18.1.12

போலீசுக்கு இதயமும் இல்லை.. மூளையும் இல்லை..

சென்னை கல்லூரி ஆசிரியையுடன் நாளை திருமணம் நடக்க இருந்த என்ஜினீயர் மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். ஆசிரியையுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு தனது காதலியை அவர் பதிவுத்திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லி,  அதிரடி நடவடிக்கை என்ற பெயரில் போலீசார் இந்த முட்டாள் தனத்தைச் செய்திருக்கின்றனர்!! 
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வாசுதேவன். தனியார் நிறுவன மேலாளர். இவரது மகள் சுபா (வயது 24). எம்.இ. படித்து உள்ள சுபா சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
மதுரை வடக்கு ஆவணி மூலவீதி ராமன் செட்டி சந்து தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் ராஜேஷ் (28). என்ஜினீயர் ஆன இவர் சென்னையில் உள்ள ஒரு காற்றாலை மின் நிலையத்தில் முது நிலை பொறியாளராக வேலை செய்து வருகிறார். ராஜேசுக்கும் - சுபாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த 11-9-2011 அன்று நிச்சயம் செய்யப்பட்டது.
சுபாவின் சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் என்பதாலும், அவரது சித்தப்பா உள்பட உறவினர்கள் ஸ்ரீரங்கத்தில் வசிப்பதாலும் திருமணத்தை ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) நடத்துவது என முடிவு செய்து இருந்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் இருந்தே ராஜேசும், சுபாவும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
மணமகன் ராஜேசும் இடையில் ஒரு முறை திருச்சிக்கு வந்து, தங்களுக்கு தேவையான கட்டில், மெத்தை உள்பட சீர்வரிசை பொருட்களை தேர்வு செய்து மணமகள் வீட்டாரிடம் வாங்கி கொடுக்கும்படி கூறி இருக்கிறார்.
இந்நிலையில் சுபா நேற்று முன்தினம் இரவு திடீர் என ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராஜேஷ் போனில் பேசும்போது, தான் சென்னையை சேர்ந்த சுஜிதா என்ற பெண்ணை கடந்த 31-10-2011 அன்று சாலவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வியாழக்கிழமை (நாளை) ராஜேசுடன் எனக்கு நடைபெற இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும், என்னை திருமணம் செய்துகொள்வதாக நிச்சயம் செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து மோசடி செய்த அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரகதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ராஜேஷ் சென்னையை சேர்ந்த சுஜிதாவை 6 ஆண்டுகளாக பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து வந்ததும், காதலியை மறக்க முடியாமல், பின்னர் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
சுபாவுடன் திருமண நிச்சயம் நடந்த பின்னர் தான் அவர் சுஜிதாவை திருமணம் செய்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து ராஜேசை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை திருச்சி ஜ×டிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாக ராஜேஷ் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர்  போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப் படுகிறது. 
இந்த புகார் தொடர்பாக ராஜேசின் தம்பி யஷ்வந்த் (24), தந்தை ராமசாமி (60), தாயார் கண்ணம்மாள் (56) ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
-----ராஜேஷ் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டால், முட்டாள் தனமாகச் செயல் பட்ட போலீசுக்கு ஆப்பு மட்டுமல்ல.. காப்பும் மாட்டலாம்..

மணி அடிச்சாச்சு!! முதல்வரின் நடவடிக்கை என்ன?

நன்றி: தினமணி 18- 01- 2012