செய்திகள்!!


கடிவாளமில்லாத ஊழியர் போராட்டம். கலவரமாக மாறியது..
மாருதி  பொது மேலாளர் எரித்துக் கொலை

புது டெல்லி , ஜூலை20:  ஹரியாணா மாநிலம் குர்காவ்ன் மானசேரில் மாருதி கார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஊழியர்கள் போராட்டத்தின்போது  மூண்ட கலவரத்தில் ஒருவர் எரித்துக் கொல்லப் பட்டார்! 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காயமடைந்தனர்!! சில ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மாருதி கார் தொழிற்சாலையில்   புதன்கிழமை போராட்டம் நடந்தது. அப்போது பல இடங்களில் தீ வைக்கப்பட்டது. இதில் அந்த நிறுவனத்தின் மனித ஆற்றல் பிரிவின் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ் உயிரிழந்தார். அவர் இருந்த அலுவலக அறையை இழுத்துப் பூட்டிய பின்னர் தொழிலார்கள் தீ வைத்ததாக கூறப் படுகிறது.. .அதனால்  தீயில் சிக்கி அவனீஷ்குமார் தேவ் உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது.
    இந்த சம்பவத்தால் வியாழக்கிழமை தொழிற்சாலையில் பணிகள் நடைபெறவில்லை. தொழிற்சாலையைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 91 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  ""இந்த கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ஹரியாணா அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் மாருதி தொழிற்சாலை நிர்வாகம் " ஊழியர்கள் மனித ஆற்றல் பிரிவுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டுச் சென்றனர். பின்னர் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையை சூறையாடிவிட்டு தீ வைத்தனர்'' என்று குற்றம்சாட்டியுள்ளது.பல்லு பிடுங்கப் போன  சிபிஐ  பல்லு போச்சு!! 
 --இந்திய பல் மருத்துவ மன்றத்தின் முன்னாள் தலைவர் மீதான வழக்கை வாபஸ் பெற சிபிஐ முடிவு.


புது தில்லி, ஜூலை 20: இந்திய பல் மருத்துவ மன்றத்தின் முன்னாள் தலைவர் அனில் கோலி மீது  தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்களில்லை என சிபிஐ ஜகா   
வாங்கியுள்ளது.

 
2011-ம் ஆண்டு செப்டம்பரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அனில் கோலி வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாகவும்  இந்திய பல் மருத்துவ மன்றத்தின்  தலைவர் பதவி வகித்தபோது முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வழக்கில் குறிபிடப்பட்டிருந்தது. அவர் தலைவராக இருந்த 2006-2010-ம் ஆண்டுகளில் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து ஆதாயம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 2010ம் ஆண்டு கோலி, தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
 ஆறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், அவரிடம் ஏராளமான சொத்துகள் இருந்தது கண்டறியப்பட்டது. குல்மொஹர் பார்க் பகுதியில் மாளிகை போன்ற வீடு, லஜ்பத் நகரில் நான்கு கடைகள், புது தில்லி சாவ்லா பகுதியில் பண்ணை வீடு போன்ற ஏராளமானவற்றில் அவர் முதலீடு செய்திருந்தார். மேலும், லஜ்பத் நகரில் ரூ.82 லட்சத்துக்கு வீடு வாங்கியதற்கான ஆவணம், ஒரு கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில், குற்றங்களை மெய்ப்பிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறியுள்ள சிபிஐ, "சொத்துகள் வாங்கியதில் முறைகேடுகள் நடக்கவில்லை என்றும், கோலி தரப்பில் சொத்துகளுக்கு போதிய கணக்கு காட்டப்பட்டதாகவும், அவரது விளக்கங்கள் திருப்தி அளித்ததாகவும்," இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இவ்வழக்கு விரைவில் முடிவுக்கு வருகிறது.

 அனில் கோலி தன் சிறப்பான செயல்பாட்டுக்காக, 1992-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2005-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2007-ம் ஆண்டு டாக்டர் பி.சி.ராய் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.