28.11.11

அண்ணாச்சி கடையும் ஆறுமாத பாக்கியும்....

  னது புதியபடமான இளமை நாட்கள் தொடர்பான பணியிலிருந்த இயக்குனர் விக்கிரமனைச் சந்தித்தேன்!! பொதுவாக எங்கள் சந்திப்பின் போது நாங்கள் சினிமா பற்றி பேசுவது மிகவும் குறைவு! சினிமா அல்லாத பிற விஷயங்கள் குறித்துத்தான் பெரும்பாலும் எங்கள் விவாதம் இருக்கும்!!  சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதித்த அந்த நேரத்தில் அதை எதிர்த்து தனது கருத்துக்களை ஆவேசமாக எடுத்து வைத்தவரிடம் உங்கள் வாதத்தை அறிக்கையாக அனுப்புங்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்!! அதற்குப் பிறகு மத்திய அரசின் அனுமதி தமிழகத்திற்குப் பொருந்தாது! தமிழக அரசு அதை முழுமையாக எதிர்க்கிறது என்று முதல்வர் அறிவித்து விட்டாலும் விக்ரமனின் அறிக்கையினுள்ளே பொதிந்திருக்கும் மனிதாபிமானம்,    நடுத்தர ஏழைக் குடும்பங்களுடைய வாழ்வியல் நிதர்சனம் ஆகியவற்றிற்காக அதை அப்படியே கீழே பதிந்திருக்கிறேன்   :-


"சில்லறை வணிகத்தில் 51 % அந்நிய முதலீட்டை அங்கீகரிப்பதென மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. “உலக பொருளாதர மயமாக்கல்”(Globalization) என்னும் கொள்கையால் இந்திய உற்பத்தி பெரிதும் பாதிக்கபட்டு இருக்கும் சூழ்நிலையில் சில்லறை வணிகத்தை அடியோடு முடக்கும் செயல் இது என்று நான் கருதுகிறேன்.”வால்மார்ட்” போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும் போது மிகவும் குளிரூட்டப்பட்ட கடைகளை ஆரம்பிக்கும். (Air Conditioned Shops). வாடிக்கையாளர்களை கவர ஆரம்பத்தில் பல சலுகைகளை அறிவிக்கும்.ஏற்கனவே வெளிநாட்டு மோகம் கொண்ட நமது நாட்டு நாகரீக இளைஞர்கள் இவைகளை மட்டுமே தேடிச் செல்ல தொடங்குவார்கள். இதனால் நமது சில்லறை வணிகர்களின் வியாபாரம் மெல்ல மெல்ல நலிவடைந்து ஆறுமாதத்துக்குள்ளோ அல்லது ஒரு வருடதுக்குள்ளோ கடையை மூடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதன்பின் தான் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தன் சுயரூபத்தை காட்டும்.சில்லறை வணிகத்தில் ஏகபோக உரிமை இவர்களின் கைக்கு வந்த பிறகு இவர்கள் வைப்பது தான் விலை.வேறு வழியின்றி வாங்கித்தான் தொலைக்க வேண்டும்.இது போன்ற பெரிய கடைகள் தரமானவை என்ற ஒரு தவறான எண்ணத்தை நமக்குள் நாமே வளர்த்துகொண்டு இருக்கிறோம். எப்படி கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் ஊடுருவியதோ அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் இதுவும்.நமது நாட்டில் சில்லறை வணிகர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் வெறும் வணிகர்கள் மட்டுமல்ல நமது உறவினர்கள்.நமது மண்ணில் பிறந்தவர்கள். நமது கஷ்டம் தெரிந்தவர்கள்.

தமிழ்நாட்டில் அநேகமான எல்லா கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒரு “ அண்ணாச்சி” கடை வைத்திருப்பார். இந்த கடைகளில் பெரும்பாலும் ஏழை,நடுத்தர மக்கள்தான் பொருட்கள் வாங்குவார்கள்.பல நேரங்களில் நாம் இவர்கள் கடையில் கடன் சொல்லி தான் வாங்குகிறோம்.சிலரால் ஆறுமாதங்களாகியும் கடனை திருப்பிக்கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவும்.தயங்கி தயங்கி அண்ணாச்சி கடையில் மீண்டும் 2 கிலோ அரிசி , 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் நல்லெண்னை என்று கடன் கேட்ப்போம்.நமது குடும்ப நிலைமை தெரிந்து கொண்ட அந்த அண்ணாச்சியும் “ஏற்கனவே ஆறு மாதமா பாக்கி இருக்கு என்று மெதுவாக சொல்லிக்கொண்டே , சரி என்ன செய்ய? உங்க வீட்டுக்காரர் ஆறு மாசமா படுத்த படுக்கையா இருக்காரு, நீங்க என்ன பண்ணுவீங்க,பணம் வந்ததும் மொதல்ல என் கடனை செட்டில் பண்ணிடுங்க” என்று சொல்லி மீண்டும் நாம் கேட்ட பொருளை கொடுக்கத்தான் செய்வார்.பணத்தை திருப்பி கொடுத்ததும் 500 ரூபாய்க்கோ,1000 ரூபாய்க்கோ பொருள் வாங்கினால் நாம் “கொசுறு” என்று எதாவது கேட்ப்போம்.அதையும் சிரித்த முகத்துடன் தருவார்.இது போன்ற பாசமிக்க உறவை, நாம் கஷ்டப்படும்போது கடன் தந்து உதவும் பண்பை, இந்த பன்னாட்டு நிருவனங்களிடம் நாம் எதிர்ப்பார்க்க முடியுமா?சில்லறை வணிகத்தில் ஈடுப்பட்டுள்ள எவருமே பெரிய கோடிஸ்வரர் ஆகி விடுவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஓரளவிற்கு நியாயமான விலையில் விற்பதால் பெரிய லாபத்தை ஈட்டுவது இல்லை.அதை நீங்கள் உள்ள தெருவில் 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் கடை வைத்திருக்கும் கடைக்காரரை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.ஆனால் இப்பொழுது சில்லறை வணிகத்தில் கால் பதிக்க இருக்கும் “வால்மார்ட்” நிறுவன முதலாளி சில ஆண்டுகளுக்கு முன்பு “பில்கேட்ஸை” மிஞ்சிய கோடிஸ்வரர்.

ஆகவே சகோதரர்களே,சகோதரிகளே, நம்மில் ஒருவராக நம்மை நம்பியே வாழும் நமது தெரு பூர்விக சில்லறை வணிகர்களை தொடர்ந்து ஆதரிப்போம்.மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்ப்போம்.மீறி அந்த நிறுவனங்கள் இங்கு கால்பதிக்குமே ஆனால், நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அதை முழுமையாக நிராகரிப்போம்.நிச்சயம் இதில் ஒன்றுப்பட்டு தமிழ் இனம் ஜெயிக்கும்.தமிழர்களின் ஒற்றுமை உலகத்திற்கு தெரியும்.நாம் ஜெயித்துக்காட்டினாலே மற்ற மாநிலங்களும் நம்மை பின் பற்றி இந்த பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்கும்.இது நமது சகோதரர்களுக்காக நாம் கொடுக்கும் குரல். ஒன்று படுவோம் . அந்நிய சக்தியை விரட்டியடிப்போம்."
--விக்கிரமன்        

ஒருவழியாக வந்தியா?

--கனிமொழி ஜாமீன் குறித்து கருணாநிதி கருத்து!!  

கனிமொழிக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்! அப்போது அவர், கனிமொழி தன்னைப் பார்க்க வரும்போது "அப்பாடா... வந்தியா? என்று கேட்பேன் எனக் கூறியுள்ளார். செலக்டிவான இந்த பேட்டி பற்றி அவருடைய இல்லத்திலிருந்து பத்திரிகையாளர்களுக்கு தரப் பட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை பின் வருமாறு ( இதைத்தான் தங்கள் நிருபர்களே கேள்வி கேட்டது போல நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன) :-

செய்தியாளர் :- கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இப்போது உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?
கருணாநிதி பதில் :- மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கேள்வி :- அவர்கள் வந்தவுடன் முதலில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் :- அப்பாடா! வந்தியா?
கேள்வி :- நீங்கள் இப்போது டெல்லி செல்கிறீர்களா?
பதில் :- இல்லை.
கேள்வி :- கனி இன்றைக்கே சென்னை வருகிறார்களா? எப்போது வருகிறார்கள்?
பதில் :- இன்னும் தெரியவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் வர வேண்டும்.
கேள்வி :- இவ்வளவு நாள் தாமதமாக ஜாமீனில் விட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள சட்ட விதி முறைகளைப் பற்றி நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
பதில் :- ஜாமீன் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைய வேண்டிய நேரத்தில் தாமதத்திற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்க முடியாது.
கேள்வி :- சிறையில் ஆறு மாத காலம் கஷ்டங்களை யெல்லாம் கனிமொழி அனுபவித்திருக்கிறார்கள். அதற்காக இப்போது கட்சியில் ஏதாவது பெரிய பதவி கிடைக்குமா?
பதில் :- “அப்பா” என்ற முறையில் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். “தலைவர்” என்பதற்காக நான் சர்வாதிகாரி அல்ல. எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே கட்சிதான் எந்த முடிவையும் செய்யும்.
கேள்வி :- சென்னைக்கு எப்போது வருகிறார்கள் என்பது நிச்சயமாகி விட்டதா?
பதில் :- எப்போது வருகிறார் என்று தெரியவில்லை. நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் மற்றவர்களும் அங்கே இருக்கிறார்கள். வழக்கறிஞர்களோடு நீதி மன்றத்தில் கலந்து பேசி சொல்வார்கள்.
கேள்வி :- தற்போது கிடைத்துள்ள ஜாமீன், வழக்கில் பிறகு கிடைக்கக் கூடிய வெற்றிக்கு முன்னுதாரணமாக இருக்குமா?
பதில் :- நான் நீதிமன்றங்களைப் பற்றியும், வழக்கின் போக்குகள் பற்றியும் விவாதிப்பது முறையல்ல!
கேள்வி :- தற்போது கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், ராஜாவையும் ஜாமீன் போடச் சொல்லி வற்புறுத்துவீர்களா?
பதில் :- அதைப் பற்றி ராஜா என்னுடைய கருத்துக்களைக் கேட்டால் உரிய கருத்துக்களைச் சொல்வேன். இதுவரை ராஜா அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை.
கேள்வி :- கனிமொழியை ஜாமீனில் விட்ட பிறகு, தான் ஜாமீன் கேட்பது பற்றி முடிவு செய்வேன் என்று ராஜா சொல்லியிருந்தாரே?
பதில் :- என்னிடம் கலந்து பேசி, அவர் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.
கேள்வி :- கனிமொழி ஜாமீன் பெற்று சென்னைக்கு வரும்போது, கட்சித் தொண்டர்களின் வரவேற்பு பெரிதாக இருக்குமா? பலமாக இருக்குமா? ஏற்பாடு செய்யப்படுமா?
பதில் :- வரவேற்பு இருக்கும். அது பலமாக இருக்குமா, பெரிதாக இருக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆறு மாதங்களாக சிறையிலே இருந்து விட்டு வருகிறார். உள்ளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டு வரவேற்றால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
கேள்வி :- கனிமொழியின் தாயார் எப்படி இருக்கிறார்?
பதில் :- அவர் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தாய் உள்ளம் அல்லவா?

மிஸ்டர் கார்த்தி எப்ப ஹைதராபாத் கிளம்புறீங்க?

மிழ் சினிமாவில் வாய்க்கொழுப்பு அதிகமுள்ள நடிகர் என்று அந்தக் காலத்திலேயே பேசப் பட்டவர் சிவகுமார்! இப்போது அவருடைய புத்திரர்கள் இருவரும் நடிகர்களாகி விட்ட பிறகு அவருடைய "உபதேசம்" அதிகமாகிவிட்ட நிலையில் அவருடைய இரண்டாவது மகனும் நடிகருமான கார்த்தியும் தந்தையை மிஞ்சும் தனயனாகி விட்டார்- வாய்க்கொழுப்பில் !!  ஒரு தெலுங்கு திரைப்படவிழாவில் கலந்துகொண்ட நடிகரிடம் நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்கும் சுந்தரத்தெலுங்கைச் சேர்ந்த சுமாரான ஒரு பெண்மணி கேட்ட கேள்வி இது:  சார் உங்களுக்கு தமிழ் ரசிகர்களைப் பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்களைப் பிடிக்குமா?
இந்தக் கேள்விக்கு வாய்க்கொழுப்பு நடிகன் கார்த்தியின் பதில் இது: 
நிச்சயமா தெலுங்கு ரசிகர்களைத்தான்..தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு பிரேமுக்கும் கை தட்டி விசிலடிச்சு ரசிக்கிறாங்க..ஆனா தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லே.. (இங்கே அதன் வீடியோ இணைக்கப் பட்டுள்ளது!) 
--கார்த்தி இப்படிப் பேசியிருப்பது குறித்து அவருடைய ரசிகர்களிடம் அந்த வீடியோக் காட்சியைப் போட்டுக் காட்டி கருத்து கேட்டோம்..
உணர்ச்சிவயப் பட்ட நிலையில் அவருடைய ரசிகர்கள் சொன்னது இது:
ங்கோய்யல்ல.. அப்புறம் என்ன மசி.... க்கடா தமிழ்ல நடிக்கற..? போய் ஆந்திராவிலேயே நடிக்க வேண்டியதுதானே..
--அவர்கள் சொல்வதும் நியாயம்தானே.. மிஸ்டர் கார்த்தி எப்ப ஹைதராபாத் கிளம்புறீங்க? 
--தமிழன்டா.