19.12.13

தேவ்யாணி மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகை......

நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....

14.12.13

எம்பிக்களின் லட்சணம்...

மாட்டிக்கொண்ட "மாண்புமிகு"க்கள்!!


நம் எம்பிக்களின் லட்சணத்தை டெல்லியிலிருந்து வெளிவரும் கோப்ரா போஸ்ட் என்னும் இணைய ஊடகம் அம்பலப் படுத்தியிருக்கிறது! இல்லாத  ஒரு வெளிநாட்டு எண்ணை நிறுவனத்தின் ஊழியராக அறிமுகம் செய்துகொண்டு மத்திய அரசுக்கு சிபாரிசுக் கடிதம் கேட்டு ஸ்டிங் ஆபரேஷன் செய்திருக்கிறது கோப்ரா போஸ்ட்!
சிபாரிசுக் கடிதம் என்றால் சும்மா அல்ல!! பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 எம்பிக்கள், தலா ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டுதான் தங்கள்  லெட்டர்பேடில் ஸ்ட்ராங்காக சிபாரிசு செய்திருக்கின்றனர்!  இந்த லிஸ்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 எம்பிக்கள்  சிக்கியிருக்கிறார்கள்! இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்!! பொள்ளாச்சி தொகுதியின் எம்பி சுகுமாரும் தென்சென்னை எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரனும்தான் அவர்கள்!!  11 பேரிடமும் பேரம் பேசியது, அவர்களிடமோ அல்லது அவர்களுடைய உதவியாளர்களிடமோ பணத்தை கொடுப்பது, பிறகு சிபாரிசுக் கடிதத்தை பெறுவது உட்பட அனைத்தையும் ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து தங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது கோப்ரா போஸ்ட்!  நம்ம ஊர் எம்பிக்கள் சம்பந்தப் பட்ட வீடியோக்களை மட்டும் இங்கே நாம்  பார்க்கலாம்!!
29.10.13

என்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்


அது ஒரு விளம்பர படப்பிடிப்பு!! அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் "அஞ்சு பத்துக்கு போகணும்" என்கிறார்! 

உடனே அந்த ஊழியர் "ஏன்? நீ நல்லாத்தானே இருக்கிறே? ஆயிரம் ஐநூறுக்குப் போகலாமே" என்கிறார்!! 

இது நகைச்சுவையாம்!! என்றென்றும் புன்னகை படத்தில் வருகிற காட்சி இது! 

இந்த நகைச்சுவையை உதிர்த்திருப்பவர் பெயர் சந்தானம்!! இந்தப் பட விழாவில் கமலும் இயக்குனர் பாலாவும் கலந்து கொண்டு "சிறப்பித்திருக்கிறார்கள்"-
மாதரசிகள் த்ரிஷா - ஆண்ரியா - ரம்யா ஆகியோர்கள் முன்னிலையில் மேலே சொன்ன அபாரமான காட்சி திரையிடப் பட்டது!! 
அட, ஆண்கள்தான் ஆணாதிக்க சிந்தனையில் இருந்தார்கள் என்றால் இந்த மாதரசிகளும் இளித்து, ஈசிக்கொண்டிருந்தார்களே தவிர ஒரு வகையிலும் எதிர்ப்பைக் காட்டவில்லை! 
சரி இணையத்தில் யாராவது ஒரு "பெண்ணீயப்" போராளி அல்லது அவர்களது போர்ப்படைத்தளபதிகள் இதற்கு எதிர்ப்பையோ கண்டனத்தையோ தெரிவித்தார்களா என அலசிப் பார்த்தோம்!!  எதுவும் படவில்லை!! 
இதை நாம் பெண்ணியம் என்கிற குறுகிய கோணத்திலோ ஆணாதிக்க சிந்தனை என்கிற மட்டமான கோணத்திலோ பார்க்கவில்லை! 
இதை மனிதத்திற்கு எதிரான செயலாகவே பார்க்கிறோம்!!! அடிப்படை மனிதப் பண்புள்ள யாருமே இம்மாதிரி மட்டமான காட்சியில் நடிக்க மாட்டார்கள்! எடுக்க மாட்டார்கள்! ரசிக்க மாட்டார்கள்!!
அந்த ட்ரெயிலர் தணிக்கையில் அனுமதி பெற்றிருந்தால் அதை தணிக்கை செய்தவர்கள் கண்டிக்கவும் தண்டிக்கவும் படவேண்டியவர்கள்! அந்தக் காட்சி இனிமேலும் டிரைலர் அல்லது படத்தில் இடம் பெற்றால் அதை தணிக்கை செய்தவர்கள், சம்பந்தப் பட்ட காட்சியில் நடித்தவர்கள், அதை எடுத்தவர்கள், அதற்கு இசை அமைத்தவர்கள், தயாரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என இதன் மூலம் எச்சரிக்கிறோம்!! 
--அதற்கு முன்பாக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் தமிழ்க்குமரனை (பாமக தலைவர் ஜிகே மணியின் மகன்) அவர்களுடைய கட்சியின் அறைகூவல்படி, அன்புமணி ராமதாஸ் நடுத்தெருவில் நிற்க வைத்து சவுக்கால் அடிக்க சிபாரிசு செய்கிறோம்!!!-


-இதையொட்டி நாம் மத்திய தணிக்கை வாரியத்திற்கு மின்னஞ்சலும் அனுப்பியிருந்தோம்!  அதற்கு தணிக்கை அதிகாரி பக்கிரிசாமி அனுப்பியிருக்கும் பதில் இங்கே....