விளையாட்டு

மேற்கு வங்க கிரிக்கெட் தலைவராக நியமிக்கப்பட்டார்  சௌரவ் கங்குலி

கொல்கத்தா, செப்டம்பர் 24: மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த டால்மியா கடந்த 20ஆம் தேதி மரணம் அடைந்ததை தொடர்த்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் ஏற்பாடுகள் கடந்த 4 நாள்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்தது. இணைச்செயலாளராக பதவி வகித்து வந்தா சௌரவ் கங்குலி சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னை தலைவராக தேர்ந்தெடுத்த சங்க உறுப்பினர்களுக்கு சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த டால்மியாவின் மகன் அபிஷேக் துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை செயலாளராக தன்னை நியமித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்கு வங்க கிரிக்கெட்டில் எப்போது பிரச்னை ஏற்பட்டாலும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவாக இருந்து வருகிறார். பிரச்னையான நேரங்களில் எனது தந்தை கூட அவரது ஆதரவைப் பெற்றுள்ளார் என்றார்.