2.12.11

கமிஷனர் அலுவலத்தில் வழக்கு --டிஜிபி அலுவலகத்தில் ஸ்டாலின் ஆஜர் !!

 வீடு அபகரிப்பு தொடர்பாக சென்னை பெருநகர கமிஷனர் அலுவலத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்அதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக டிஜிபி அலுவலகம் வந்தார். டிஜிபி அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி ராஜேந்திரனை சந்தித்துப் பேசினார்!!
   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "என் மீதும் குடும்பத்தார் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன."என்றார்.
"பொதுவாக அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்ட பின்னர்தான் எஃப்ஐஆர் போடுவார்கள். ஆனால் எஃப்ஐஆர் போடப்பட்ட பின்னரும் என்னைக் கைது செய்யுங்கள் என்று நான் கூறியும் அவர்கள் கைது செய்யவில்லை. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்" என்று ஸ்டாலின் கூறினார்.
     இது பற்றி காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம் : 
"இது அரசியல் லாபத்திற்காக போடப் பட்ட வழக்கு என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டி இந்த ஸ்டண்ட்டை அவர் செய்துள்ளார்! நியாயமாக அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்? விசாரணை அதிகாரி முன்பு ஆஜராவதை விடுத்து டிஜிபி அலுவலகம் சென்றது சட்டப் படி சரியானதல்ல.." என்றார் அவர்.

ஒஸ்தி பட சாட்டிலைட் உரிமம் ரத்து --சன் டிவிக்கு ரிலையன்ஸ் நோட்டீஸ் !!

ஸ்தி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவிக்கு விற்றிருந்தது ரிலையன்ஸ் நிறுவனம்!! ஏற்கனேவே சன் டிவிக்கும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத்திற்கும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது! சன் பிக்சர்ஸ் படங்களைத் திரையிட்ட வகையில் சங்க உறுப்பினர்களுக்கு (தியேட்டர் அதிபர்கள்) மொத்தம் 65 லட்சம் ரூபாய் வரை சன் பாக்கி வைத்துள்ளதாம்! திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் இது தொடர்பாக பேசிய போது சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி செம்பியன் எக்குத்தப்பாக பேசி விடவே பிரச்னை பெரிதாகி விட்டது. இதையடுத்து 65 லட்ச ரூபாயை பைசா பாக்கியில்லாமல் செட்டில் செய்யும் வரை சன் தொடர்புள்ள எந்தப் படங்களுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என தி.உ .ச தீர்மானம் நிறைவேற்றி சர்க்குலரும் அனுப்பி விட்டதாம்! இதனால் ஒஸ்தி பட ரிலீஸ் பாதிப்புக்குள்ளாகலாம் என்ற நிலைமையில் திரையரங்க உரிமையாளர்களுடனான உங்கள் பிரச்னையை உடனடியாகத் தீர்த்து கொள்ளுங்கள்! இல்லாவிட்டால் ஒஸ்தி படத்தின் சாட்டிலைட் உரிமையையை ரத்து செய்து விடுவோம்.. என்று ரிலையன்ஸ் சன்னுக்கு நோடீஸ் அனுப்பி விட்டது!!
     சன் நிறுவனமோ நாங்கள் தரவேண்டியது 36 லட்ச ரூபாய்தான்...அவர்கள் 65 லட்ச ரூபாய்க்கு ஆதாரம் காட்டினால் தருகிறோம்.. உரிய ஆதாரங்கள் இல்லாமல் எப்படித் தர முடியும்? என்கிறது.. இவ்வளவு பிரச்னை நடந்து கொண்டிருந்தாலும் தமிழக விநியோக உரிமையை மொத்தமாக 22 கோடிக்கு வாங்கியிருக்கும் டி.ராஜேந்தர் தன்னுடைய வழக்கமான சுபாவத்திற்கு மாறாக, கூலாக நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்!! சிம்பு படத்தில் பிரச்னை ஏற்பட்டு விடாதா என ஏங்கிக் காத்திருந்த அவருடைய எதிர்கோஷ்டி இரண்டு பக்கமும் உசுப்பேற்றி விட்டு சண்டையை வேடிக்கை பார்க்க தயாராக இருப்பதால்தான் எளிதில் உணர்ச்சிவசப் படும் ராஜேந்தர் சாந்த சொரூபியாகிவிடாராம்!