15.10.11

கனம் கோர்ட்டார் அவர்களே..!!!

வன்முறையைப் படம் எடுத்த பத்திரிகையாளர்கள் மீது கோவை வக்கீல்கள் தாக்குதல்!

"அட போப்பா.... இது என்ன புதுசா?  வக்கீல்கள் என்னவும் செய்யலாம்.. பஸ்ஸில கண்டக்டர்கூட தகராறுன்னா அவரை அடிப்போம்! ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தவர்களை கார் ஏற்றிக் கொல்ல  முயன்றவர்கள் மீது போலீஸ் வழக்குப் போட்டால் அவர்களையும் அடிப்போம்! குடிச்சுட்டு கோர்ட்டுக்குள்ளேயே கலாட்டா செய்வோம்! அதைச் சுட்டிக் காட்டினால் அவர்களையும் அடிப்போம்! சாலையில் காரில் போகிற பொதுமக்களையும் தாக்குவோம்! அதை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது! படம் எடுக்கவும் கூடாது.. படம் எடுத்தால் அடிப்போம்..உதைப்போம்!  மீறி யாராவது நீதிபதி விசாரித்தால் அவரையும் சேம்பருக்குள் புகுந்து தாக்குவோம்! இதெல்லாம் நடந்தும் யாரும் எங்களை ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரியலே? நீதிபதிகிட்ட மட்டும் கொஞ்ச நாட்களுக்குள் சமாதானமாகி விடுவோம்!!" 
என்று உலவுகிற வக்கீல்களைப் பார்த்து ஒரே ஒரு கமென்ட் :  
-------நல்லாருக்குடா உங்க நியாயம்..!!