!   

--இது சென்னை நிலவரம்..வெளியூர் தகவல்களை விசாரிச்சுட்டிருக்கேன்..