28.9.11

சக்சேனாவுக்கு சன் டிவி டாட்டா அல்லது சன் டிவிக்கு சக்சேனா டாட்டா..??


சென்னை, செப் 28. : 
 சன் டிவியிலும் சன் குழுமத்தின் திரைப்படப் பிரிவிலும் பொறுப்பாளராக பதவி வகித்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. கடந்த பல ஆண்டுகளாக இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய புகார்கள் சினிமா வட்டாரத்தில் உலா வந்தன!! ஆனால் அவை சட்டப்படி பதியப் படாமல் அதிகாரவட்டாரம் இவரைக் காத்து வந்ததாக சொல்லப் பட்டது!!  தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார்.
 பல பிரச்னைகள் கலாநிதி மாறனின் கவனத்துக்கு தெரியாமலே நடந்ததாக கூறப் படுகிறது!! கைதுக்குக்குப்  பிறகு விசயங்களை விசாரித்து அதிர்ச்சியடைந்த சன் குழும நிர்வாகம் இவரை பதவியிலிருந்து விலகும் படி கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப் பட்டது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தற்காலிமாக செம்பியன் என்பவரை சிஇஓவாக நியமித்தது. அவர் மூலம் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை வாரிக் குவித்தது. தற்போது வெடி என்ற படத்தையும் வெளியிட உள்ளது. 
இதனைத் தொடர்ந்து சக்சேனா சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனை தொடர்பு கொண்டு தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்திற்கு எந்தவித கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் சன் குழுமத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தையும் கலாநிதிமாறனுக்கு அனுப்பி வைத்துள்ளார். கலாநிதிமாறன் அக்கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என சக்சேனாவின் வழக்கறிஞர் சொல்கிறார்!!

இது எப்படி இருக்கு?

சிதம்பர ரகசியம்னாங்க!! இதுதானா அது...?