20.7.12

புரட்சிக்கோ, கிளர்ச்சிக்கோ வக்கில்லாத தமிழகத்தில் ஏன் இத்தனை சாராயக்கடைகள்?

டி வி எஸ் என்று அழைக்கப் படுகிற சோமசுந்தரம் பத்திரிகையாளர். குடிக்கு எதிரான தனது இன்றைய கொள்கையை அனுபவபூர்வமாக விவரிக்கிறார்...

"அய்யய்யோ!" "சந்தோசம்" "நெசமா" "தொடரட்டும்" "நம்பவே முடியல" "ஏதும் பிரச்சினையா" 
- "குடிப்பதை விட்டுவிட்டேன்" என்றவுடன் நண்பர்கள் ஆற்றிய எதிர் வினை (!)களில் சிலதான் இவை.
நாலு கழுதை வயதில் பத்திரிகையில் வேலை கிடைத்து சென்னை வந்தவுடன் துவங்கியது குடிப்பழக்கம். ஆரம்பத்தில் கட்டிங்தான். நண்பர்களின் ஊக்கப்படுத்தியதால் மெல்ல மெல்ல அதிகரித்தது. பழகப்பழக இனித்தது.

தமிழ் வார இதழ்கள் போலவே, எங்கள் குழாமில், நான்கைந்து "நெம்.ஒன்"கள் இருந்தார்கள். குடிப்பதில் அவ்வளவு போட்டி.

சீக்கிரமே நானும் முதல் நிலைக்கு வந்தேன்.
மாலையில் குடிப்பது நிச்சயம், காலை முதல் குடிப்பது லட்சியம் என்ற கொள்கைப்பிடிப்புடன் வாழ்ந்தேன்.
சினிமா விமர்சனம் ஒன்றுக்கு நான் எழுதிய ஒரு வாக்கியம் பிடித்துப்போய் சாவி சார் ஐம்பது ரூபாய் கொடுத்தார். (பொற்காலம் படத்தில்... :ஊமைப்பெண்ணாக வரும் ராஜேஸ்வரி பேசப்படுவார்: )
நல்ல மனிதனாக இருந்தால் அந்த ரூபாயைப் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
நான் அந்த காசிலும் குடித்தேன்.... மேலும் மேலும்!
தொடர்ந்து குடி.
பிச்சைக்காரனுக்கு ஐநூறு ரூபாய் போட்டு... , ஆத்ம நண்பனை அடித்து... :நயம்: குடிகாரன் ஆனேன்.
ஆயிற்று பதினைந்து வருடங்கள். பல பத்திரிகைகள், பல ஊர்கள், பற்பல பார்கள்.
இடையில் என்னையும் நம்பி ஒருத்தி.... வாடிய பயிராய். வயிற்றில் குழந்தை.
எத்தனையோ செருப்படி பட்டபின்னும் தொடர்ந்து குடித்தவன் யோசிக்க ஆரம்பித்தேன். குடியை நிறுத்தினேன். பலரும் சொல்வது போல குடியை நிறுத்துவது ஒன்றும் ஸ்பெக்ட்ரம் அளவுக்கு பெரிய விசயம் எல்லாம் கிடையாது நண்பர்களே....
ஒரு வேளை நீங்கள் குடிப்பவராக இருந்தால்... நிறுத்திப் பாருங்கள்.... மது தரும் போதையை விட, "மனத்தெம்பு" தரும் திருப்தி அலாதியானது.
எனது சந்தேகம் எல்லாம் ஒன்றுதான்.
"மக்கள் புரட்சி செய்யும் மன நிலையில் இருந்தால், ஏராளமான மதுக்கடைகளைத் திற" என்று அர்த்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறானாம் சாணக்கியன்.
புரட்சிக்கோ, கிளர்ச்சிக்கோ வக்கில்லாத தமிழகத்தில் ஏன் இத்தனை சாராயக்கடைகள் என்பதுதான் எனக்குள் சுற்றும் கேள்வி!

பறக்கும் ஹெலிகாப்டரில் டூப் இல்லாமல் அஜித் சண்டை..ஏ எம் ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்திற்காக  ஒரு  சண்டைக்காட்சியில் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார்  அஜித்குமார் !  வானில் பறக்கும் ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டே சண்டையிடும் காட்சியில் டூப் இல்லாமல் தானே நடித்திருக்கிறார் அவர். அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப் பட்ட வீடியோ  இது.. 

அது போன மாசம் ...இது இந்த மாசம்!!


அரிமா மாவட்டத்தின் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா

அனைத்துலக அரிமா சங்கத்திற்குட்பட்ட  324 A5 மாவட்டத்தின் ஒன்பதாவது புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நாளை மாலை 5    மணிக்கு சென்னை மியூசிக் அகாடமி அரங்கத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு அரிமா மாவட்ட தலைவர் பி. சத்திய நாராயணமூர்த்தி   தலைமை வகிக்கிறார்.    அனைத்துலக அரிமா சங்கத்தின் முன்னாள் இயக்குனர் அரிமா நரேந்திர பண்டாரி புதிய நிர்வாகிகளுக்கு  பதவி பிரமாணத்தை செய்து வைக்கிறார். அனைத்துலக அரிமா சங்கத்தின் இயக்குனர் சுனில் குமார். அதே நிகழ்ச்சியில் அரிமா மாவட்டத்தின் DISTRICT  DIRECTORY  கையேடு மற்றும் Lion 's  Arise  மாத இதழ் ஆகியன வெளியிடப் படுகின்றன.    கடந்த மாதம் தென் கொரியா நாட்டில் உள்ள புசான் நகரத்தில்   ஒன்பதாவது புதிய அமைச்சரவையின் ஆளுநராக டாக்டர் எஸ் பி  பாஸ்கரன் பதவி ஏற்றுக் கொண்டார். 
நாளை நடைபெறும் விழாவில் மாவட்ட முதல் துணை ஆளுநர் அரிமா எஸ் வெங்கட்ராமன், இரண்டாம் துணை ஆளுநர் கே எஸ் கண்ணன்,   மாவட்ட செயாலளர், பொருளாளர், மண்டல- வட்டார  தலைவர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பதவி ஏற்கின்றனர்.    324 A5 அரிமா மாவட்டத்தின் சார்பாக கண் தானம், நீரிழிவு நோய் பரிசோதனை, டயாலிசிஸ், கல்வி உதவி, ரத்த தானம் என தொடர்ந்து சேவை திட்டங்கள் செயல் பட்டு வருவதாக    அரிமா  டாக்டர் எஸ் பி  பாஸ்கரன் தெரிவித்தார்.