சினிமா!!

18.09.15

கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி அன்று வெளிவந்து ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்
"தனி ஒருவன்".


இந்த படத்தில் ஃபிஸிக்ஸ் (fhyzics) என்ற வணிக வள்ளுநர்கள் கொண்ட குழு 

ஒன்று இயக்குனர் மோகன்ராஜா அவர்களுடன் இணைந்து பணியாற்றியது. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக இது போன்ற ஒரு வணிக வள்ளுநர்களை கொண்ட அணி இப்படத்திற்கு தேவையான தொகுப்புகள், குற்ற பிணைப்புகள், உணர்ச்சிகளுக்கு தேவையான தொகுப்புகள், நாயகன் மற்றும் வில்லனுக்கு நடுவிலான சண்டை/ போர் நுணுக்கங்கள் ஆகிய பணிகளை செய்து கொடுத்திருக்கிறது.

- லெனின்


18.01.12

ஏஸ்கர் பிலிம்ஸ்  ரவிச் சந்திரன் தயாரிப்பில் கமலுடன் அஜித் நடிப்பதாக தமிழ் சினிமா.காம் இணையதளத்தில் சொல்வது பற்றி அஜித்தின் மேனேஜரிடம் விசாரித்தோம். 
"முழுப்    பொய்! அப்படி ஒரு பேச்சே எழவில்லை.. நேற்று கூட ரவிசாரைப் பார்த்தேன். அப்படி ஒரு திட்டம் இருந்தால் அவர் சொல்லி இருப்பார்.அவர் அந்த மாதிரி சொல்லி இருக்க மாட்டார். யாராவது வேலை  இல்லாத   ஆட்கள் எழுதுவாங்க"..என்றார்.. . அட..ஏஸ்கர் பிலிம்ஸ் ரவிச் சந்திரன் மேல ரொம்பவே நம்பிக்கை வச்சுருக்கிறார் போல.....    


01.12.11
அட, இத்தப் பாரு நய்னா..  தாங்க்ஸ் சொல்லிக்கறதிலும் வெறியாகீறாங்க...  

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்தின் 'ஒய் திஸ் கொலைவெறி டி' பாடல் "யு ட்யுப்"பில் அமோகமான வரவேற்பைப் பெற்றதற்காக தனுஷ், ஸ்ருதி, ஐஸ்வர்யா ஆகியோர் இந்த வீடியோவில் நன்றி தெரிவித்துள்ளனர்...


300811
சரி‌த்‌தி‌ர நா‌வலா‌சி‌ரி‌யர்‌ கெ‌ளதம நீ‌லா‌ம்‌பரன்‌ முதல்‌ முறை‌யா‌க தி‌ரை‌ப்‌படத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.  65க்‌கும்‌ மே‌ற்‌பட்‌ட பு‌த்‌தகங்‌களை‌ எழுதி‌ குவி‌த்‌துள்‌ள கெ‌ளதம நீ‌லா‌ம்‌பரன்‌, புது இயக்குனர் பா‌லு மலர்‌வண்‌ணன்‌ இயக்கும்  'ஒத்‌தவீ‌டு' படத்‌தி‌ல்‌, மருத்‌துவரா‌க நடி‌த்‌துள்‌ளா‌ர்‌.270811-                                         மெகாமால்!! மெகாடாக்சி!! 
ஒரு திரைப்படம் நல்லவிதமாக எடுக்கப் பட்டிருந்தாலுங்கூட சென்னை தியேட்டர்களில் கூட்டம் அமோகமாக இருக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. அதற்கு முக்கிய காரணம்: பெருகிவரும் டிராபிக் நெரிசல்!! இதனால் ஏற்படும் சிரமங்களை விடவும் தியேட்டருக்கு போவதற்காக பேரம் பேசி ஆட்டோ டாக்சி பிடிப்பதற்குள் சென்னை வாழ் மக்கள் படும் அவஸ்தைகளை தனியே ஒரு படம் எடுக்கலாம்!   தியேட்டர்களில் கூட்டம் வராமல் போக இதுவே முக்கியமான காரணமாக அமைகிறது. மக்களைக் கவரும் விதமாக புதுசு புதுசாக எதையாவது செய்யவேண்டுமே என்று மூளையை கசக்கிக் கொண்டிருக்கும் அபிராமி மெகாமால் உரிமையாளர் ராமநாதனுக்கும், அவரது துணைவியார் நல்லம்மை ஆச்சிக்கும் இது போதாதா?  அல்லல் படும் மக்களின் வசதிக்காகவே ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்! 
நீங்கள் இருக்கும்

 இடத்திலிருந்து 26476565, 26256565 என்ற எண்ணுக்கு போன் செய்தால் போதும். அங்கேயே அது வீடாக இருந்தாலும் சரி அலுவலகமாக இருந்தாலும் சரி தேடி கால்டாக்சி வந்து உங்களை அபிராமி மெகாமாலுக்கு அழைத்துச் செல்லும்.  

"அபிராமி மெகாமால் & தியேட்டர் இருக்கும் புரசைவாக்கத்திலிருந்து, அடையார் பகுதிக்கு காரை வரவழைக்கிறோம் என்று வையுங்கள். தியேட்டரிலிருந்து அடையார் வரைக்கும் வருகிற தொகையையும் நாம் தர வேண்டியிருக்குமோ என்று அஞ்சவே தேவையில்லை. நீங்கள் காரில் ஏறி அமர்கிறபோதிலிருந்துதான் மீட்டர் கணக்கு போடும்!. அதே மாதிரி திரும்ப வீட்டுக்கு வருவதற்கும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார் திருமதி.நல்லம்மை. அதுமட்டுமல்ல, தியேட்டரையே ஒரு சுற்றுலா தலமாக்கி வைத்திருக்கிறார்கள்!! பனி உலகம், விளையாட்டு உலகம், மீன் உலகம், 4டி தியேட்டர், உணவு விடுதிகள் என்று பொழுது போக்கும் சொர்க்கமாகவும் இருக்கிறது அபிராமி மெகாமால்.!!
                                                                   --தல
டிரைலர் -மங்காத்தா!!

டிரைலர்--தம்பி வெட்டோத்தி சுந்தரம்    


டிரைலர்- நினைவில் நின்றவள்