22.12.16

கிரிஜா வைத்தியநாதன் யார்???
வருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த கிரிஜா வைத்தியநாதன்?

01.7.1959ல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர் கிரிஜா வைத்தியநாதன், நலவாழ்வு பொருளாதாரம் தொடர்பான ஆய்வு படிப்பை மேற்கொண்டு ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1981ம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். கிரிஜா வைத்தியநாதனின் தந்தை வைத்தியநாதன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து ஓய்வு பெற்றவர்.

மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறை, கல்வித் துறைகளில் உயர் அதிகாரியாக இருந்து பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறையில் மட்டும் 15 ஆண்டுகள் பணியாற்றி குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்துள்ளார்.
சமூக நல்வாழ்வு துறையிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்,

இவருடைய பெயர் கடந்த முறையே தலைமைச் செயலாளர் பொறுப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அப்போது, கிடைக்காத பொறுப்பு தற்போது கிடைத்துள்ளது. தற்போது தலைமைச் செயலாளர் பொறுப்போடு நிர்வாக சீர்த்திருத்தத் துறையையும் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், இவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நடிகர் எஸ்.வி.சேகரின் உடன் பிறந்த சகோதரரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

21.12.16

சாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:இன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல்  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரித்துறையினரின் திடீர் சோதனை தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தலைமைச் செயலாளர் என்றால் யார் ? அவர் பணி என்ன? அரசியல்வாதிகள், அரசுத்துறையினருக்கு மட்டுமே பரிச்சயப்பட்ட இந்த பதவியைப் பற்றி, சாமானிய மக்களுக்கும் விளக்கும் விதமான ஒரு சிறிய செய்திக்குறிப்பு இதோ:

தமிழக அரசின் தலைமைச் செயலர்/தலைமைச் செயலாளர் என்பவர் தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஒரு மூத்த 'இந்திய ஆட்சிப் பணி' (IAS) அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பாளர்.

இவர் தமிழக அரசுத்துறைகளில் நேரடியாக அத்துறையின் அமைச்சரின் கீழ் செயல்படுவார். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு பெற்றுப் பின் சார் ஆட்சியாளர்களாகவோ, கூடுதல் மாவட்ட ஆட்சியாளர்களாகவோ அல்லது அதற்கு இணையான பணிகளிலோ நன்கு அனுபவம் பெற்ற பின் மாவட்ட ஆட்சியாளர்களாக அல்லது அதற்கு இணையான பணிகளில் நன்கு அனுபவம் பெற்றவர்களாக இருப்பர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக கூடுதல் செயலாளர்கள் அல்லது இணைச் செயலாளர்கள் இருப்பர். இவர்களும் இந்திய ஆட்சியியல் மற்றும் நிருவாகவியலில் மிகுந்த திறமை மிக்கவர்களாக இருப்பர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக துணைச் செயலர்கள் இருப்பர். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளில் தேர்வு பெற்ற பின் சில பயிற்சிகளுக்குப் பின்னர் பணியமர்த்தப்படுவர்.

தற்போதைய தலைமைச் செயலாளர் : திரு.ராம்மோகன் ராவ் IAS, ஆந்திர மாநிலம் பிரகாஷம் மாவட்டத்தைச் சேர்ந்த இவரை, கடந்த ஜுன்-8ம் தேதியன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

26.9.16

ஆண்டவன் கட்டளை விமர்சனம்       ஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதிருக்கிறார்கள். விஜய் சேதுபதி, ரித்திகா சிங், நாசர், பூஜா தேவாரியா, வெங்கடேஷ், சிங்கம் புலி, யோகி பாபு, மற்றும் சிவஞானம் அரவிந்தன் என்ற ஒரு பெரிய நடிகர் பட்டாளத்துடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் "ஆண்டவன் கட்டளை".

         சமூகத்தில் வாழும் ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞனுக்கு இருக்கும் பொறுப்புகளும் ஆசைகளும் நிறைந்த மனநிலையையும், அவர் வாழ்க்கையில் படும் துன்பம் மற்றும் இன்பங்களை மிகவும் எதார்த்தமாகவும்  நகைச்சுவையாக பரிமாரியிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர். போலி ஆவணங்களால் ஏற்படும் பிரச்சினைகள் தான் இத்திரைப்படத்தின் கதை.

          நாம் அறியாமல் செய்கின்ற சிறிய தவறு, பின்னர் அதுவே வாழ்வில்  பிரச்சனையாக வந்து கஷ்டத்தை தரும்! இதுதான் படத்தின் ஒன் லைன்!

        மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் சேதுபதி. தான் வாங்கிய கடனை அடைப்பதர்க்காக வெளிநாட்டுக்கு சென்று பணம் சேர்க்கும் வழக்கமான ஆசையில் சென்னைக்கு வருகிறார். அங்கு ஒரு ஏஜென்டை அனுகி, அவர்  மூலம் லண்டன் விசாவிற்க்கு முயற்சி செய்கிறார். ஆனால் தனக்கு திருமணம் ஆனது போன்று விசா அப்ளிகேஷனில் காட்டினால்தான் விசா கிடைக்கும் என்று ஏஜென்ட் சொல்ல, அதற்கு கார்மேக குழலி என்று தனது மனதில் தோன்றிய பெயரை குடுத்துவிடுகிறார்.

    இவருடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் வருகிறார். அதிர்ஷ்டவசமாக யோகி பாபுவுக்கு  விசா கிடைத்து விட விஜய் சேதுபதிக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் சென்னையிலேயே தங்கி விசா கிடைக்கும் வரை எதாவது ஒரு வேலைபார்ப்போம் என்று முடிவு செய்கிறார். அப்போதுதான் நாசர் நடத்தும் நாடகக்கூடத்தில் கணக்காளராக வேலை கிடைக்கிறது. விஜய் சேதுபதி ஆர்வத்துடனும் ஈடுபாடுடனும் வேலை செய்வதைப்பார்த்து நாசருக்கு மிகவும் பிடித்து விடுகிறது.

        நன்றாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடிரென ஒரு திருப்பம் வருகிறது.  நாசரின் நாடகக்கூடம்  முலம் லண்டனுக்கு செல்ல வாய்ப்பு ஒருபுறம் இருக்க, விஜய் சேதுபதி தனது  பாஸ்ப்போர்ட்டில் இருக்கின்ற  கார்மேக குழலி என்ற பெயரை மாற்றவேண்டும் என்று முடிவுசெய்கிறார்.

      இதற்கு என்ன செய்யவேண்டும் என்று வக்கீலிடம் போகும் விஜய் சேதுபதி, 'அதற்கு முதலில் டைவர்ஸ் வாங்கணும், அதே பெயரில் இருக்கற எவரோ ஒருவரின் ஐடி வேணும்' என்கிறார்கள். டிவி சேனல் ஒன்றில்  செய்தியாளராக பணிபுரியும் ரித்திகா சிங் பெயரும் கார்மேக குழலி என்று அறிந்து அவரிடம் உதவி கேட்கிறார்கள். இதற்கு அவர் ஒப்புக்கொண்டாரா, பாஸ்போர்ட் என்ன ஆகிறது, லண்டன் போன யோகி பாபுக்கு என்ன ஆகிறது?? நாசர் தனது குழுவினருடன் லண்டன் செல்கிறாரா? என்பதே மீதிக்கதை.

       அருள்செழியனின் கதை  கண்முன் நடக்கிற தவறான வழிகளை நாமும் தேர்ந்தெடுத்தால்  பிரச்சனைகளை மட்டும் சந்திக்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார். திரைக்கதை மெல்லமாக சென்றாலும், ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, தெளிவான முறையில் சொல்லியிருக்கிறார்கள்.

           விஜய் சேதுபதி வழக்கம் போல தனது பாணியில் நடிப்பை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார். ரிப்போர்ட்டராக ரித்திகா சிங் துணிச்சலும் தைரியமும் நிறைத்த பெண்ணாக பிரதிபலிக்கிறார். யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவை பாங்குடன் இருக்கிறது. இலங்கைத் தமிழராக வரும் சிவஞானம் அரவிந்தின்  நடிப்பும் மனதில் நிற்கிறது. நாசர், பூஜா தேவாரியா, வெங்கடேஷ், சிங்கம் புலி ஆகியோருக்கு படத்தில் சொல்லுமளவிற்கு காட்சிகள் இல்லை.

     கே இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை திரைப்படத்தின் பலம். திரைக்கதை, வசனங்கள், கதைக்களம், கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்கள் என்று மொத்தத்தில் "ஆண்டவன் கட்டளை" ஒரு நிறைவான திரைப்படம்.

25.9.16

தொடரி விமர்சனம்


     சத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீர்த்தி சுரேஷ், கருணாகரன், ராதா ரவி, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், இமான் அண்ணாச்சி, ஆர்.வி.உதயகுமார், ஹரிஷ் உத்தமன், ஏ.வெங்கடேஷ் மற்றும் சின்னி ஜெயந்த் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் "தொடரி".

           டெல்லியில் இருந்து சென்னை வருகிற ரயிலில், பேன்ட்ரியில் வேலை செய்பவர் பூச்சியப்பன் (தனுஷ்). அவருடன் வேலைபார்ப்பவர்கள் வைரம் (கருணாகரன்) மற்றும் பேன்ட்ரி மேனேஜர் தம்பி ராமையா. அதே ரயிலில் பயணம் செய்யும் நடிகை ஸ்ரீஷாவை தம்பி ராமையா ரூட்விட, தனுஷிடம் உதவி கேட்கிறார். தனுஷ் நடிகையுடன் ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையுடன் அவரை பார்க்க செல்லும் பொழுது, ஸ்ரீஷாவின் டச்-அப் சரோஜாவை (கீர்த்தி சுரேஷ்) பார்த்தஉடன்  காதலில் விழுகிறார். சினிமாவில் பாட்டு பாடவேண்டும் என்று ஆசை கொண்ட கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர் ஒருவரை தெரியும், அவரை வைத்து வாய்ப்பு வாங்கித்தருகிறேன் என்று பொய்ச்சொல்லி கீர்த்தி சுரேஷிடம் பழகுகிறார் தனுஷ்.

          அதே ரயிலில் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் (ராதாரவி), அவரது பி.ஏ  மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் பயணம் செய்கிறார். ராதாராவின்  பாதுகாப்பு அதிகாரியில் ஒருவரான ஹரிஷ் உத்தமன் தனுஷை பார்த்தாலே பிடிக்கவில்லை என்று தனுஷிடம் சண்டையிடுகிறார். தனுஷும் அவரிடம் வம்பு செய்ய ஒருகட்டத்தில் தனுஷயும், கீர்த்தி சுரேஷையும் பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் ஹரிஷ் உத்தமன்.

        இதற்கிடையே தண்டவாளத்தில் இருக்கும் மாடு மீது ரயில் மோத, எல்.பி.(லோகோ பைலட்) ஆர்.வி.உதயகுமாருக்கும், ஏ.எல்.பி.(அசிஸ்டெண்ட் லோகோ பைலட்) போஸ் வெங்கட்டுக்கும் சண்டை வருகிறது. அவர் இருந்தால் ரயிலை எடுக்கமாட்டேன் என்று ஆர்.வி.உதயகுமார் கூறுகிறார். இதனால் ட்ரெயின் காட் இருக்கிற பெட்டிக்கு செல்லும் போஸ் வெங்கட், அங்கு அவரிடமும் சண்டை இடுகிறார். ஒருகட்டத்தில் ரயிலில் இருந்து இருவரும் வெளியே விழுகிறார்கள்.இதை அரியாமல் ஆர்.வி.உதயகுமார் ரயிலை எடுத்துவிடுகிறார்.

       எதிர்பாராமல் ஆர்.வி.உதயகுமார் மயங்கி விழுகிறார். அதன் பிறகு ரயில் கட்டுப்பாட்டை இழந்து செல்ல, ரயிலுக்கு என்ன ஆனது? ரயிலில் இருந்த பயணிகள் நிலை என்ன? தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் என்ன ஆனார்கள்? என்பதே மீதி கதை!

    கதை திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்புதான் ஆரம்பம் ஆகுகிறது. முதல் பாதியில் காதல், காமெடி மட்டும் வைத்து  இழுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். 140 கிமீ மேல் வேகமாய் ஓடுகிற ரயிலின் அருகில் டிவி சேனலின் வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனம் ஓடுகிறது. ஒருகட்டத்தில் இதுதான் நடக்கப்போகிறது என்று நம்மால் கனிக்க முடிகிறது. க்ரீன் மேட்-டை வைத்து திரைப்படத்தை முடித்திருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு அத்தனை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ். திரைக்கதையின் மீது கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குனர் பிரபு சாலமன்.

   டி.இமானின் இசை சுமார் ரகம் தான். வெற்றிவேலின் ஒளிப்பதிவு பலம். மொத்ததில் "தொடரி" - திருப்தி இல்லாத பயணம்!

18.9.16

பகிரி விமர்சனம்.லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கதையை எழுதி, தயாரித்து, இயக்கிருப்பவர் இசக்கி கார்வண்ணன். நடிகர் கருணாஸ் இசையமைப்பில், நாயகனாக பிரபு ரணவீரன்,  நாயகியாக ஷ்ரவ்யா, ஏ.வெங்கடேஷ், ரவி மரியா, டி.பி. கஜேந்திரன், ராஜன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் "பகிரி".

பகிரி, பெயர் புதுசா இருக்கே, அப்படினா என்னவென்று சந்தேகம் இருக்கலாம்? அது வேறு எதுவுமில்லை, நாம் தினமும் யூஸ் பண்ணுற வாட்ஸாப்ப் தான். தமிழில் பகிரி என்று அர்த்தம். படத்திற்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும். விவசாயம் அழிந்துவரும் இக்காலகட்டத்தில் விவசாயம் தான் நமது நாட்டிற்கு அவசியம் என்று உணர்ந்து திரைப்படமாக கதையை எழுத்திருக்கிறார் இயக்குனர்.

விவசாயம் தான் தனது உயிர் என்று வாழ்ந்துவரும் தந்தையின் மகனாக ஹீரோ பிரபு ரணவீரன். இவர் பிஎஸ்ஸி அக்ரி படிப்பை முடித்துவிட்டு, அரசாங்க வேலைதான் பார்க்கவேண்டும், அதுவும் டாஸ்மாக் வேலைதான் பார்க்கவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கிறார். அந்த வேலைக்கு போஸ்டிங் போட 5 லட்சம் பணத்தை கொடுத்தால் தான் வேலை கிடைக்கும் என்பதால் தனது தந்தையின் விவசாய நிலத்தை விற்று பணத்தை தருமாறு தன் தந்தையிடம்  கேட்கிறார். உயிரே போனாலும் நிலத்தை விற்க மாட்டேன் என்று தந்தை சொல்ல. இதனால் பணம் வேண்டும் என்பதால் பாரில் வேலை செய்ய முடிவெடுக்கிறார்.

இதற்கிடையில் காதலில் விழுகிறார் ஹீரோ. அரசு வேலை கிடைக்க வருங்கால மருமகனுக்காக மகளுக்கு வைத்திருக்கும் நகையெல்லாம் கொடுத்து உதவி செய்கிறார் ஹீரோயினின் அம்மா. அதை வைத்து பணத்தைப்புரட்டி போட்டு கொடுத்து போஸ்டிங்கை உறுதி செய்துகொள்கிறார். அந்த நேரம் பார்த்து நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த, மது கடைகள்  மூடப்படுகிறது. இறுதியில் டாஸ்மாக் வேலை என்ன ஆனது? ஹீரோவின் அப்பா ஆசை என்ன ஆனது? ஹீரோ விவசாயம் செய்தாரா இல்லையா? என்பதுதான் மீதி கதை.

படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் மிரட்டல். இன்றைய அரசியல்  கட்சிகள்  என்ன செய்கிறார்கள்? அவர்களை பற்றி சொல்லும் ஒவ்வொரு காட்சிகளும் நக்கல், நையாண்டியுடன் தான் இருக்கிறது. 'டாஸ்மாக்' என்ற பெயரை அப்படியே சொன்னால், பிரச்சனை வரும் என்று அதை நாசுக்காக 'நாஸ்மாக்' என்று சொல்லவைத்தது புத்திசாலித்தனமாக இருத்தலும், காமெடி என்ற பெயரில் கொஞ்சம் வெறுப்பு வருவது போலத்தான் சில காட்சிகள் இருக்கிறது. அரசியல் கட்சிகளை, அரசியல்வாதிகளை பற்றியெல்லாம் யோசித்த இயக்குனர், திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

விவசாயத்தை பற்றி என்று ஆரம்பிக்கும் கதை, அதை பற்றி சொல்லுவதை விட்டுட்டு 'டாஸ்மாக்கை' பற்றி மட்டும் தான் சொல்லிருக்கிறார்கள்.

பிரபு ரணவீரன் மற்றும் ஷ்ரவ்யா நடிப்பு ஓகே!! இசை மற்றும் பின்னணி இசை மைனஸ் தான். மொத்தத்தில் "பகிரி" - சரக்கு இனோ இருந்துருக்கலாம்!

5.9.16

குற்றமே தண்டனை விமர்சனம்

 

ஒருதலை காதல், காதலை ஏற்கவில்லை, காதல் பிரச்சினை என இளம்பெண்களை கொலை செய்வது அதிகரித்துள்ள நிலையில், இது போன்ற தவறுகளை செய்தால் என்ன தண்டனை என்று உணர்த்தும்  திரைப்படம் தான் "குற்றமே தண்டனை".

இன் ஒன் வர்ட் - கர்மா (Karma) ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் அல்லது விளைவு கிட்டும் என்ற சொல்.

கண் பார்வை குறைபாட்டுடன் வாழ்ந்து வருபவர் விதார்த். க்ரெடிட் கார்ட் கடன்களை வசூலிக்கும் தனியார் நிறுவனத்தில் பூஜா தேவாரியாவுடன்  பணிபுரிபவர். அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்தளத்தில் எதிர்ப்புற வீட்டில் வசிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

விதார்த்துக்கு கண்ணில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அவரால் குழாய் வழியாகப் பார்ப்பதைப்போலதான் பார்க்க முடியும். இதற்க்கு ‘டன்னல் வியூ(Tunnel View)’ என்று பெயர். இதை சரிசெய்ய வேண்டும் என்றல் மாற்று கண் சிகிச்சைதான் செய்யவேண்டும் என்கிறார் மருத்துவர். இதற்கு சிகிச்சை செய்ய அவருக்கு  பெரும் தொகை தேவைப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென ஒரு நாள் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்யப்படுகிறார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த ரகுமான் தான் அந்தக் கொலையை செய்ததாக விதார்த்  எண்ணுவதால், ரகுமான் தன் அங்கு இருந்தார் என்று வெளியில் சொல்லாமல் இருக்க விதார்த்துக்கு பணம் தருவதாகச் சொல்கிறார். கண் அறுவை சிகிச்சை செய்வதற்கு  பணம் தேவை இருப்பதால் விதார்த்தும் அதற்கு ஒத்துக் கொள்கிறார்.

அடுத்த நாள் போலீஸ் விசாரணை நடைபெற, ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டில் இருந்து வெளியே ஒரு நபர் வந்ததை பார்த்ததாக கூறுகிறார் விதார்த். அந்த நபர் யார்? ரகுமானுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் என்ன உறவு?? கொலை செய்தது யாரு?? விதார்த் கண் பார்வை என்ன அனைத்து?? என்பதே மீதி கதை!

அங்கங்கு ஒரு சில குறைகள் நன்றாக தெரிந்தாலும். நாசரின் கதாபாத்திரம், விதார்த்தின் உணர்வு, பூஜாவின் குடும்பப்பிரச்சனை என திரைக்கதையை விறுவிறுடன், மிகச்சிறப்யை அமைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். ஒளிப்பதிவு, இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

ஒரு சில நல்ல படங்களே வரும் இந்த காலகட்டத்தில், ரசிகர்கள் மனதில்
நிச்சயம் இத்திரைப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்தத்லில் "குற்றமே தண்டனை"  - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

4.9.16

கிடாரி விமர்சனம்


கம்பெனி புரொடக்ஷன்ஸ் சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், கதாநாயகனாக சசிகுமார், கதாநாயகியாக நிகிலா விமல் மற்றும் வேல ராமமூர்த்தி, நெப்போலியன், வசுமித்ரா, சுஜா, ஷோபா, தெனாலி என்ற ஒரு நடிகர்கள் பட்டாளத்துடன் வெளியாகிருக்கும் திரைப்படம் "கிடாரி".

டைட்டில் கார்டில் ஆரம்பிக்கும் சிவப்பு நிறம் எண்ட் கார்டு போடும்வரையில் தொடர்கிறது. அந்த அளவிற்க்கு வன்முறையும் பலிவாங்குதலுமாக போகிறது திரைக்கதை.

வழக்கமான தென்மாவட்டத்தின் மிகப்பெரிய தாதா தொனி. கொம்பையா பாண்டியனாக வருகிறார் எழுத்தாளர் வேலு ராமமூர்த்தி. விருதுநகர் - சாத்தூர் பகுதியில் ஆட்டுச்சந்தை, கட்ட பஞ்சாயத்து செய்து செம பார்மில் இருக்கிறார். அவரது வளர்ப்பு மகனாக கடாரியாக சசிகுமார் மிகவும் முரடனாக படத்தில் கொம்பையா பாண்டியனை எதிர்க்கும் அனைத்து எதிரிகளை தனி ஆளாக நின்று விளையாடுகிறார்.

கொம்பையாபாண்டியன் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், அவரை  கொலை செய்ய முயற்சி செய்தது யாராக இருக்கக்கூடும் என்று வாய்ஸ் ஓவரோடு கதை  தொடருகிறது. பல முக்கிய கதாப்பத்திரங்கள், பல "சம்பவங்கள்" அனைத்தும் கதைக்களத்தில் இடம்பெருகின்றன. கொம்பையாபாண்டியனை இந்த நிலமைக்கு ஆளாக்கியது யார் என்பதை அறிந்து அவனை பலிவாங்க நினைக்கும் கிடாரிக்கு பல உண்மைகள் தெரியவருகிறது. தன் அப்பாவாக நினைத்த கொம்பையாவே தன் சொந்த அப்பாவாகிய நெப்போலியனை நய வஞ்சமாக கொலை செய்திருக்கிறார் என்பதை அறிந்து தன்மனநிலையை எப்படி மாற்றுகிறார்??? பின்னர் கொம்பையாவை பலிவாங்குகிறாரா?இல்லையா? என்பதுதான் மீதி கதை.

படத்தின் காதாநாயகி  நிகிலா விமல், சசிகுமாருடன்  இரண்டாவது படம் என்பதால் மிகவும் கேஷுவலாக நடித்திருக்கிறார். ஆனால் காதல் காட்சிகள் படத்திற்க்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதும், நாடோடிகள் படத்தில் வரும் காட்சிகளை ஞாபகப்படுத்துவதும்  திரைக்கதைக்கு வேகத்தடையாகவே அமைத்துள்ளது.

இயக்குனர் திரைக்கதையை சுவாரஷ்யமாக அமைத்து  இருந்திருக்கிறார். ஆனால் ஃப்ளாஷ்பேக் என்ற பெயரில் வில்லன்களை அறிமுகப்படுத்திக் கொண்டுருப்பது ஒரு கட்டத்தில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. சசிகுமார் இதற்க்குமுன்பு நடித்த எல்லாப் படங்களின் காட்சிகளும் இப்படத்தில் ஏதோ ஒரு இடத்தில் எட்டிப்பார்க்கிறது. நிகிலா விமல் ஒரு சில காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு மட்டும் வந்து செல்கிறார். ஒளிப்பதிவு மற்றும் பின்னனி இசை படத்திற்கு பெரிய பலம். “கிடாரியே உன் போல” பாடலை தவிர மற்ற பாடல்கள் எல்லாம் சுமார்தான்.

 கிட்டத்தட்ட தென்மாவட்டங்களின் கதைக்களம் என்றாலே வன்முறையும், பலிவாங்குதலுமாக படங்களை அமைக்கும் பாணியை எப்பொழுதுதான் மாற்றப்போறார்களோ என்று தெரியவில்லை.

மொத்தத்தில் கிடாரி - ஏற்கனவே கேட்ட ஸ்டோரி தான்.

28.8.16

54321 விமர்சனம்


     மெயின் ஸ்ட்ரீம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைப்பில், ஷபீர், அர்வின், பவித்ரா, ரவி ராகவேந்தர், ரோகினி, ஜெயக்குமார், பசங்க சிவகுமார் நடிப்பில், இயக்குனர் எ.ராகவேந்திர பிரசாத்தின் முதல் படம் "54321".

    பொதுவாக சைகோ படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் சற்று ஆர்வம் குரைவுதான். ஆம், "54321" ஒரு சைகோ திரில்லர் தான்.
மிக சொர்ப்பமான கதாபாத்திரங்கள்தான். ஆனாலும் இயக்குனர் மெனகட்டு இருக்கிறார். சைகோ கதைகள் நம் தமிழ் ரசிகர்களுக்கு புதிதாகவே இருக்கிறது.

      வினோத்தின் (அர்வின்) வீட்டுக்குள் கொள்ளையடிக்க வரும் திருடனாக (ஜெயக்குமார்), அதே வீட்டுக்குள் விக்ரம் (ஷபீர்) திடீர் என்று நுழைந்து,  வினோத்தின் மனைவி (பவித்ரா), அப்பா (ரவி ராகவேந்தர்), ஒரு குழந்தை ஆகியோரை பினை கைதிகளாக பிடித்து வைக்கின்றார் விக்ரம். கொள்ளையடிக்க வந்த ஜெயக்குமார் தானாகவே மறைந்துகொண்டு அதே அறையில் மாட்டிக்கொள்கிறார். விக்ரம் வினோத்தை அந்த குழந்தையை கொலை செய்ய வேண்டும் இல்லையென்றால்  அவரின் மனைவி அஞ்சலியை கொன்று விடுவேன் என்று மிரட்ட, ஒரு கொடூரமான் சைகோவிடம் இருந்து தன் குடும்பத்தை வினோத் எப்படி காப்பாற்றுகிரார் என்பதுதான் கதை.

    வினோத்துக்கும், விக்ரமிர்க்கும் என்ன உறவு என்பதை ப்ளாஷ்பேக் மூலம் விளக்க முயர்ச்சி செய்கிறார் இயக்குனர். சிறு வயதில் வினோத்தின் தாயை ஒரு சூழ்நிலையில் விக்ரம் கொலைசெய்ய, இதனால் வினோத்தை தத்தெடுத்து வளர்க்கின்றனர் விக்ரமின் பெற்றோர். படிப்பிலும் மற்றவிஷியத்திலும் வினோத்தை உயர்வாக  பேசுகின்றனர் விக்ரமின் பெற்றோர். இதனால் வினோத்தின் மேல் வஞ்சம் கொள்ளும் விக்ரம், வினோத்தின் குடும்பத்தை பழிவாங்குவதே மிதி கதை.

   வினோத் அவர் குழந்தையே கொலை செய்யும் காட்சி பார்வையாளர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது

     கிட்டத்தட்ட வினோத்தின் மீது விக்ரம் கொள்ளும் ஒரு பொறாமை யுத்தம் அவரை சைகோவாக மாற்றி விடுகிறது. ப்ளாஷ்பேகக்கிள் ஒரு சில இடங்களில் விக்ரமின் மீது இரக்கம் வருகிறது.

    ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்வுகளின் தொகுப்புகளுடன் ஆரம்பிக்கும் படம், அதன்பின் கதாபாத்திரங்களை ஒவ்வொரு காட்சிகளுடன் விளக்கும் வகையில் சொல்லியிருப்பது இயக்குனரது நல்ல முயற்சி. ஆனால் சில காட்சிகளில் வினோத்தின் கால்கள் மட்டும் தானே   பூட்டப்பட்டுள்ளது?? அவர் அருகில் விக்ரம் வரும்பொழுதெல்லாம், வினோத் அவனை எதுவும் செய்யலாம் வேடிக்கை பார்ப்பது கேள்வி எழுப்புகிறது.

   இசை படத்திற்கு இன்றியமையாதது. அதுவும் நம் தமிழ் ரசிகர்களுக்கு இசைதான் மிக முக்கியம், அதுதான் படத்தை பற்றி பேசவும் வைக்கும். அதை குடுப்பதற்க்கு நல்ல முயற்சி செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர்.

மோத்தத்தில் "54321" மெதுவான கவுண் டவுன்!!!

21.8.16

நம்பியார் விமர்சனம்


   கோல்டன் ஃப்ரைடே பிலிம்ஸ் எஸ். வந்தனா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கணேசா இயக்கத்தில் , விஜய் ஆன்டனி இசையமைப்பில், ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜெய பிரகாஷ், டெல்லி கணேஷ், தேவதர்ஷினி என பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் களம் இறங்கிருக்கிறது "நம்பியார்".

       ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஹீரோ ஸ்ரீகாந்த். இவருடைய  மனசாட்சியாக வரும் சந்தானம், ஹீரோயினியாக  சுனைனா இவர்கள் மூவருக்குமிடையில் நிகழ்வுகளின் தொகுப்புதான் நம்பியார்.

      ஸ்ரீகாந்த்க்கு பல எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகிறது. அந்த எதிர்மறையான எண்ணங்களுக்கு உருவம் கொண்டவர்தான்  சந்தானம். சந்தானத்தின் வழி நடக்கும் ஸ்ரீகாந்த் சுனைனாவை காதலிக்கிறார். சுனைனா டூயட் பாடுவதற்காக மட்டுமே திரையில் தோன்றுகிறார்.

             ஸ்ரீகாந்த் எந்தவொரு செயல் செய்தாலும் அதனை குறை சொல்லும் மனசாட்சியாக சந்தானம் இருக்கிறார். சந்தானத்தின் வழி நடக்கும் ஸ்ரீகாந்த் தான் படிப்பதை மறந்து சுனைனாவை காதலிக்கிறார். பின் சந்தானத்தின் வழி காட்டுதலில்  சுனைனாவோடு சண்டையிடுகிறார். காதலிலும் தோற்று, படிப்பிலும் தோற்று வாழ்க்கையிலும் தோற்கின்றார். இத்தனை தோல்விகளுக்கும் காரணமான ஸ்ரீகாந்தின் எதிர் மறை எண்ணங்களின் பிரதிபலிப்பாக வரும் சந்தானத்தின் பேச்சை மீறி, பிரச்னைகளை எப்படி தீர்க்கிறார், பின்னர் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.

          இசை விஜய் ஆன்டனி என்று சொல்லித்தான் நம்பவைக்கணும். பாடல்கள் எல்லாம் சுமார் ரகம் தான். ஜெய பிரகாஷ், டெல்லி கணேஷ், தேவதர்ஷினி மற்றும் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு அவர்கள் வேலையை அவரவர் செய்திருக்கிறார்கள். ஹீரோவுக்குள் இருக்கிற மனசாட்சி நகைச்சுவையாகவும், சுவாரசியம்  அளிக்கும் வகையில் இருந்தலும்  திரைக்கதையில் அது எதுவுமே இல்லை என்றே கூறலாம்.

மொத்தத்தில் "நம்பியார்" - நம்பினால் எமாற்றம் தான்!!

20.8.16

கிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்
தயாரிப்பு: கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

இயக்கம்: பிரசாத் முருகேசன்

இசை: தர்புக்கா சிவா

நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர்த்தி, மு. ராமசாமி, வசுமித்ரா, சுஜா, ஷோபா மோகன்.

ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர்

எடிட்டிங்: பிரவீண் ஆண்டனி

கலை: ரமேஷ்

ஸ்டண்ட்: திலிப் சுப்புராயன்

பாடல்: ஏகாதசி, மோகன்ராஜன்

PRO: நிக்கில்

நடனம்: ராதிகா 

"என்னுடைய அடுத்த படத்தையும் நீதான் தயாரிக்க வேண்டும் என்று கூறினார் இயக்குனர் பாலுமகேந்திரா" - சசிகுமார்           சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் "கிடாரி" திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது. அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், சசிகுமார், நிஃஹிலா விமல், வேல ராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ரா, சுஜா, ஷோபா மோகன் மற்றும் பலர் நடித்து வெளியாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு தர்புக்கா சிவா இசை அமைத்திருக்கிறார்.

         சசிகுமார் பேசியபொழுது "தன்னுடைய குரு இயக்குனர் பாலுமகேந்திரா பற்றி குறிப்பிடுகையில் 'தலைமுறைகள்' படத்தை தயாரித்து முடித்ததும் என்னுடைய அடுத்த படத்தையும் நீதான் தயாரிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் காலம் எனக்கு அந்த வாய்ப்பை அளிக்கவில்லை. அதை தொடர்ந்து பல நல்ல கதையுள்ள படங்களையும் தயாரித்து வருகிறேன். இதுவரையில் 8 திரைப்படங்கள் தயாரித்திருக்கிறேன். எனது முதல் படமான சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்கு பிறகு இத்திரைப்படத்தில் நடித்ததை விட இயக்குனராக பணிபுரிய ஆசை இருத்தது. அந்த அளவிற்க்கு வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருக்கிறது" என்று கூறினார்.

        இவ்விழாவில் இரண்டு பாடல்களும் படத்தின் ட்ரயிலரும் வெளியிடப்பட்டது. 

தர்மதுரை விமர்சனம்


       ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ்,  சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், கஞ்சா கருப்பு, ராஜேஷ், அருள் தாஸ், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் "தர்மதுரை".

       மதுரை அருகில் உள்ள கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்திவரும் 3 சகோதரர்கள், இவர்களது இன்னொரு சகோதரர் தர்மதுரை (விஜய் சேதுபதி) எப்பொழுதும் குடித்துவிட்டு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு, அவரே தனது சகோதரர்களை அவமானம் படுத்தும் குணம் கொண்டவர்.  தர்மதுரை என்ன தவறு செய்தலும் அவருக்கு அவரது தாயார் பாண்டியம்மாவின் (ராதிகா சரத்குமார்) ஆதரவுண்டு. தர்மதுரை அவரது சகோத்திரர்களுக்கு தினமும் தொல்லை கொடுக்க, அவர்களே இவரை கொல்ல திட்டம் திட்டி தயாராகிறார்கள். இதை அறியும் பாண்டியம்மா, இவரை தப்பிக்க வைக்க, அவருக்கே அறியாமல் அவர் எடுத்துச் செல்லும் பையில் சீட்டுப்பணம் ரூபாய்.8 லட்சம் இருக்கிறது. பின்னர் இதனால் அவரது சகோதரர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து இவர் வாழ்க்கை என்னானது, பிரச்சனைகளை எவ்வாறு முடிந்தது என்பது தான் மீதி கதை.

      கிராமத்து கிளியாக நடிப்பில் மனதில் நிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
 இரண்டாவது பாதியில் தமன்னா நடிப்புல தேரிட்டேன்னு காட்டுறார்.
விஜய் சேதுபதி மீது காதலில் இருக்கும் சிருஷ்டி டாங்கே சும்மா ஒரு கதாபாத்திரம் தான். மிக மெல்லமாக செல்லும் திரைக்கதையால் கஞ்சா கருப்பு எதை  சொன்னாலும் சிரிக்க தோனுது.

    டான்ஸ், இசை, ஒளிப்பதிவு என்று மத்ததெல்லாம் அழகாய் காட்டிய விதம் ப்ளஸ். ஆனால் கதை காணாம போய் கடைசில விஜய் சேதுபதியை வச்சு சுத்தி சுத்தி கதையை கண்டு பிடிச்சுடுறாங்க.

மோதலில் தர்மதுரை - எதிர்பார்த்ததை  விட கொஞ்சம் கம்மிதான்.

1.7.16

அப்பா விமர்சனம்

நாடோடிகள்  நிறுவனம் தயாரிப்பில், எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் வெளியீட்டில் இன்று (ஜூலை 1-ம் தேதியன்று) வெளியாகியிருக்கும் திரைப்படம் "அப்பா". சமுத்திரக்கனி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில், தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோ நாராயணன், வேல ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நசாத், திலீபன், அணில் முரளி  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


   கடுமையான போட்டி உலகத்தால் பாதிக்கபட்டு  தன் மகனையும் அந்த உலகத்தில் தினிக்கும் ஒரு அப்பா.

உலகில் நம்மை சுற்றி எது நடந்தாலும் அது உனக்கு தேவையற்றது என்று சொல்லி உளவியல் ரீதியாக தன் மகனை தனிமை படுத்தும் ஒரு அப்பா.

நீ பிறந்தது சுதந்திரமாக பறப்பதர்க்கு, நீ பறக்க என்ன உதவி வேண்டுமோ கேள் என்று சொல்லும் ஒரு அப்பா.

இந்த மூன்று அப்பாக்களும்  அவர்களுடைய பிள்ளைகளும் இந்த சமுதாயத்தால் அவர்களுக்கு நிகழும் சம்பவங்களை வைத்து ஒரு முக்கோன அப்பாக்கள் கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் சமுத்திரக்கனி.

       "பள்ளியில் கற்பிக்கும் பாடம், தேர்விற்க்கு மட்டும்தான் பயன் படும்".
 ஆனால் நாம் படித்ததை எப்படி இந்த சமுதாயத்திற்க்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென்பதன் முக்கியத்துவத்தை உணர பிள்ளைகளுக்கு பெற்றொர்கள்  உதவ  வேண்டும் என்பதை ஆணித்தரமாக பதிக்கும் படம்.

தன் மகனிடம் சில விளக்க முடியாத கருத்துக்ளையும் மிக நாசுக்காக புரியும் படி சொல்லும் ஒவ்வொரு  முரையும் பார்வையாளர்களின் கைதட்டலை சொந்தமாக்கிக்கொள்கிறார் சமுத்திரக்கனி
முக்கியமாக பெண்களை பற்றி விளக்கும்போது "நம்மல அடிச்சா வலிக்கிறமாறி, அவங்கல அடிச்சாலும் வலிக்கும்" என்று சொல்லும்போது குழந்நைகளுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் அது ஒரு மிக முக்கிமான பாடம் ஆகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை பிஞ்சிளிருந்தே தடுக்க வேண்டும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றனர்.

 இப்போது இருக்கும் பெறும்பாலான மிடில்கிளாஸ் அப்பாவை பிரதிபலிக்கும்  கன்னாடியாக வலம் வந்துள்ளார் திரு.தம்பிராமையா. ஆதனால் அவருக்கு ஏற்படும் இழப்பு படம் பார்கும் அப்பாக்களை ஒருமுறை தன் பிள்ளைகளை பற்றி சிந்திக்க வைக்கிறது.

       இவனால ஒன்னுத்துக்கும் லாயகில்ல, எவ்ளோ சொன்னாலும் ஒன்னும் புரியாது என்று தன் மகனை புரிந்துகொள்ள முடியாமல், மகனுடைய திறமை என்னவென்று கண்டுபிடிக்க தவறி, தன் மகனின் எதர்காலத்தை தெரிந்தோ தெரியாமலோ   தொலைக்க வைத்த நம் சமநிலை சமூகத்தில் வாழும் லட்சக்கனக்கான அப்பாக்களில் ஒருவராக படத்தில் வளம் வருகிறார் நமோ நாராயணன்.

இப்படத்தில் மகனாக நடித்திருக்கும் சிறார்களின் டையலாக் அனைத்தும் நிஜ வாழ்ககையில் பல குழந்தைகள் பேச நினைக்கும் வசனமாக இருக்கிறது குறிப்பாக "நான் உனக்கு பொறந்ததுக்கு பதிலா அவருக்கு பொறந்திருந்தா வளர்ந்திருப்பேனோ" என்ற டையலாக் செம பவர்புல்.!  எல்லார்க்கும் பிடிச்சமாதிரியான அப்பானா இப்படித்ததான் இருக்கனும்னு சொல்ர மாறி நடிச்சு மனசுல நின்னுடாரு சமுத்திரக்கனி.

   பிள்ளைகளின் திறமை, ஆசை, கனவு மற்றும் விருப்பத்தை அறியாமல், பள்ளிக் கல்விதான் முக்கியம் என்று திசை திருப்பிய அப்பாமார்கள் இதை பார்த்தால் புரியும் 'அவர்கள் என்னவாக வேண்டும் என்று அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நாம் அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று'. கூறும் ஒரு படைப்பு

"இத்திரைப்படத்தின் அப்பா" இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு ஒரு எதார்த்தின் உச்சம்.

ஆம்!! நம் அப்பாக்கள் எப்பொழுதும் "என்புள்ள சந்தோசமா இருக்கனு" என்று நினைத்துதான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சமுதாயமாற்றங்களை எப்படி அனுகுவது என்று தெரியாமல் தன் பிள்ளைகளை வளர்ப்பதில் தோற்றுவிடும் அப்பாளுக்கான பாடம்தான் "அப்பா".

அப்பாகளுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த சமூதாயத்திர்க்கும் ஏற்படும் சிக்கல்களை எப்படி கடந்து செல்வதென்பதை சொல்லும் ஒரு உளவியல் ரீதியான படைப்பு "அப்பா"

அப்பா- அப்பாக்கள் (பெற்றொர்கள்) படிக்க வேண்டிய பாடம்!!

18.6.16

"எனக்கு இன்னொரு பேர் இருக்கு" விமர்சனம்.                    டார்லிங் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் அன்டன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து லைக்கா புரடக்ஸன் தயாரிப்பில் நேற்று  உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகிருக்கும் திரைப்படம் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு". இத்திரைப்படத்தில் "கயல்"ஆனந்தி, "பருத்திவீரன்" சரவணன், விடிவி கணேஷ், "நான் கடவுள்" ராஜேந்திரன்,  கருணாஸ், யோகி பாபு, நிரோஷா,சார்லி, வில்லன் துரையாக ஆர்.லாரன்ஸ், லொல்லு சபா சுவாமிநாதன், மனோகர் என பல நடிகர்கள்  நடித்துள்ளார்.
                   
                   ராயபுரத்தில் நைனா தான் எல்லாம், ஏற்கனவே நைனாவாக இருப்பவரை சரவணன்(தாஸ்), விடிவி கணேஷ்(பெஞ்சி), ராஜேந்திரன்(மகாபலி மஹா) கூட்டணி திட்டம் போட்டு காலி செய்ய, அந்த நைனா நாற்காலிக்கு சரவணன் வருகிறார், மற்ற இருவரும் அந்த இடத்தை விட்டு செல்கிறார்கள். பின்னர் விடிவி கணேஷ் மகன் ஜி.வி.பிரகாஷ்க்கு(ஜானி), சரவணனின் ஒரே மகளான  ஆனந்தி(ஹேமா) மீது காதல் கொள்கிறார். இரத்தத்தைப் பார்த்தாலே வலிப்பு மாதிரி வந்து சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லும்  நோய் உள்ளவராக ஜி.வி.பிரகாஷ் இருக்க,  சரவணன் தன் மகள் ஆனந்தியை திருமணம் செய்பவன்  ராயபுரத்தை  அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு தேடுதல் வேட்டையை நடத்துகிறார்.

                 ஜி.வி.பிரகாஷ் தான் சரியான ஆள் என சரவணனின் எடுபிடிகளான கருணாஸ், யோகிபாபு ஆகியோரால்  தவறாக அடையாளப்படுத்தப்படுவதால் இருவருக்கும் எளிதாக திருமணம்  முடிகிறது. பின்னர் அனைவருக்கும்  அவரது பலவீனம் பற்றி தெரியவர.
இறுதியில் எவ்வாறு அவர் ராயபுரம் நைனாவகிறார் என்பதே மீதிக்கதை.
                 
                  இயக்குனர் சாம் அன்டனின் கதை , இளைஞர்களுக்கு மட்டுமான ஒரு லாஜிக் இல்லாத திரைப்படமாக அமைத்துள்ளது. வேதாளம்,கபாலி, கத்தி, த்ரிஷா இல்லனா நயன்தாரா, மாரி, ரமணா போன்ற  படங்களில் வரும் வசனக்காட்சிகளை கொண்டு  நகைச்சுவையுடன் படத்தை கொண்டு சென்றுள்ளார். நைனா வாரிசுக்கு ரவுடியைத் தேர்ந்தெடுப்பதை ரியாலிட்டி ஷோவாக நடத்துவது என காமெடி கலாட்டா செய்துவிட்டார்கள்.  ஜி.வி.பிரகாஷின் பாடல்களை பற்றி சொல்லும்  அளவிற்கு  பெரிதாக ஒன்றும் இல்லை. மாஸ் ஹீரோவுக்கான பின்னணி இசை அருமை.


        மொத்தத்தில் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" - அங்க அங்க காமெடி மட்டும் தான் இருக்கு!!!

4.6.16

இறைவி விமர்சனம்


     பீட்சா படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சி.வி. குமார் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் "இறைவி".  விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, கருணாகரன், ராதாரவி, வடிவுக்கரசி என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் இத்திரைப்படம் நேற்று வெளியாகிருக்கிறது.


  சிற்பத் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். இளைய மகனான பாபி சிம்ஹா கல்லூரி மாணவர். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் இயக்கிய ஒரு படம் அப்படத்தின்   தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,  வெளிவராமல் தடைபடுகிறது.

 இதனால் விரக்தியடைந்த எஸ்.ஜே.சூர்யா  மதுவுக்கு அடிமையாகிறார். அவரின் நிலையை நினைத்து வருந்தும் அவரது மனைவியான கமலினி முகர்ஜி, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிட இவர்கள் குடும்பத்தோடு முயற்சியில் இறங்குகிறார்.

மறுபக்கம் இவர்கள் குடும்பத்தில் வளர்ந்த விஜய் சேதுபதி, கணவனை இழந்த பூஜா மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்ய ஆசைப்படும் வேளையில் இவரை திருமணம் செய்ய மறுக்கிறார் பூஜா. அதன் பின் விஜய் சேதுபதி அஞ்சலியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தாலும் பூஜாவின் நினைவாகவே இருக்கிறார்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் நடுவே விஜய் சேதுபதி நுழைந்து தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு சிறை செல்கிறார்.

 இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், திருப்பங்களுமே மீதிக்கதை.

எஸ்.ஜே.சூர்யா தனது வழக்கமான நடிப்பை விட்டுமுற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுவதும் குடிகார கதாபாத்திரமாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா, க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களை களங்க வைக்கிறார்.

சற்று முதிர்ச்சியான தோற்றத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி. வழக்கம் போல அவருக்கே உரிய யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் தான் செய்த தவறையும், தன் மனைவியையும் நினைத்து வருந்தும் காட்சிகள் பிரமாதம். பாபி சிம்ஹா  வில்லத்தனம் கலந்த கல்லூரி மாணவனாக புதுவித கதாபாத்திரத்தில்  வலம் வந்திருக்கிறார்.

ஏழ்மையான குடும்ப பெண்ணாக வரும் அஞ்சலி மேக்கப் இல்லாமல் ஒரு நிஜ வாழ்க்கையை பிரதிபலித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.. தன் கணவன் எஸ்.ஜே.சூர்யாவின் நிலையை நினைத்து வருந்தும் காட்சியில் கமலினி முகர்ஜி ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார். ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை  துணிச்சலுடன் ஏற்று நடித்திருக்கும் பூஜா திவாரியா. முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார்.  மற்ற மூத்த நடிகர்களான ராதாரவி, வடிவுகரசியும் தங்கள் அனுபவ நடிப்பை அப்படியே அர்ப்பணித்திருக்கிறார்கள், இவர்களோடு கருணாகரனும் தனக்கு கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.

குடும்பத்தைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் எண்ணம்போல் வாழ நினைக்கும் ஆண்களால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், பிரச்சனைகளையும் தைரியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் சிலவற்றை சேர்த்து படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம். பின்னணி இசை அதிகம் பேசப்படும். சிவக்குமாரின் ஒளிப்பதிவு கதைக்கும் காட்சிகளுக்கும் பலம்.

மொத்தத்தில் "இறைவி" சமூக அவலத்திற்கு சாட்டையடி..

27.5.16

உறியடி விமர்சனம்     ஷாவ்னயர் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர், இயக்குனர் விஜய் குமார், நடிகை ஹென்னா ஃபெல்லா, நடிகர் மைம் கோபி மற்றும் பல புதுமுக நடிகர்களின் கலவையில், ஆண்டனி தாசன் இசையமைக்க, ஃபால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவில் உருவாகி வெளிவந்திருக்கிறது "உறியடி".

        திருச்சி அருகில்  உள்ள கல்லூரி ஒன்றில் கதாநாயகன் ப.விஜய் குமார்  தன் மூன்று நண்பர்களுடன் விடுதியில் தங்கி படித்து வருகிறார். வகுப்பு நேரத்தை தவிர மைம் கோபி நடத்தி வரும் (தாபா) பாரில் அதிக நேரத்தை செலவழித்து குடித்து வருகிறார்கள்.
                     
       ஒரு சமயம் அந்த பாரில் விஜய் குமார் மற்றும் அவரின் நண்பர்களுக்கும், அவர்களுடன் படிக்கும் சக மாணவர்களுக்குமிடையே  சண்டை ஏற்படுகிறது. அதன் பின் ஒருநாள் இதே பிரச்சினையை வைத்து நாயகனின் நண்பர்களில் ஒருவனை எதிர்தரப்பு மாணவர்கள் கொலை செய்துவிடுகிறார்கள்.
                 
        இந்த பிரச்சினையை  துருப்புச் சீட்டாக பயன்படுத்தி தன் அரசியல் வாழ்க்கையை தொடங்க நினைக்கும் மைம் கோபி. மாணவர்களுக்குள் ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறார். இறுதியில் இந்த கலவரம் எப்படி முடிந்தது? மைம் கோபியின் திட்டம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
               
        படத்தில் நாயகன் விஜய் குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் நண்பர்களாக வருபவர்களும் தங்களுடைய நடிப்பை சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பார் ஓனராக வரும் மைம் கோபி வழக்கமான வில்லத்தனத்தை அருமையாக  வெளிப்படுத்தியிருப்பது இப்படத்திற்கு பெரிய பலம்.
                     
      அடிதடி, அரசியல் சூழ்ச்சி, வன்முறை கலந்த கதைகளத்தை மையமாக வைத்தே படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் குமார். தனிக்கை குழுவால் 'ஏ' சான்றிதழுடன் வெளிவந்திருக்கிற இப்படத்தில்  சண்டை, வெட்டு குத்து  கலவரம் என வன்முறைகள் அதிகமாக இருப்பதால் ஒரு கட்டத்தில் படத்தை பார்ப்பவர்களுக்கு  சலிப்பை மட்டுமே தருகிறது. ஒரு படத்திற்கு கதாநாயகி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே கதாநாயகி ஹென்னா ஃபெல்லா வந்து போகிறார்.
           
     ஆண்டனி தாசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். விஜய் குமாரின் பின்னணி இசை ஓரளவே ஒத்துப்போகிறது. ஃபால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல். மொத்தத்தில் "உறியடி" அரசியல் கலந்த "அதிரடி ".

29.4.16

மனிதன் விமர்சனம்


       ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்கு பிறகு உதயநிதி, ஹன்சிகா மோத்வானி மீண்டும் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படம். வாமனன், என்றென்றும் புன்னகை படங்களின் மூலம் அறிமுகமாகிய இயக்குனர் ஐ.அஹமது இயக்கத்தில், சுபாஷ் கபூரின் "ஜாலி LLB" என்ற ஹிந்தி திரைப்படத்தின் கதை தழுவலை கொண்டு. ராதா ரவி, பிரகாஷ் ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து, மதி ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இன்று வெளியாகிருக்கும் திரைப்படம் "மனிதன்".

பொள்ளாச்சியில் வழக்கறிஞராக இருந்துவரும் சக்தி (உதயநிதி) தன்னுடைய மாமா மகளான ப்ரியா (ஹன்சிகா)-வை திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன், அதே நேரத்தில் எப்படியாவது ஒரு வழக்கிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்து வருகிறார். அவர் வழக்கில் தோல்வி அடைவதை அவரின் நண்பர்கள் கிண்டல், கேலி செய்ய. இதில் மணமுடைந்து போகும் உதயநிதி சென்னைக்கு வருகிறார். சென்னையில் அவருடைய  உறவினர் வழக்கறிஞரான  சூர்யா (விவேக்) உடன் சேர்த்து, வழக்குகளை தேடி அலைகிறார். மிகப்பெரிய வழக்கறிஞரான ஆதிசேஷன் (பிரகாஷ் ராஜ்) ஒரு தொழிலதிபரின் மகன் குடிபோதையில்  சாலையோரம் உறங்கிகொண்டிருக்கும் 5 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் வாதாடி விடுதலை வாங்கி கொடுக்கிறார்.

  இந்த வழக்கை கையிலெடுத்து வெற்றிபெற்றால், அவரின் லட்சியம் நிறைவேறும் என்ற ஆசையில் இந்த வழக்கில் பிரகாஷ் ராஜை எதிர்த்து  வாதாடுகிறார் உதயநிதி. இந்த வழக்கால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார் உதயநிதி. பத்திரிகை நிருபராக வரும் ஜெனிபர் (ஐஸ்வர்யா ராஜேஷ்) உதவியுடன் உதயநிதி இப்பிரச்சனைகளை சமாளித்து இறுதியில் எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்பதை விறு விருப்புடன் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் அஹமது.

இதுவரை பார்த்த உதயநிதி இல்லாமல், இப்படத்தில் ஒரு உணர்ச்சிவசமான வழக்கறிஞராக கைத்தட்டல் பெறுகிறார் உதயநிதி. ஹன்சிகா மோத்வானி ஒரு காதலனை நல்ல பாதையில் வழிநடத்தும் காதலியாக தன்னுடைய கதாபத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறார். ராதா ரவி மற்றும் பிரகாஷ் ராஜின் நடிப்பு பலே. குறிப்பாக ராதா ரவி அவர்கள் கோர்ட்டில் பிரகாஷ் ராஜை மிரட்டும் காட்சி "மிரட்டல்".

இயக்குனர் படத்திற்கு தேவை என்னவென்று புரிந்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் வரும் பாடல்கள் சற்று ஓகே தான் என்றாலும் பின்னணி இசை அவர் செய்த வேலையை காட்டுகிறது. மொத்தத்தில் இத்திரைப்படம் ஒரு "நல்ல" மனிதன்.

24.4.16

என்னுள் ஆயிரம் விமர்சனம்


     
       காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வரும் நாயகன் மஹா, தன் தாய் இறந்ததும் வேலை தேடி சென்னைக்கு வேலை தேடி வரும் வழக்கமான சினிமா பாணியில் தொடங்குகிறது படம். சென்னையில் யாரையும் தெரியாத நாயகன், ஒரு டிபன் கடையில் வேலை கேட்கிறார். டிபன் கடை வைத்திருப்பவரோ, மஹாவை நட்சத்திர ஓட்டலில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். ஒருநாள் தன்னுடன் வேலை பார்ப்பவரின் திருமணத்திற்காக கேரளா செல்லும் நாயகன். அங்கு நாயகி மெரீனா மைக்கேலை சந்திக்கிறார். ஏற்கனவே ஒருமுறை இருவரும் சந்தித்திருந்த காரணத்தால், இந்த முறை அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி, இருவரும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில், மெரீனாவிற்கு அவரது வீட்டில் வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதனால் மஹாவும் மெரீனாவும் ஊரை வீட்டு ஓடிப்போக முடிவு செய்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யும் மஹா, பிரச்சினைகளில் சிக்க, போலீஸ் அவரை தேட ஆரம்பிக்கிறது.  இறுதியில் அந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு நாயகி மெரீனாவை மஹா கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

       நாயகன் மஹாவிற்கு இது முதல் படம். வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகியான மெரீனா மைக்கேல் காதல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி யுகலுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை  கவர்ந்திருக்கிறார் வின்சென்ட் அசோகன்.
   
       மாறுபட்ட கோணத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ண குமார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பே மிச்சம். நீண்ட காட்சிகளும் லாஜிக் மீறல்களும் மிகப் பெரிய பிழை. கோபி சுந்தர் இசையில் பாடல்களும்,பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிசயராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.  மொத்தத்தில் "என்னுள் 1000  (ஆயிரம்)" ஜீரோ தான்!!!

23.4.16

வெற்றிவேல் விமர்சனம்

   
            ஓய்வு பெற்ற ஆசிரியரான இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார். இவர் சொந்தமாக பூச்சி மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் வேளாண் அதிகாரியாக பணியாற்றும் மியா ஜார்ஜை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு சமயத்தில் மியாவும் சசிகுமாரின் காதலுக்கு ஓகே சொல்கிறார். பின் ஒருநாள் தனது சொந்த ஊருக்கு செல்லும் மியா ஜார்ஜ் திரும்பி வருவதற்குள் சசிக்குமாரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.  வெளியூரில் படிப்பு முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வரும் சசிகுமாரின் தம்பி ஆனந்த் நாக், அந்த ஊர் தலைவரான பிரபுவின் மகளை காதலிக்கிறார். அவளும் இவரை காதலிக்கிறாள். இவர்களது காதல் சசிகுமாரின் வீட்டுக்கு தெரியவரவே, பிரபுவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறார் இளவரசு.
   
           ஆனால், சாதி, அந்தஸ்தை காரணம் காட்டி பிரபு இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த விஷயம் சசிகுமாருக்கு தெரியவரவே, தம்பியின் காதலுக்கு உதவி செய்ய நினைக்கிறார். ஊர் திருவிழாவின் போது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கடத்துகிறார். ஆனால், கடைசியில் பார்க்கும்போது இவர்கள் பிரபுவின் மகளுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணான நிகிலாவை கடத்தி வந்துவிடுகின்றனர்.
     
         அவள், பிரபுவின் தங்கையான விஜி சந்திரசேகரின் மகனுக்கு நிச்சயிக்கப்பட்டவர்.  தவறு நடந்துவிட்டதை நிகிலாவுக்கு விவரிக்கிறார் சசிகுமார். அவளும் அதை ஏற்றுக்கொண்டு ஊர்க்காரர்களுக்கு அதைச் சொல்லி புரிய வைப்பதாக அழைத்து செல்கிறார். ஆனால், நிகிலா யாரோ ஒருவனுடன் ஓடிவிட்டதாக கூறி, விஜி சந்திரசேகர் நிகிலாவின் அப்பாவை அவமானப்படுத்துகிறார். அவமானத்தால் அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.

      இதனால் நிகிலாவின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது. போலீஸ் விசாரணையில் நிகிலா, சசிகுமாருடன் விருப்பத்தின் பேரிலேயே சென்றதாக கூறி அவரை மாட்டிவிடுகிறார். இதனால், என்னசெய்வதென்று முழிக்கும் சசிகுமாரிடமே, நிகிலாவை அனுப்பி வைக்கின்றனர் போலீசார்.  இறுதியில், சசிகுமார் நிகிலாவுக்கு வாழ்க்கை கொடுத்தாரா? மியா ஜார்ஜ் உடன் சேர்ந்தாரா? தம்பியின் காதலை சேர்த்து வைத்தாரா? என்பதே மீதிக்கதை.

        நாயகன் சசிகுமார் வழக்கமான கிராமத்து கதைக் களத்திற்கு ஏற்ற நடிப்பு. அந்த வகையில் இந்த படத்திலும் தனது பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். ஆனால், குளோசப் காட்சிகளில் காட்டும்போது சரியான முகபாவனைகளை காட்ட ரொம்பவும் சிரமம் எடுத்துக் கொள்கிறார். அதேபோல், டான்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருவார்.  நாயகியான மியா ஜார்ஜ் பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கான காட்சிகள் குறைவுதான் என்றாலும், தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். புதுமுக நடிகைகளான நிகிலா, வர்ஷா ஆகியோரும் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிரபு தனது மகளுக்கு வேண்டியதை செய்துகொடுக்கும் பொறுப்புள்ள தந்தையாகவும், ஊரில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் முதல் ஆளாக தட்டிக்கேட்கும் தலைவராகவும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.  

       தம்பி ராமையா வரும் காட்சிகள் வழக்கம்போல் கலகலப்பு. விஜி சந்திரசேகர் வில்லியாக அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். கிராமத்து பாணியில் ஒரு நல்ல குடும்பப் பாங்கான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தமணி. வழக்கமான சசிகுமார் படங்களிலிருந்து இப்படத்தை மிகவும் மாறுபட்டு எடுத்திருக்கிறார். அந்த படங்களின் தாக்கம் தன்னுடைய படத்தில் இருந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால், முதலில் படம் மெதுவாக நகர்ந்தாலும், 30 நிமிடங்களுக்கு பிறகு விறுவிறுப்படைகிறது. அழகான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.  டி.இமான் இசையில் பாடல்கள் ஏனோ ரசிக்க தூண்டவில்லை. பின்னணி இசை ஓகே. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு தஞ்சை அழகையும், வயல்வெளிகளின் பசுமையையும் அழகாக படமாக்கியிருக்கிறது.  மொத்தத்தில் "வெற்றிவேல்" வெற்றிநடை!!!

9.4.16

சீனியர் "பா"விற்கு, ஜூனியர் "பா" விடுத்த இறுதி எச்சரிக்கை.


சமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் இப்பொழுது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

இது சம்பந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை ப்ரசாத் லேபில் நடைபெற்றது, அப்பொழுது பேசிய இயக்குனர் பாலா, இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா மற்றும் கதாசிரியர் திரு.ரத்னகுமாருக்கும் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பேசியதன் முழு விவரம்:


" பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! உங்களையெல்லாம் சந்தோஷமான தருணத்தில் சந்திக்க நினைத்திருந்த நான் இன்று மனவேதனையோடு சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது காரணம் இந்த விஷயத்தில் நான் மிகவும் காயப்பட்டிருக்கிறேன். 'கூட்டாஞ்சோறு' என்று  திரு.வேலாராமமூர்த்தி அவர்கள்  எழுதிய நாவலை படித்தேன், அந்த நாவல் அடுத்த பதிப்பில் 'குற்றப்பரம்பரை' என்று வெளியானது. அந்தக் கதையின் ஒரு பகுதியைமட்டும் நான் திரைக்கதையாக்கி எனது கற்பனையைக் கொண்டு படமாக எடுக்கப் போகிறேன் என்று அண்ணன் வேலாராமமூர்த்தியை அழைத்து கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால், இயக்குனர் பாரதிராஜா, ரத்னகுமார் ஆகிய இருவர் கூட்டணி எடுக்கப்போவது நடந்த உண்மைச் சம்பவத்தை உள்ளடக்கிய் வரலாறு.

இப்பொழுது நான் அவர்களுக்கு தெளிவாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். "நீங்கள் வரலாற்றை படமாக எடுக்கப்போகிறீர்கள். நான் அந்த நிகழ்வின் ஒரு பகுதியை படமாக எடுக்கிறேன். வரலாற்றுச் சம்பவங்களை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம், அப்படி ஒரு விஷயத்தைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். நான் செய்வது வேறு.

இதுசம்பந்தமாக ஏற்கனவே பாரதிராஜா என்னிடம் பேசியபோதே ‘நான் குற்றப்பரம்பரை வரலாற்றை படமாக எடுக்கவில்லை’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். அப்படியிருந்தும் பாரதிராஜா ‘என் எச்சிலை பாலா தின்னமாட்டான் என்று நினைக்கிறேன்’ என்று பேட்டி கொடுத்தார். கடந்தவாரம் தனஞ்ஜெயன் என்னை அழைத்து, ‘குற்றப்பரம்பரை படத்திற்கு பாரதிராஜா பூஜை போடுகிறார்’ என்று சொன்னபோதுகூட, ‘என்னை அழைத்தால் நானும் பூஜைக்கு நிச்சயம் வருவேன்’ என்றுதான் தனஞ்ஜெயனிடம் கூறினேன்.
அதை தனஞ்ஜெயனும் பாரதிராஜாவிடன் சொல்லியிருக்கிறார். அதற்கு பாரதிராஜா ‘அப்படியா சொன்னான்? சரி, எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. கூப்டலாமா வேணாமா’ன்னு யோசிக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார்.

பிறகு தனஞ்ஜெயனை தொடர்பு கொண்ட பாரதிராஜா ‘பாலா அங்கு வந்தால் யாராவது ஏதாவது பேசிவிட்டால் இருவருக்கும் மனஉளைச்சல். அதனால் கூப்பிடவேண்டாம்’ என்றிருக்கிறார். ஆனால் ரத்னகுமாரோ, ‘பாலா ஷூட்டிங்குக்கு வரட்டும். வந்து பாரதிராஜாவின் ஷூ துடைக்கட்டும்’ என்றும், ‘பாலா ஒரு கதைத் திருடன், பாலாவுக்கு ‘கூறு’ கிடையாது’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

ரத்னகுமார் தொடர்ந்து இதுபோல என்னை அவதூறாகப் பேசுவதை, பாரதிராஜா கண்டும் காணாமல் இருப்பது அவர் இவற்றை அனுமதிப்பது போலவே தெரிகிறது. இன்றைக்கு பாரதிராஜாவை அழைத்தேன். இரண்டு முறை எடுக்காதவர், மூன்றாவது முறை, எடுக்கிறார். ‘மூணாவது தடவையா கூப்றான்யா’ என்ற அவர் குரல் மட்டுமே கேட்க. உடனே கால் கட் செய்துவிட்டார்.

இதற்கு மேலும் நான் அமைதியாக இருந்தால், மழுமட்டையாக ஆகிவிடுவேன் என்பதால்தான் இந்த ப்ரஸ் மீட்'டிற்கு ஏற்பாடு செய்தேன்.

மேலும் அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் எடுப்பது வேறு. நான் எடுப்பது வேறு. என் படத்தின் தலைப்பு குற்றப்பரம்பரை அல்ல. வேறு தலைப்பு வைக்கப் போகிறோம்.


இரண்டாவது, இந்த ப்ரஸ்மீட்டின் மூலம், பாரதிராஜாவுக்கும் ரத்னகுமாருக்கும் இறுதி எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் உங்கள் படத்தை எடுங்கள். நான் என் படத்தை எடுக்கிறேன். இதனிடையில் என்னைக் காயப்படுத்துவது, உங்களுக்கு நல்லதல்ல. மேற்கொண்டு எதுவும் என்னைப் பற்றியோ, என் படத்தைப் பற்றியோ பேசாதீர்கள். இதுவே இறுதியாக இருக்கட்டும் " என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

பின், பத்திரிக்கையாளர்கள் ஒவ்வொருவராக கேள்வி கேட்க, மனவேதனையும், கோபமும் கலந்த பதில்களையே தந்தார் பாலா.
இந்த சந்திப்பின்போது, தனஞ்ஜெயனும் உடனிருந்தார்

20.2.16

சேதுபதி விமர்சனம்

காவலும், கம்பீரமுமாய் களம் புகுந்திருக்கிறார் "சேதுபதி".

"பண்னையாரும் பத்மினி''யும் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அருண்குமாரின் அடுத்த அதிரடி சரவெடியாய் "சேதுபதி". விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், வேலா ராமமூர்த்தி என பலரின் நடிப்பிலும், நிவாஸ் K பிரசன்னாவின் இசையிலும், தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், ஷான் சுதர்ஷனின் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது இப்படம்.


         மதுரையின் ஒரு பகுதி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் விஜய் சேதுபதி. மனைவி ரம்யா நம்பீசன் இரண்டு குழந்தைகள் என அழகான குடும்பம். இவ்வாறு வாழ்க்கை செல்ல, தன் கன்ட்ரோலில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் வில்லன் வேலா ராமமூர்த்தியால் வெட்டி கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கை கையில் எடுக்கும் விஜய் சேதுபதி மதுரையே கண்டு மிரளும் வேலா ராமமூர்த்தியை கைது செய்கிறார். இதற்காக வேலா ராமமூர்த்தி விஜய் சேதுபதியை பழி வாங்க துடிக்கிறார்.

          இந்த சூழ்நிலையில் வேறு ஒரு செயின் திருட்டு வழக்கில் கைதானவர்களிடம் விசாரனையில் யாரோ ஒருவர் விஜய் சேதுபதியின் ரிவால்வரை லோஃட் செய்து கொடுக்க எதிர்பாராத விதமாக கைதியை சுட்டு விடுகிறார். இதனால் மிகப்பெரும் சிக்கலில் மாட்டுகிறார். இதனால் இவரின் பதவிக்கும், பதவி உயர்வுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
       இதிலிருந்து எப்படி வெளிவந்தார் விஜய் சேதுபதி? வேலா ராமமூர்த்தி விஜய் சேதுபதியை பழிவாங்கினாரா? இல்லையா? என்பது
மீதக்கதை.

இதுவரை காமெடியாய் காட்சி தந்த விஜய் சேதுபதி முதன்முறையாக மிடுக்கான, துடிப்பான், கம்பீரமான காவல்துறை அதிகாரியாக கச்சிதமாய் காட்சியளிக்கிறார். நடிப்பும் வழக்கமான வெற்றி தான்.

          பீட்சா விற்கு பின் விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார் ரம்யா நம்பீசன். இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்ற கதாபாத்திரம், எந்த கதாநாயகியும் விரும்பாத ஒரு கதாபாத்திரம். இந்த துணிவிற்கே பாராட்டலாம். தனக்கான கதாபாத்திரத்தை முழுமையாகவும் அழகாகவும் நிறைவு செய்திருக்கிறார். இவர்களின் குழந்தைகளாக நடித்திருக்கும் இரண்டு குழந்தைகளும் நடிப்பால் அணைவரின் மனதிலும் ஆழமாய் பதிவார்கள் என்பது நிச்சயம்.

வில்லன் வேலா ராமமூர்த்தி மென்மையான மிரட்டலுடன் அனைவரும் பாராட்டும் ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
"பண்னையாரும் பத்மினியும் " என்ற அழகான ஆழமான கதையைத் தந்த இயக்குனர் அருண்குமார் . வேகம் மிரட்டல் என கதைகள் களத்தை அதிரடியாய் அமைத்திருக்கிறார். ஆனால் படத்தில் காமெடியை கடுகளவேனும் காட்ட தவறியது குறை.

நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும், பாடல்களும் சுமார் ரகம். சில இடங்களில் இரைச்சலைக் குறைத்திருக்கலாம்.. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு பலம். பல காட்சிகளை தத்ரூபமாய் அமைத்தற்கு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் விஜய் "சேதுபதி" மிரட்டல்.

5.2.16

சேது பூமி விமர்சனம்

    வீரம், துரோகம், காதல் கலந்த கிராமத்து கலவை  "சேது பூமி".ராயல் மூன் என்டர்டைன்மன்ட்ஸ், M .R.ஹபீப் தயாரிப்பில், A.R. கேந்திரன் முனியசாமி இயக்கத்தில், கதாநாயகன் தமன், கதாநாயகி சமஸ்கிருதி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் "சேது பூமி".


                    இராமநாதபுரம் மாவட்ட கிராமம் ஒன்றை கதை களமாக கொண்ட இப்படத்தின் கதாநாயகன் தமன். பட்டப்படிப்பு முடித்து சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதேசமயம் சீனா சென்று பணிபுரிய வேண்டும் என்ற அவரது கனவு கைகூடி வரும் சமயம் சில காலம் குடும்பத்தோடு இருப்பதற்கு விடுமுறை எடுத்து தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார் தமன்.

         தமனின் தந்தை தன் ஊரில் தனக்கென்று ஒரு செல்வாக்குடன் இருப்பது, அவரை அதே ஊரில் உள்ள தாதா மற்றும் தாதாவுக்கு துணையாக போலீஸும் இருக்கிறார்கள். கிராமத்து தேவதையாய் வரும் சமஸ்கிருதியிடம் கண்டதும் காதலாய் தன் காதலை தமன் சொல்ல, அம்மா இல்லாமல் வளர்ந்த தான் தன் தந்தையை விட்டு வர முடியாது என்று தமனின் காதலை ஏற்க மறுக்கிறார்.

   இதனால் மனமுடைந்த நிலையில் சீனா கிளம்புகிறார் தமன் அதே வேளையில் ஒரு மர்ம கும்பலால் சமஸ்கிருதியை வெட்டப்படுகிறார்.

   இறுதியில் அந்த மர்ம கும்பல் யார்? தமன் சீனா கிளம்பினாரா? இல்லையா? சமஸ்கிருதியை என்ன ஆனார்? தமன் சமஸ்கிருதியின் காதல் என்னவானது? என்பது மீதிக்கதை.

      கதாநாயகன் தமன் பட்டப்படிப்பு முடித்த கிராமத்து கதாநாயகனாய் அழகாய் காட்சியளிக்கிறார். தனது நடிப்பை முழுமையாய் நிறைவு செய்திருக்கிறார். கதாநாயகி  சமஸ்கிருதி கதையின் நாயகியாய் வந்து அனைவரின் மனதிலும் பதிகிறார். சிங்கம்புலி காமெடியை தனி ஆளாக கையாண்டிருக்கிறார்.

  முதல் பாதியில் ஆக்ரோஷமாகவும், பின் பாதியில் பொறுப்பான தாய்மாமனாகவும் தன் நடிப்பாலும், இயக்குனராகவும் முதிர்ச்சி அடைந்திருக்கிறார். வி.டி.பாரதி, வி.டி.மோனிஷ் என இரட்டையரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் மட்டுமே. முத்துராமலிங்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் , கிராமத்து கதைக்களத்தை அழகாய் காட்சி படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் "சேது பூமி" வீரமும் விவேகமும் கலந்த பூமி.

30.1.16

இறுதிச் சுற்று விமர்சனம்.

ஆங்ரி பேர்ட் ரித்திகா + ஆக்ரோஷமான மாதவன் ஆகிய கலப்பு இரட்டையரைக் கொண்டு களமிறங்கி தமிழில் இதுவரை வெளிவந்த குத்துச்சண்டை படங்கள் அனைத்தையும்
"நாக்-அவுட்" செய்து வெற்றி பாதையில் கம்பீரமாய் பயணம் செய்யும் படம் "இறுதிச்சுற்று".

Y not Studios, UTV motion pictures, மற்றும் திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட்' ன் இணைத்தயாரிப்பில், சுதா கொங்க்ராவின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணனின் இசையில், மாதவன், ரித்திகா சிங், மும்தாஜ் சொர்க்கர், நாசர், ராதாரவி ஆகியோர் நடிப்பில் தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட படம்.


   வழக்கமான விளையாட்டு அரசியலால் தன் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போன ஏமாற்றத்தில் ஒரு ஆக்ரோஷ குத்துச்சண்டை வீரனாய் மாதவன். இந்த சூழ்நிலையில் தன் மனைவியும் பிரிந்து செல்ல, ஏமாற்றம், தோல்வி, விரக்தி என ஒட்டு மொத்த கலவையாய் முரட்டுதனமான கோச்'சாய் மாறுகிறார் மாதவன். மீண்டும் குத்துச்சண்டை அசோசியேசனின் அரசியலால் "முடிந்தால் ஒரு சாம்பியனை உருவாக்கு..." என்ற சவாலுடன் டெல்லியிலிருந்து சென்னைக்கு மாற்றப்படுகிறார். அங்கு ஜூனியர் கோச்சான நாசரால் கை காட்டப்படும் குப்பத்து பெண்ணான மும்தாஜ் சொர்க்கரை தேர்வு செய்து பயிற்சியை தொடங்குகிறார் மாதவன். அந்த சூழ்நிலையில் மும்தாஜ் சொர்க்கரின் தங்கை ரித்திகா சிங்'கின் விளையாட்டுத்தனம், கோபம், வெறி, வேகம் என அனைத்தையும் உற்று கவனிக்கும் மாதவன் ரித்திகா'வை பாக்ஸராக்கும் முயற்சியில் இறங்குகிறார். அக்காவை போல் பாக்ஸிங் ஆர்வம் இல்லாமல் மாதவன் தரும் பணத்திற்காக சம்மதிக்கிறார் ரித்திகா. இதனால் பொறாமை கொண்டு ரித்திகா'வை விளையாட விடாமல் இடையூறு செய்யும் வேலையில் இறங்குகிறார் மும்தாஜ். அதே வேளையில் மாதவனை வெற்றிபெறவிடக் கூடாது என அசோசியேஷனும் சூழ்ச்சிகள் பல செய்கிறது. இவற்றையெல்லாம் மீறி ரித்திகா சாம்பியன் பட்டம் வென்றாரா? மாதவன் சாவலில் ஜெயித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.

ஒரு சமயத்தில் பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வந்த சாக்லேட் பாய் இப்படத்தில் "மேடி" வெர்ஷன் 2 'வாக உருமாறியிருக்கிறார். கலைந்த கேசம், இரும்பு உடல், முரட்டுத்தனம், கோபம், திமிர் என ஒட்டு மொத்த கலவையாய் நடிப்பிலும் வசனத்திலும் மிரள வைக்கிறார் மாதவன்.

குறும்புத்தனம், பிடிவாதம் என அறிமாகும் குப்பத்து பெண் ரித்திகா, க்ளைமேக்ஸில் சர்வதேச சாம்பியன் ஆகும் வரை பயணம் செய்யும் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக முடித்திருக்கிறார். இவர் உண்மையான குத்துச்சண்டை வீராங்கனை என்பதால் குத்துச்சண்டை காட்சிகளில்  செயற்கைத்தனம் துளியளவும் தெரியவில்லை.

மேலும் ஜூனியர் கோச்சாக வரும் நாசர், மாதவனுக்கு பக்கபலமாய் இருக்கும் ராதாரவி, மற்றும் காளி வெங்கட், மும்தாஜ் சொர்க்கர் என அனைவரின் நடிப்பும் முழுமை .

 இயக்குனர் மணிரத்னம் அவர்களின் பட்டறை பெண் சுதா கொங்க்ரா. இரண்டரை ஆண்டுகளாய் பெண்கள் குத்துச்சண்டை சம்பந்தமான செய்திகளை சேகரித்து படத்தை பிரம்மாண்டமாய் கொடுத்திருப்பதிலேயே இவரது அனுபவ கல்வி தெரிகிறது. "இப்படத்தில் வரும் அனைத்தும் கற்பனையே, யாரையும் குறிப்பிட்டுவன அல்ல" என போடாமல் "உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது" என ஸ்லைடு போட்டதற்கே இந்த ''பெண்மை" ஒரு சல்யூட்.

பெண்கள் குத்துச்சண்டை உலகில் நடக்கும் வழக்கமான விளையாட்டு அரசியல், அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவதை சுவாரஸ்யமாக அமைத்திருக்கும் இயக்குனர் சுதா'விற்கு வெற்றி மகுடம் சூட்டலாம். விளையாட்டு பின்னணி சினிமாவின் வழக்கமான க்ளைமாக்ஸ் என்றாலும் அதிலும் ட்விஸ்ட் வைத்திருப்பது புதுவிதம். சந்தோஷ் நாராயணின் பின்னனி இசை படத்திற்கு பலம். ஆனால் பாடல்கள் எங்கோ கேட்ட ரகம்.

 மொத்தத்தில் இந்த சினிமா விளையாட்டில் இப் படக்குழுவினரின் கைகளை உயர்த்தி அறிவிக்கலாம் "தி வின்னர் இஸ் இறுதிச் சுற்று.." என்று.
வழக்கமான விளையாட்டு அரசியலால் தன் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போன ஏமாற்றத்தில் ஒரு ஆக்ரோஷ குத்துச்சண்டை வீரனாய் மாதவன். இந்த சூழ்நிலையில் தன் மனைவியும் பிரிந்து செல்ல, ஏமாற்றம், தோல்வி, விரக்தி என ஒட்டு மொத்த கலவையாய் முரட்டுதனமான கோச்'சாய் மாறுகிறார் மாதவன். மீண்டும் குத்துச்சண்டை அசோசியேசனின் அரசியலால் "முடிந்தால் ஒரு சாம்பியனை உருவாக்கு..." என்ற சவாலுடன் டெல்லியிலிருந்து சென்னைக்கு மாற்றப்படுகிறார். அங்கு ஜூனியர் கோச்சான நாசரால் கை காட்டப்படும் குப்பத்து பெண்ணான மும்தாஜ் சொர்க்கரை தேர்வு செய்து பயிற்சியை தொடங்குகிறார் மாதவன். அந்த சூழ்நிலையில் மும்தாஜ் சொர்க்கரின் தங்கை ரித்திகா சிங்'கின் விளையாட்டுத்தனம், கோபம், வெறி, வேகம் என அனைத்தையும் உற்று கவனிக்கும் மாதவன் ரித்திகா'வை பாக்ஸராக்கும் முயற்சியில் இறங்குகிறார். அக்காவை போல் பாக்ஸிங் ஆர்வம் இல்லாமல் மாதவன் தரும் பணத்திற்காக சம்மதிக்கிறார் ரித்திகா. இதனால் பொறாமை கொண்டு ரித்திகா'வை விளையாட விடாமல் இடையூறு செய்யும் வேலையில் இறங்குகிறார் மும்தாஜ். அதே வேளையில் மாதவனை வெற்றிபெறவிடக் கூடாது என அசோசியேஷனும் சூழ்ச்சிகள் பல செய்கிறது. இவற்றையெல்லாம் மீறி ரித்திகா சாம்பியன் பட்டம் வென்றாரா? மாதவன் சாவலில் ஜெயித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.

ஒரு சமயத்தில் பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வந்த சாக்லேட் பாய் இப்படத்தில் "மேடி" வெர்ஷன் 2 'வாக உருமாறியிருக்கிறார். கலைந்த கேசம், இரும்பு உடல், முரட்டுத்தனம், கோபம், திமிர் என ஒட்டு மொத்த கலவையாய் நடிப்பிலும் வசனத்திலும் மிரள வைக்கிறார் மாதவன்.

குறும்புத்தனம், பிடிவாதம் என அறிமாகும் குப்பத்து பெண் ரித்திகா, க்ளைமேக்ஸில் சர்வதேச சாம்பியன் ஆகும் வரை பயணம் செய்யும் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக முடித்திருக்கிறார். இவர் உண்மையான குத்துச்சண்டை வீராங்கனை என்பதால் குத்துச்சண்டை காட்சிகளில்  செயற்கைத்தனம் துளியளவும் தெரியவில்லை.

Y not Studios, UTV motion pictures, மற்றும் திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட்' ன் இணைத்தயாரிப்பில், சுதா கொங்க்ராவின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணனின் இசையில், மாதவன், ரித்திகா சிங், மும்தாஜ் சொர்க்கர், நாசர், ராதாரவி ஆகியோர் நடிப்பில் தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட படம்.

ஆங்ரி பேர்ட் ரித்திகா + ஆக்ரோஷமான மாதவன் ஆகிய கலப்பு இரட்டையரைக் கொண்டு களமிறங்கி தமிழில் இதுவரை வெளிவந்த குத்துச்சண்டை படங்கள் அனைத்தையும்
"நாக்-அவுட்" செய்து வெற்றி பாதையில் கம்பீரமாய் பயணம் செய்யும் படம் "இறுதிச்சுற்று".

மேலும் ஜூனியர் கோச்சாக வரும் நாசர், மாதவனுக்கு பக்கபலமாய் இருக்கும் ராதாரவி, மற்றும் காளி வெங்கட், மும்தாஜ் சொர்க்கர் என அனைவரின் நடிப்பும் முழுமை .

 இயக்குனர் மணிரத்னம் அவர்களின் பட்டறை பெண் சுதா கொங்க்ரா. இரண்டரை ஆண்டுகளாய் பெண்கள் குத்துச்சண்டை சம்பந்தமான செய்திகளை சேகரித்து படத்தை பிரம்மாண்டமாய் கொடுத்திருப்பதிலேயே இவரது அனுபவ கல்வி தெரிகிறது. "இப்படத்தில் வரும் அனைத்தும் கற்பனையே, யாரையும் குறிப்பிட்டுவன அல்ல" என போடாமல் "உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது" என ஸ்லைடு போட்டதற்கே இந்த ''பெண்மை" ஒரு சல்யூட்.

பெண்கள் குத்துச்சண்டை உலகில் நடக்கும் வழக்கமான விளையாட்டு அரசியல், அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவதை சுவாரஸ்யமாக அமைத்திருக்கும் இயக்குனர் சுதா'விற்கு வெற்றி மகுடம் சூட்டலாம். விளையாட்டு பின்னணி சினிமாவின் வழக்கமான க்ளைமாக்ஸ் என்றாலும் அதிலும் ட்விஸ்ட் வைத்திருப்பது புதுவிதம். சந்தோஷ் நாராயணின் பின்னனி இசை படத்திற்கு பலம். ஆனால் பாடல்கள் எங்கோ கேட்ட ரகம்.

 மொத்தத்தில் இந்த சினிமா விளையாட்டில் இப் படக்குழுவினரின் கைகளை உயர்த்தி அறிவிக்கலாம் "தி வின்னர் இஸ் இறுதிச் சுற்று.." என்று.

23.1.16

மூன்றாம் உலகப்போர் விமர்சனம்

பக்கத்து வீட்டு பாகிஸ்தானின் பழைய பஞ்சாயத்தை பார்த்து பழகிய நமக்கு,  எதிர் வீடான சீனாவுடனான புது பஞ்சாயத்தை காட்டும் கற்பனைதான்  "மூன்றாம் உலகப்போர்".


ஆர்ட்டின் ஃப்ரேம்ஸ் மற்றும் TRS ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுகன் கார்த்தி இயக்கத்தில், நாயகன் சுனில் குமார், நாயகி அகிலா கிஷோர் நடித்து, வேத் ஷங்கர் இசை மற்றும் தேவா ஒளிபதிவில் திரைக்கு வந்திருக்கிறது இப்படம். வரும் 2025ல் வரப்போகும் மூன்றாம் உலகப்போர் இந்தியா - சீனாவிற்கும் தான் வரும் என்ற கற்பனை கலந்த கலவைதான் இந்த திரைப்படம். .

இந்திய ராணுவத்தில் மேஜரான கதாநாயகன் சுனில் குமார், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வர கதாநாயகி அகிலா கிஷோரை திருமணம் செய்கிறார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவியை பிரிந்து மீண்டும் பணிக்கு செல்கிறார் சுனில் . அதே நேரத்தில் சீன ராணுவ தளபதி வில்சன், இந்தியாவில் நாசவேலை செய்து நிலைகுலைய வைக்க தனது மகனோடு 100 சீன வீரர்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் அனைவரையும் கண்கானிக்க ஒவ்வொருவரின் உடம்பிலும் கம்யூட்டர் சிப் ஒன்றை பொருத்தி அனுப்புகிறார்கள். ஆனால் திடீரென அவர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட, இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மேஜர் சுனில் & கோ'வை சிறைபிடிக்கிறார் வில்லன் வில்சன்.

           தான் அனுப்பிய 100 வீரர்களின் நிலை என்ன என்பதை அறிய சிறைபிடிக்கப்பட்ட மேஜர் சுனில் மற்றும் மற்ற வீரர்களை கொடுமைபடுத்தும் வில்சன், கதாநாயகனைத் தவிர அனைவரையும் கொன்றுவிடுகிறார். பின் இந்தியாவில் ஊடுறுவிய 100 சீன வீரர்களின் நிலை என்ன? சீன ராணுவத்திடம் சிக்கிய இந்திய மேஜர் சுனில் தப்பித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.

                     நாயகன் சுனில் ராணுவ தளபதிக்குரிய மிடுக்குடன் அழகாக நடித்திருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் தெளிவற்ற நிலைதான். படத்தில் இவருக்கென ஒரு நாயகி இருந்தாலும் இவர்கள் இருவருக்குமான காட்சிகள் மிக குறைவு .
                        நாயகி அகிலா கிஷோர் சில காட்சிகளே தோன்றினாலும் மனதில் பதியும் கதாபாத்திரம். வில்லன் வில்சன் சீன தளபதியாக வந்து மிரட்டுகிறார். படத்தில் இவரும் நாயகனும் பேசிக் கொள்ளும்   வசனங்கள் இந்தியர் ஒவ்வொருவரின் குருதியை அனலாக்கும் ரகம். 2025ல் நடக்கும் போர் என்றாலும் காட்சிகளில் அதற்க்குன்டான தொழில்நுட்பமும், தெளிவும் இல்லாதது மிகப்பெரும் குறை. ஃகிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் வீடியோ கேம் போன்றே தோன்றுகிறது. வேத் சங்கரின் இசை இறைச்சலைத் தருகிறது. பின்னணியில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். தேவாவின் ஒளிப்பதிவு அனுபவ குறைவு. ஆனால் படத்தின் மிகப்பெரும் பலம் "வசனம்".

மொத்தத்தில் "மூன்றாம் உலகப்போர் - 2025ம் ஆண்டின் நியூ வெர்ஸன் வீடியோ கேம்".

15.1.16

கெத்து விமர்சனம்

           உதயநிதியின் "ரெட் ஜெயின்ட் மூவிஸ்" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்தனம்,       உதயநிதியின் ஆக்ஷன் அவதாரம் என புதிய கலவையுடன் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் "கெத்து".     ஸ்னிப்பர் கொலைகாரனாக வரும் விக்ராந்த். ஒரு விஞ்ஞானியை கொலை செய்வதற்காக குமுளி செல்கிறார். அங்கே நூலகம் நடத்தி வருபவர் உதயநிதி. ஒரு சூழலில் செய்தி வாசிப்பாளாராக முயற்சிக்கும் எமி ஜாக்சனுக்கும், நூலகம் நடத்தும் உதயநிதிக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எமிக்கு உதயநிதி மேல் காதல் ஏற்படுகிறது, ஆனால் உதயநிதி பிடி கொடுக்காமல் இருப்பதும், இவர்கள் இருவரின் காதல் காட்சிகளும் படத்திற்கு வேகத்தடையே.

   காதல், காமெடி என தொடர்ந்து ஒரே வண்டியில் உலா வந்த உதயநிதிக்கு ஆக்ஷன் அவதாரம் அம்சமாக அமைந்திருக்கிறது. சத்யராஜ் வழக்கம் போல் தன் கதாபாத்திரத்தை முழுமையாக பூர்த்தி செய்திருப்பது படத்திற்கு பலம்.
 உதயநிதியின் அப்பாவாக வரும் சத்யராஜ் இப்படத்தில் பி.டி. மாஸ்டராக நடித்திருக்கிறார். இவர் பி.டி. மாஸ்டராக பணிபுரியும் பள்ளியின் அருகில் ஒரு மதுக்கடையும், பாரும் நடத்தி வருகிறார் மைம் கோபி. இவரின் மதுக்கடையால் பள்ளிக்கும்,  மாணவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட கடையை மூட வலியுறுத்தி போலீஸில் புகார் அளிக்கிறார் சத்யராஜ். இதையறிந்த மைம் கோபி, சத்யராஜை பிடித்து தன் கடையில் வைத்து பூட்ட, அதுவரை சாதுவாக இருந்த  உதயநிதி உக்கிர தாண்டவமாய் மாறி தன் தந்தையை காப்பாற்றுகிறார். ஆனால் மறுநாள் மைம் கோபி இறந்து கிடக்க. அந்த இடத்தில் சத்யராஜின் மோதிரம் கிடைக்க, போலீஸ் சத்யராஜை கைது செய்கிறது. பின் சத்யராஜின் நிலை என்ன? உதயநிதி தன் தந்தையை காப்பாற்றினாரா? இல்லையா? விக்ராந்த் என்னவானார்? என்பது மீதிக் கதை.

   எமி ஜாக்சன் வழக்கமான காதலியாக வந்து போகிறார். படத்தின் ஹைலைட் கதாபாத்திரம் விக்ராந்த். கதாநாயகனைவிட  முக்கிய கதாபாத்திரம் இவருடையது. படத்தில் இவருக்கு வசனங்கள் அதிகம் இல்லை என்றாலும், இவரின் ஆக்ரோஷ கண்கள் ஆயிரம் வசனங்களை அசாதாரணமாக கூறி செல்வது பிரம்மாண்டம். படத்திற்கு மிகப்பெரும் பலமும் இவரே.

 இயக்குனர் திருக்குமரன் கதை, களம் என அனைத்தையும் அழகாக படத்தை அமைத்திருக்கிறார். கதைக்கு முக்கியம் என்றால் வில்லனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள். ஆனால் சில இடங்களில் சொதப்பும் காட்சிகள் படத்தின் மைனஸ். ஹாரிஷ் ஜெயராஜ் பாடல்கள் நன்றாக இருந்தாலும், அரைத்த மாவை அரைத்தது போல் ஒரு ஐயம் தோன்றுகிறது. படத்தின் பின்னணி இசை ரசிகர்களுக்கு இரைச்சலையும், எரிச்சலையும் தருவது படத்தின் மைனஸ் என்று கூறலாம்.சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து, காட்சிகள் அனைத்தும் படத்திற்கு வலு சேர்க்கிறது.

மொத்தத்தில் "கெத்து" வெத்தாகாது என நம்பலாம்.

தாரை தப்பட்டை விமர்சனம்

கம்பெனி ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், B ஸ்டுடியோஸ் வழங்கும் , பாலா'வின் "தாரை தப்பட்டை"


    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி என ஆக்ரோஷ பட வரிசைகளில் தனது சிஷ்யன் சசிகுமாரையும், வரலஷ்மியையும் வைத்து ஆரவாரமாக களமிறங்கியிருக்கிறார் பாலா. பாலாவின் படம் என்பதை மீறி இசைஞானி இளையராஜா'வின் 1000மாவது என்கிற பரபரப்பில் களம் கண்ட இப்படம் பட்டையை கிளப்பியதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

கிராமத்திய கலைஞன் என்கிற புலவர் சாமியின் மகன் சசிக்குமார், தந்தையிடம் அனைத்து கலைகளையும் கற்றிருந்த சசிக்குமாரும் அவர் நடத்தும் இசைக்குழுவும் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில், அந்தமானில் கச்சேரி நடத்த ஒரு வாய்ப்பு வருகிறது.

சசிகுமார், வரலஷ்மி மற்றும் அவரது குழுவினர் அந்தமான் செல்கின்றனர். சென்ற இடத்தில் கச்சேரிக்கு அழைத்து வந்தவர் வரலஷ்மியை தவறாக அணுக பிரச்சனை வருகிறது,வரலஷ்மி அவர்களை அடித்து உதைக்க, கோபத்தில் கச்சேரிக்கு அழைத்து வந்தவர் சசிகுமார் மற்றும் குருவினரின் கப்பல் டிக்கெட்டை கிழிக்க, பின் கஷ்டப்பட்டு பணம் திரட்டி ஊர் வந்து சேர்கின்றனர்.

 இந்நிலையில் வரலஷ்மியின் ஆட்டத்தை பார்த்து அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டு வரலஷ்மியின் அம்மாவிடம் கேட்கும் ஆர்.கே.சுரேஷ், தான் கலெக்டரின் டிரைவர் என்றும் தனக்கு வரலஷ்மியை திருமணம் செய்து வைக்குமாறு கேட்க, வரலஷ்மியின் அம்மாவும் சசிகுமாரிடம் பேசி வரலஷ்மிக்கும் ஆர்.கே.சுரேஷிற்கும் திருமணம் செய்து வைக்கிறார்.முதலிரவு அன்று ஆர்.கே.சுரேஷின் சுயரூபம் தெரிய வரலஷ்மியின் நிலை என்னவானது? சசிகுமார் வரலஷ்மியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது மீதி கதை.

      எல்லா படங்களிலும் நட்பை மட்டுமே தோழில் சுமந்து வந்த சசிகுமார் முதன் முறையாக "தப்பை" தோழில் மாட்டி, தாறுமாறாக அடித்தும், நடித்தும் நொறுக்கியிருக்கிறார். வரலஷ்மி மீது காதலை வைத்து வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் சூழலிலும், தந்தையிடம் காட்டும் கோபம், அவர் இறந்த பின் காட்டும் அன்பு, வரலக்ஷ்மியை இன்னொருவருக்கு கல்யாணம் செய்து வைக்கும் பொழுது வரும் கண்ணீர் என ஒட்டு மொத்த நடிப்பையும் கொட்டிவிட்டார்.

     வரலஷ்மி சசிகுமாரிடம் மாமா          மாமா என உருகுவதும், மாமனாருடன் உட்காந்து தண்ணி அடிப்பதும், என ஒரு ரெளடி தோரணையில் வரும் இவர் தன் நடிப்பால் முதல் பாதியில் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விட்டார்.   குறிப்பாக இசைஞானியின் கிராமிய இசைக்கு ஈடுகொடுத்து ஆடும் இவரின் ஆட்டம் இனி எந்த நடிகையாலும் இயலாத காரியம். முதல் பாதியில் மரண ஆட்டம் போட்ட வரலஷ்மி பின்பாதியில் காணாமல் போனது படத்திற்கு பலவீனம்.

இசைஞானியின் கிராமத்து இசை பசிக்கு சரியான தீனி இப்படம் . பாடல்களும், பின்னணி இசையும் மிரட்டல், " அடிக்கிற அடியில் தாரை தப்பட்டை கிழிந்து தொங்க வேண்டாமா..?" என்ற வடிவேலுவின் பிரபல வசனத்திற்கு ஏற்றாற்போல் உண்மையிலேயே கிழித்து தொங்க விட்டிருக்கிறார் இசைஞானி.செழியனின் ஒளிப்பதிவில், ஜி.சசிகுமாரின் படத்தொகுப்பும் பிரமாதம். படத்தின் க்ளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சி ஒரிஜினல் பாலா'வை நம் கண் முன் நிறுத்தும். கற்பனைக்கு எட்டியதை தத்ரூபமாக காட்சி படுத்தும் கருணையற்றவர் இயக்குனர் பாலா என்பதற்கு இந்த க்ளைமாக்ஸும் சாட்சி.

மொத்தத்தில் "தாரை தப்பட்டை" இசைஞானியின் இசைக்காகவும்,
வரலஷ்மியின் ஆட்டத்திற்காகவும் பார்க்கலாம்.

4.1.16

இறுதிச்சுற்று இசை வெளியீட்டு விழா        Y Not ஸ்டுடியோஸ் - சசிகாந்த், திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் - சி.வி.குமார், UTV மோஸன் பிக்சர்ஸ், ராஜ்குமார் ஹிராணி மற்றும் மாதவன் ஆகியோரின் இணை தயாரிப்பில், பெண் இயக்குனர் சுதா கோங்கரா'வின் இயக்கத்தில், நடிகர் மாதவன், நாசர், ராதாரவி, காளி வெங்கட், நடிகைகள் ரித்திகா சிங் மற்றும் மும்தாஜ் சார்கர்  ஆகியோரின் நடிப்பில், சந்தோஷ் நாராயணனின் இசையில் இந்த மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கும் படம் "இறுதிச்சுற்று". ஒரு குத்துச்சண்டை வீராங்கணையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தின் இசைத்தகடு வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸ்-ல் நடைபெற்றது.

       விழாவில் பங்கேற்று பேசிய அனைவரும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதோடு, படத்தின் முக்கிய அம்சங்கள், கதை, படம் எடுக்கப்பட்ட சூழ்நிலைகள் என அனைத்தையும் விளக்கமாக கூறினர்.. இப்படத்திற்கு பாடல் இயற்றிய பாடலாசிரியர்கள் பேசும் பொழுது, பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது என்றும், எங்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளருக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறினர். மேலும் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர்களில் ஒருவரான C.V.குமார், படத்தின் கதையக் கேட்டதும், மற்றொரு தயாரிப்பாளரான சசிகாந்திடம் கலந்தாலோசித்து தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் தயாரித்து வெளியிட முடிவு செய்து ராஜ்குமார் ஹிராணியுடன் கைகோர்த்ததாகவும், எங்களுடன் முழு ஒத்துழைப்பு தந்த ஹிராணிக்கும், இயக்குனர் சுதா, மற்றும் நடிகர் மாதவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் படமும் பாடலும் சிறப்பாக வந்திருப்பதுடன் படம் இருமொழியிலும் மிகப்பெரிய வெற்றியடையும் என்றும் கூறினார்.

      அடுத்ததாக பேசிய இப்படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளரில் ஒருவரான மாதவன், நீண்ட இடைவெளிக்குப் பின்பு தமிழ் திரையுலகிற்கு வந்திருக்கும் தான் இப்படத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனைக்கு பயிற்சியாளராக நடித்திருப்பதாகவும் படம் பிரமாதமாக அமைந்திருப்பதாகவும், மேலும் இயக்குனர் சுதா, தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர், நடிகைகள் ரித்திகா, மும்தாஜ் மற்றும் அனைத்து தமிழ் ரசிக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து விழாவில் பங்கேற்று பேசிய நடிகைகள் ரித்திகா, மும்தாஜ், இயக்குனர் என அனைவரும் படத்தில் தங்களோடு இணைந்து பணியாற்றியவர்களுக்கும், படம் சிறப்பாக அமைய உறுதுணையாய் இருந்த அனைவருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் கூறி அமர்ந்தனர். படத்தின் இயக்குனர்  சுதா'விடம் படம் தாமதமாக எடுத்ததற்கான காரணம் என்னவென்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர், படம் 2014ல் எடுக்கப்பட்டது, பின் சில காட்சிகள், மற்றும் சில காரணங்களால் தாமதமாக எடுக்கப்பட்டது என்று கூறினார். மற்றொரு கேள்விக்கு படம் முழுக்க முழுக்க தமிழில் உருவானது என்றும் சென்னையிலேயே படம் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

   மாதவனிடம் தன் கதாபாத்திரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராகவும், அதுவும் பொறுக்கி போன்ற கதாபாத்திரம் என்றும், தான் பயிற்றுவிக்கும் குத்துச்சண்டை வீராங்கனையே தன்னை காதலிப்பது, அதற்கான காரணம் எனவும்,  விளையாட்டைப் பற்றி வந்த மற்ற படங்களைப் போலல்லாமல் இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதையாகவும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

- லெனின்